M.R.Radha

நடிகவேள் எம். ஆர். ராதா (பெப்ரவரி 211907 – செப்டம்பர் 171979) வயது-72. தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.இவருக்கு பிரேமாவதி, தனலட்சுமி, கீதா என்ற 3 மனைவியர். தமிழ் தவிர பிற மொழிப் படங்களில் நடித்திராதவர்.

எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவ வீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.ராதா நடித்த முதல் படம் ‘ராஜசேகரன்’ (1937), கடைசிப் படம் ‘பஞ்சாமிர்தம்’ (1979),சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா – நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார். அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான். பின்னர் தனலெட்சுமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கீதா என்னும் இலங்கைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் மகன்களான எம்.ஆர்.ஆர்.வாசு,ராதாரவி, மகள்களான ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.இவரது பேரன் வாசு விக்ரம் இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எம்.ஜி.ஆரைச் சுட்டு சிறைக்குச் சென்று விடுதலையான பின் மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி போன்ற நான்கு படங்களிலும் தசாவதாரம்,வேலும் மயிலும் துணை, பஞ்சாமிர்தம் போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.  இராதா நடித்தார். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார்.

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.

பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் தனது மிகுவெற்றி நாடகமான ரத்தக் கண்ணீரின் திரை வெளியீடான ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார்.ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்! 118 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். சித்தி, இருவர் உள்ளம் போன்றவை மறக்க முடியாத படங்கள். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது ‘இழந்தகாதல்‘ என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.                                                                  நன்றி:- விக்கிப்பீடியா

Image

ImageImageImageImageImage

தசாவதாரம் (1976) படத்தில் எம்.ஆர்.ராதாMR.Radha-Dhasavatharam 1976

உலகம் சிரிக்கிறது படத்தில் தனித்தும் “முதலாளி” கன்னையாவுடனும் நடிகவேள்.

Ennathe Muthalali Kannaiah-Ulagam SirikkirathuM.R.Radha

உலகம் சிரிக்கிறது படத்தில்  நடிகவேள்  காக்கா ராதாகிருஷ்ணனுடனும்Kaakkaa Radhakrishnan-MR.Radha-Ulagam Sirikkirathu

‘சபாஷ் மாப்பிளே’ [1961] படத்தில் எம்.ஆர்.ராதாMR Radha-Sabash Mappile 1961-MR Radha-Sabash Mappile 1962-

‘சித்தி’ [1966] படத்தில் எம்.ஆர்.ராதா மற்றும் விஜயநிர்மலா

ME.Radha-Vijayanirmala-Baby Rani-Chithi 1966-

‘சித்தி’ [1966] படத்தில் எம்.ஆர்.ராதா மற்றும் ரி.எம்.சாமிக்கண்ணு

ME.Radha-TM.Samikkannu-Baby Rani-Chithi 1966-1ME.Radha-TM.Samikkannu-Baby Rani-Chithi 1966-

Film: ‘Pankaaligal’ [1963] M.R.Radha, S.V.Rangarao, K.Sarangkapani

MR Radha-PANGALIKAL-MR Radha-SVR- TS Muthaih-K Sarangkapani-PANGALIKAL-

தேவரின் `கொங்கு நாட்டு தங்கம்’ [1961] படத்தில் எம்.ஆர்.ராதா

MR.Radha-Kongu Naattu Thangam 1961-MR.Radha-Kongu Naattu Thangam 1961-1

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாMR.Radha-Sengamala Theevu 1962-MR.Radha-Sengamala Theevu 1962-1

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் வி.கே.ராமசாமி MR.Radha-VKR-Sengamala Theevu 1962-MR.Radha-VKR-Sengamala Theevu 1962-1

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் ஆனந்தன், வி.கே.ராமசாமி  

MR.Radha-CL.Anandan-VKR-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் ரி.பி.முத்துலக்ஷ்மி,TP.Muthulakshmi-MR.Radha-Sengamala Theevu 1962-2 TP.Muthulakshmi-MR.Radha-Sengamala Theevu 1962-1 TP.Muthulakshmi-MR.Radha-Sengamala Theevu 1962-

வேலும் மயிலும் துணை [1979] படத்தில் எம்.ஆர்.ராதா MR.Radha-Velum Mayilum Thunai 1979-

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா MR.Radha-Kalyaniyin Kanavan 1963-MR.Radha-Kalyaniyin Kanavan 1963-1MR.Radha-Kalyaniyin Kanavan 1963-2MR.Radha-Kalyaniyin Kanavan 1963-3MR.Radha-Kalyaniyin Kanavan 1963-5

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் எஸ்.வி.ரங்காராவுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதா

MR.Radha-SV.Rangarao-Kalyaniyin Kanavan 1963-MR.Radha-SV.Rangarao-Kalyaniyin Kanavan 1963-1MR.Radha-SV.Rangarao-Kalyaniyin Kanavan 1963-2MR.Radha-SV.Rangarao-Kalyaniyin Kanavan 1963-3

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் சீதாலக்ஷ்மியுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதாSeethalakshmi-MR.Radha-Kalyaniyin Kanavan 1963-2

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதாTR.Ramachandran-MR.Radha-Kalyaniyin Kanavan 1963-TR.Ramachandran-MR.Radha-Kalyaniyin Kanavan 1963-1

’தாயைக் காத்த தனயன்” [1963] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் எம்.ஆர்.ராதாMRR.Vasu-MR.Radha-Thayai Katha Thanayan-

’தாயைக் காத்த தனயன்” [1963] படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜி.சகுந்தலா,  எம்.ஆர்.ஆர்.வாசு

MRR.Vasu-G.Sagunthala-MR.Radha-Thayai Katha Thanayan-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜெமினி கணேசன் MR.Radha-Gemini-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் நாகேஷ்,எம்.ஆர்.ராதாவுடன் MR.Radha-Nagesh-Aayiram Rupai 1964-MR.Radha-Nagesh-Aayiram Rupai 1964-1MR.Radha-Nagesh-Aayiram Rupai 1964-2MR.Radha-Nagesh-Aayiram Rupai 1964-3

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினி,அசோகன், எம்.ஆர்.ராதாவுடன் 

MR.Radha-Ragini-Ashokan-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராகினி, அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன், எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன்

MR.Radha-Ragini-CS.Pandian-Kottappuli Jayaraman-Ashokan-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நாகேஷ்,அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன், சி.எஸ்.பாண்டியன்MR.Radha-Nagesh-Ashokan-Aayiram Rupai 1964-50

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து எம்.ஆர்.ராதா

MR.Radha-Kumudham 1961-1MR.Radha-Kumudham 1961-

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து சி.எஸ்.பாண்டியனுடன் எம்.ஆர்.ராதாMR.Radha-CS.Pandiyan-Kumudham 1961-

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து பி.எஸ்.சரோஜாவுடன் எம்.ஆர்.ராதாMR.Radha-BS.Saroja-Kumudham 1961-

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து சீதாலட்சுமி, பி.டி.சம்பந்தம், சி.எஸ்.பாண்டியனுடன் எம்.ஆர்.ராதாMR.Radha-PD.Sampantham-Seethalakshmi-CS.Pandiyan-Kumudham 1961-55

“காட்டு ரோஜா” 1963 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் பி.எஸ்.சரோஜாMR.Radha-Kattu Roja 1963-BS.Saroja-MR.Radha-Kattu Roja 1963-

“காட்டு ரோஜா” 1963 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

MR.Radha-SSR-Kattu Roja 1963-MR.Radha-SSR-Kattu Roja 1963-1

“காட்டு ரோஜா” 1963 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் வி.கே.ராமசாமி, தங்கவேலு MR.Radha-Thangavelu-Kattu Roja 1963-MR.Radha-Thangavelu-VKR-Kattu Roja 1963-

“காட்டு ரோஜா” 1963 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் மனோகர், எஸ்.எஸ்.ராஜேந்திரன்

MR.Radha-Manokar-SSR-Kattu Roja 1963-62

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் எம்.என்.ராஜம், MR.Radha-Rathakkanneer 1956-3MR.Radha-Rathakkanneer 1956-1MR.Radha-Rathakkanneer 1956-MR.Radha-Rathakkanneer 1956-5MR.Radha-Rajam-Rathakkanneer 1956-1MR.Radha-Rajam-Rathakkanneer 1956-68

“இருவர் உள்ளம்” 1963 படத்தில்  எஸ்.ராமராவுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதா MR.Radha-Iruvar ullam 1963-1MR.Radha-Iruvar ullam 1963-MR.Radha-S.Ramarao-Iruvar ullam 1963-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதா MR.Radha-TP.Muthulakshmi-Iruvar ullam 1963-MR.Radha-TP.Muthulakshmi-Iruvar ullam 1963-1

“இருவர் உள்ளம்” 1963 படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன், எஸ்.ராமராவுடன் நடிகவேள் எம்.ஆர்.ராதா Kottappuli Jayaraman-MR.Radha-S.Ramarao-Iruvar ullam 1963-Kottappuli Jayaraman-MR.Radha-S.Ramarao-Iruvar ullam 1963-2Kottappuli Jayaraman-MR.Radha-S.Ramarao-Iruvar ullam 1963-76

’’பட்டினத்தார்’’ 1962 படத்தில் சி.கே.சரஸ்வதியுடன் எம்.ஆர்.ராதா MR.Radha-Pattinathar 1962-1MR.Radha-Pattinathar 1962-MR.Radha-CK.Saraswathi-Pattinathar 1962-1MR.Radha-CK.Saraswathi-Pattinathar 1962-180

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாMR.Radha-Padithaal Mattum Pothuma 1962-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-1MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-2

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் சி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.ராதாவுடன் MR.Radha-CK.Saraswathi-Padithaal Mattum Pothuma 1962-CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-1CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன்  சிவாஜிகணேசன் MR.Radha-Sivaji-Padithaal Mattum Pothuma 1962-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் சந்திரன்பாபுChandran Babu-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-1Chandran Babu-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில்  எம்.ஆர்.ராதாவுடன் சி.கே.சரஸ்வதி,  சந்திரன்பாபு

Chandran Babu-CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-

“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன், மனோரமா, சி.கே.சரஸ்வதி

 CK.Saraswathi-MR.Radha-Padithaal Mattum Pothuma 1962-1A91

”மாடப்புறா” 1962 படத்தில் எம்.கே.முஸ்தபாவுடன் எம்.ஆர்.ராதா  mr-radha-madapura-1962mr-radha-madapura-1962-1mr-radha-madapura-1962-2mr-radha-m-k-mustapha-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் என்.எஸ்.நடராஜனுடன் எம்.ஆர்.ராதா  mr-radha-ns-nadarajan-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் எம்.ஆர்.ராதா  mr-radha-tk-balachandran-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் குலதெய்வம் ராஜகோபாலுடன் எம்.ஆர்.ராதா  mr-radha-kuladeivam-v-r-rajagopal-madapura-196298

“பாகப்பிரிவினை” 1959 படத்தில் சி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.ராதாmr-radha-bhaga-piravinai-1959-1mr-radha-bhaga-piravinai-1959mr-radha-ck-saraswathi-bhaga-piravinai-1959

“பாகப்பிரிவினை” 1959 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் எம்.ஆர்.ராதா

mr-radha-ts-balaiah-bhaga-piravinai-1959

“பாகப்பிரிவினை” 1959 படத்தில் தாம்பரம் லலிதாவுடன் எம்.ஆர்.ராதா

mr-radha-thambaram-lalitha-bhaga-piravinai-1959

“பாகப்பிரிவினை” 1959 படத்தில்  எம்.ஆர்.ராதா, எஸ்.ராமராவுடன்   mr-radha-s-ramarao-bhaga-piravinai-1959-1mr-radha-s-ramarao-bhaga-piravinai-1959105

”வண்டிக்காரன் மகன்” 1978 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் எஸ்.ஏ.அசோகன், காக்கா ராதாகிருஷ்ணன்

MR.Radha-Vandikkaaran Magan 1978-MR.Radha-Asokan-Vandikkaaran Magan 1978-Kaka-MR.Radha-Vandikkaaran Magan 1978-108

Advertisements

2 comments on “M.R.Radha

 1. – R.P.ராஜநாயஹம்

  தமிழ் திரை நகைச்சுவை நடிகர்களை உலக தரத்துடன் கண்டது.

  ஆனால் வில்லன் நடிகர்கள் பற்றி அப்படி சொல்வதற்கில்லை.

  காமடி,வில்லன் நடிப்பு இரண்டிலும் கலக்கு கலக்கு என்று கலக்கிய
  எம் .ஆர் .ராதா, டி.எஸ் .பாலையா இவர்களை வில்லன் நடிகர் லிஸ்டில் சேர்க்க முடியாது.

  ஆனால் ஐம்பதுகளில் வந்த பிற வில்லன்கள்

  பி.எஸ். வீரப்பா சரித்திர படங்களுக்கு பொருத்தமானவர். நிஜமாகவே அப்படி படங்களில் அவர் பக்கத்தில் யாரும் நிற்க முடியாது.வஞ்சிகோட்டை வாலிபன், மஹாதேவி, நாடோடி மன்னன் ஆகிய படங்கள் நல்ல உதாரணங்கள்.
  ஆனால் சமூக படங்களுக்கு சற்றும் பொருந்த மாட்டார்.

  நம்பியார் நாற்பதுகளில் காமெடியன், ஐம்பதுகளிலிருந்து வில்லன்.

  மனோகர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து வில்லன் ஆனவர்.

  சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின் வில்லனாக நடிக்கும் போதே கதாநாயகனாகவும் நடித்து கடைசியில் கோமாளி யானவர் அசோகன்.

  நம்பியார்,அசோகன், மனோகர் மூவருமே ரொம்ப stereo டைப் . கொஞ்சமும் நடிப்பு பாணி மாறியதே கிடையாது.

  அசோகன் மிகையான பாவ்லா நடிப்பு தான். காட்டு கத்தல். கதாநாயகனாக பார்க்க சகிக்காது.
  குணச்சித்ர நடிப்பில் அசத்தியதாக பலரும் அபிப்பராயபடுவார்கள்.
  “உயர்ந்த மனிதன்” படம் இப்போது பார்த்தால் அவர் நடிப்பு சிரிப்பை உண்டாக்குகிறது. ஆனால் பாவ்லா வேலை செய்து பெரிதாய் நடிப்பது போல மிரட்டுவார். பல நல்ல டி .எம்.எஸ் பாடல்கள் இவருக்கு அமைந்தது.ஒரே பாணி யில் நடித்தவர்.
  ” நான்” பட வில்லன் ரோல் தான் பின்னால் இவர் காமெடி பண்ண உதவியது.
  இரவும் பகலும் படத்தில் சொந்த குரலில் அசோகன் பாடிய
  ” ஏறந்தவனை சுமந்தவனும் எறந்துட்டான் ” ஏகாந்தமான சூழலில் கேட்டால் மனதை தொடும் தத்துவபாடல்.

  நாடக காவலர் ஆர் .எஸ் . மனோகர் பாவம் தோள்களை குலுக்கிக்கொண்டு வசனம் ஒரே பாணியில் பேசிக்கொண்டு வாழ்நாளை ஓட்டியவர்.
  ஒ .ஏ .கே . தேவர் கணீரென்ற குரல் .ஆனால் ஜெய் சங்கர் பட வில்லன் ரோல் தான் பெரும்பாலும். சரித்திர படங்களிலும் பெரிய சாதனை செய்ய முடியாமல் போனவர்.
  எஸ்.வி ராம தாஸ் இரண்டாம் தர கற்பழிப்பு நடிகர்.

  பின்னால் வந்த ஸ்ரீகாந்த் பாவம்! அவரும் பெரிய வில்லன் கிடையாது.

  எம் .ஆர் ராதா தான் தனி பாணியில் வெளுத்து வாங்கியவர் . இவரிடம் ஒரு வக்கிரம் sadismஅது வேறெந்த வில்லனிடமும் அந்த காலத்தில் கிடையாது.

  அதனால் தான்இப்போதும் காலத்தை வென்ற கலைஞன் .

  தமிழில் எம்.ஆர் .ராதாவுக்கு பின் வந்த உண்மையான வில்லன் சத்யராஜ் .ராதாவிடம் இருந்த வக்கிரம் இவரிடம் மட்டுமே இயல்பாய் அமைந்தது.

  நாசர் ஒரு நல்ல வில்லன் தான். வில்லன் மட்டுமல்ல.நல்ல நடிகர்.

  அப்புறம், ரகுவரன் பிரகாஷ் ராஜ் நல்ல பிரமாதமான வில்லன்கள்.

  ரகுவரன் ,பிரகாஷ்ராஜ் போல
  நம்பியாரோ, அசோகனோ, மனோகரோ திறமை காட்டி நடித்ததே இல்லை.

  ரகுவரன், பிரகாஷ் ராஜ் இருவரும் நல்ல குணசித்திர நடிகர்கள் கூட.

  ரகுவரன் பற்றி இன்னும் இரண்டு வார்த்தை.

  தமிழ் திரையை பொறுத்தவரை
  கமல் ஹாசன், ரகுவரன் நடிப்பில் ஜீனியஸ் வகையை சேர்ந்தவர்கள்.

  ரகுவரன் – எம் ஆர் ராதா, எஸ் .வி ரங்காராவ் போல Scene stealer!

  இந்த வகையிலும் நம்பியார்,அசோகன்,மனோகர் அடிபட்டு போகிறார்கள்.

  ரகுவரன், பிரகாஷ் ராஜ் இருவருக்கும் உரை போட காண மாட்டார்கள் இந்த மூன்று அந்த கால வில்லன்களும்.

  ராதா பாணியை காமெடியில் விவேக் முயன்று பார்த்து வெற்றி பெற்று பத்மஸ்ரீயாகி விட்டார் .

  மணிவண்ணன் கூட ராதா பாணி காமெடி தான்.

  சுருளிராஜனும், கவுண்டமணியும் சுயம்புகள்.
  தமிழ்படகாமெடியில் இவர்களுடன் ஒப்பிட யாருமே கிடையாது. நாகேஷ் பாணிக்கு முற்றிலும் மாறான அபூர்வ வகை நகைச்சுவை நடிகர்கள் சுருளி ராஜனும் கவுண்டமணியும்.

  சுருளி பற்றி சமீபத்தில் ரஜினி உயர்வாக தன்னை பேட்டி எடுத்த விவேக்கிடம் ” நீங்களெல்லாம் ரொம்ப ஹோம் ஒர்க் செய்து விட்டு நடிக்கிறீர்கள். ஆனால் சுருளி சும்மா எது செய்தாலும் பிரமாதமாயிருக்கும்.” என்று சொன்னார்.

  ரொம்ப நாளைக்கு பிறகு காமெடி தமிழில் சரியாக இப்போது சில வருடம் முன் அமைந்தது.

  வடிவேலு – விவேக் கடந்த பத்து வருடமாக காமெடி வெடி வெடித்ததில் காணாமல் போன சிரிப்பு நடிகர் யார் தெரியுமா.

  வடிவேலு, விவேக் ஆர்ப்பாட்டத்தில் அன்று காணாமல் போய் விட்ட காமெடியன்
  ஜனக ராஜ்!

  வில்லனுக்கும் காமெடிக்கும் என்றுமே உதாரண புருஷர்

  எம்.ஆர் .ராதா !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s