K.D.Santhanam

கே.டி.சந்தானம்– தமிழ்த் திரையுலகில் ஓர் அற்புதமான குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாது இவர் ஒரு அற்புதமான கவிஞர். ரகசிய போலீஸ் 115, ஆடிப்பெருக்கு, கண்காட்சி போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கலங்கரை விளக்கம், சபாஷ் மீனா, கைராசி, பலே பாண்டியா, வா ராஜா வா, எங்கப்பாட்டன் சொத்து, காரைக்கால் அம்மையார்  போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பழமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அன்பர் திரு ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் அவரது http://rprajanayahem.blogspot.in/ என்ற வலைத்தளத்தில் கே.டி.சந்தானம் அவர்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் ‘ பாட்டில் ‘அங்கே என்னம்மா சத்தம் ‘ என கேட்டு கடைசியில் தானும் ‘ ஆஹா என்ன பொருத்தம்’ எனபரவசமாகும் பெரியவரை யாரோ துணை நடிகர் என்று தான் எல்லோரும் நினைப்பர். ஆனால் அவர் ஒரு கவிஞர் . கவிஞர் கே .டி . சந்தானம் .
‘காவேரி ஓரம் கவி சொன்ன பாடல் கதை சொல்லி நான் பாடவா ,
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா ‘
என்ற சுசிலா பாடிய ‘ ஆடிபெருக்கு ‘ படப்பாடலை ஏ .எம் .ராஜா இசைக்கு எழுதியவர் .
‘கண்காட்சி ‘என்ற ஏ பி நாகராஜன் படத்தில் குன்னக்குடிவைத்யநாதன் இசையில் கே .டி .சந்தானம் எழுதிய பாடல் தொகையறா ஏபிநாகராஜனே தன் மென்மையான குரலில் சொல்வார் .
‘வெண்ணிலவை குடை பிடித்து , வீசு தென்றல் தேர் ஏறி
மென் குயில் தான் இசை முழங்க ,மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி , கனகமணி பொற்பாவை
அன்னநடை ரதியுடனே , அழகு மதன் வில்லேந்தி
தன்முல்லை , மான் , தனிநீலம் , அசோகம் எனும்
வண்ண மலர் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே !’
ஏ பி நாகராஜன் முடித்ததும் சந்தபாடல் ஆரம்பிக்கும் .
“அனங்கன் அங்கஜ்ஜன் , அன்பன் , வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா , மன்னுயிர்க்கின்பம் வழங்கும் உன் கதை சொல்லவா ?
கதம்பம் , செண்பகம் தங்கும்ம் கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயற்கண்ணியே , அன்பெளுந்து அங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே !”
கவிஞர் கே டி சந்தானம் பாசமலர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் . தர்ம சங்கடம் என்ற உணர்வை அழகாக பாசமலரில் வெளிப்படுத்துவார் .
இவரை கதாநாயகியின் தந்தையாக இரண்டு காட்சிக்கு நடிக்க தேர்ந்தெடுத்திருந்தார்கள் . முருகாலயா ஸ்டூடியோ வில் ஷூட்டிங் .நான் அந்த படத்தின் உதவி இயக்குனர்.
அவருக்கு மேக்கப் போடும்போது நான் அவரிடம் சென்று அவர் பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தேன் .
அந்த நேரத்தில் மற்றொரு உதவி இயக்குனர் வந்து ‘ உங்கள் பேர் என்ன சார் ?’ என பேடை வைத்துக்கொண்டு எழுத நின்றான் . அவர் பதில் சொல்லுமுன் நான் ‘ கவிஞர் கே டி சந்தானம் ‘ என்றவுடன் அவன் மண் மாதிரி எழுதிக்கொண்டு திரும்பி போனான் . தொடர்ந்து அவர் சொன்னார் . ‘ இந்த தலைமுறைக்கு என்னை யாரென்று தெரியாது . நீ தெரிந்து வைத்து என் பாடல்கள் பற்றி பேசுவது ஆச்சரியாமாய் இருக்கிறது . இதே மாதிரி பல வருடங்களுக்கு முன் நீ பேசுவது போலவே என் பாடல்கள் பற்றி ‘அம்பிகாபதி ‘ படத்தின் போது ஒரு பையன் என்னிடம் பேசினான் . கண்ணதாசனின் அண்ணன் மகன் . ‘ அப்புச்சி பாட்டில் கூட உங்கள் சந்தம் மாதிரி வருவதில்லையே ‘ – ஆச்சரியபட்டான் . அந்த பையன் பஞ்சு அருணாசலம் மாதிரி நீயும் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவாய் ‘ –
என்னை ஆசிர்வதித்து இப்படி சொன்னார் .
அவரிடம் பேசிய போது மேலும் பல விஷயங்கள் பற்றி சொன்னார் . ‘அந்த காலத்தில் நாடக கம்பெனியில் சேர சிவாஜி கணேசன் , காக்கா ராதாகிருஷ்ணன் இருவரையும் பாலகர்களாக அவர்கள் இருவரின் தாயார்கள் கூட்டி வந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது’ என்றார் .
பி டி சம்பந்தம் தான் எல்லோருக்குமே ஆசிரியர் . அவர் ரொம்ப கண்டிப்பானவர் . என் .எஸ் .கிருஷ்ணனுக்கே அவர் தான் ஆசிரியர் . என்ற இந்த செய்தியை அவர் தான் என்னிடம் முதலில் சொன்னார் .
எம்ஜியார் படம் ரகசிய போலிஸ் 115 ல் நடித்த பின் அந்த காலத்தில் இவர் மார்கெட் காய்கறி வாங்க போனால் இவரை பின்தொடர்ந்து சிறு பிள்ளைகள் கூட்டமாக ” என்ன பொருத்தம் , ஆஹா என்ன பொருத்தம் ” என்று பாடிகொண்டே வருவார்களாம்!

கே.டி.சந்தானம்  நடித்த திரைப்படங்களின் பட்டியல்:-

 1. ”ராஜ ராஜ சோழன்” [1973]
 2. ”எங்கள் குடும்பம் பெரிசு” [1958]
 3. “கவலையில்லாத மனிதன்” [1960]
 4. ”சுதர்ஸன்” [1951]
 5. ”பூவும் பொட்டும்” [1968]
 6. “பாலும் பழமும்” [1961]
 7. “அகத்தியர்” [1972]
 8. “தெய்வத்திருமணங்கள்” ” [1981]
 9. “கண்காட்சி” [1971]
 10. ‘ஏழைப்பங்காளன்’ [1963]
 11. “சங்கே முழங்கு” [1972]
 12. குலமா குணமா’ [1971]
 13. திருமலை-தென்குமரி [1970]

வா ராஜா வா [1969]

K.D.SANTHANAM-VAA RAJA VAA-1969-4 K.D.SANTHANAM-VAA RAJA VAA-1969-3 K.D.SANTHANAM-VAA RAJA VAA-1969-1 K.D.SANTHANAM-VAA RAJA VAA-1969

வா ராஜா வா படத்தில் மாஸ்டர் பிரபாகரனுடன் கே.டி.சந்தானம்K.D.SANTHANAM-VAA RAJA VAA-1969-2

வாணி ராணி படத்தில் கே.டி.சந்தானம்

KD.Santhanam-Vani Rani 1974-2

KD.Santhanam-Vani Rani 1974

எங்கப்பாட்டன் சொத்து [1972] படத்தில் ராஜ் கோகிலாவுடன் சந்தானம்KD.Santhanam-Rajkogila-Enga Paattan Sothu-1975-1 KD.Santhanam-Rajkogila-Enga Paattan Sothu-1975-

காரைக்கால் அம்மையார் [1973] படத்தில் கே.டி.சந்தானம்

KD.Santhanam-Karaikkal Ammaiyar-1973-

ரகசிய போலீஸ் 115 படத்தில்  எம்.ஜி.ஆர் மற்றும் கவிஞர் கே.டி.சந்தானம்

KD.Santhanam-MGR-Ragasiya Police 115-1

ரகசிய போலீஸ் 115 படத்தில்  நாகேஷ், எம்.ஜி.ஆர் மற்றும் கவிஞர் கே.டி.சந்தானம் KD.Santhanam-Nagesh-MGR-Ragasiya Police 115-

ரகசிய போலீஸ் 115 படத்தில் நாகேஷ் மற்றும் கவிஞர் கே.டி.சந்தானம் KD.Santhanam-Nagesh-Ragasiya Police 115- KD.Santhanam-Nagesh-Ragasiya Police 115-1 KD.Santhanam-Ragasiya Police 115-

ரகசிய போலீஸ் 115 படத்தில்  ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் கவிஞர் கே.டி.சந்தானம் KD.Santhanam-MGR-Ragasiya Police 115-

திருமலை-தென்குமரி [1970] படத்தில் சீதாலக்‌ஷ்மியுடன் கே.டி,சந்தானம்KD.Santhanam-Seethalakshmi-Thirumalai Thenkumari 1970-1

குலமா குணமா’ [1971] படத்தில்  கே.டி.சந்தானம்K D Santhanam-KULAMA GUNAMA 1971-

குலமா குணமா’ [1971] படத்தில் கே.டி.சந்தானத்துடன் சிவாஜிகணேசன் K D Santhanam-Sivaji-KULAMA GUNAMA 1971-

குலமா குணமா’ [1971] படத்தில்  கே.வி.சீனிவாசன், கே.டி.சந்தானத்துடன் எம்,என்,நம்பியார்

K D Santhanam-K V Sreenivasan-Nambiyar-A K Veerasamy-KULAMA GUNAMA 1971-K V Sreenivasan-K D Santhanam-KULAMA GUNAMA 1971-

குலமா குணமா’ [1971] படத்தில்  ஏ.கே.வீராச்சாமி, கே.வி.சீனிவாசன், கே.டி.சந்தானத்துடன் எம்,என்,நம்பியார்K V Sreenivasan-Nambiyar-A K Veerasamy-KULAMA GUNAMA 1971-K V Sreenivasan-K D Santhanam-Nambiyar-A K Veerasamy-KULAMA GUNAMA 1971-1K V Sreenivasan-K D Santhanam-Nambiyar-A K Veerasamy-KULAMA GUNAMA 1971-

‘ஏழைப்பங்காளன்’ [1963] படத்தில் ஜெமினிகணேசன், கே.மாலதியுடன் கே.டி.சந்தானம்

K D Santhanam-EZHAI PANGALAN 1963- K D Santhanam-EZHAI PANGALAN 1963-1 K D Santhanam-Gemini-EZHAI PANGALAN 1963- K Malathi-K D Santhanam-EZHAI PANGALAN 1963-

“கண்காட்சி” [1971] படத்தில் கே.டி.சந்தானம்KD.Santhanam-Kankatchi 1971-KD.Santhanam-Kankatchi 1971-1KD.Santhanam-Kankatchi 1971-2

“கண்காட்சி” [1971] படத்தில் சுருளிராஜனுடன் கே.டி.சந்தானம்KD.Santhanam-Surulirajan-Kankatchi 1971-

“கண்காட்சி” [1971] படத்தில் ரி.என்.சிவதாணுவுடன் கே.டி.சந்தானம்TN.Sivathanu-KD.Santhanam-TKS.Nadarajan-Kankatchi 1971-TN.Sivathanu-KD.Santhanam-TKS.Nadarajan-Kankatchi 1971-1TN.Sivathanu-KD.Santhanam-TKS.Nadarajan-Kankatchi 1971-2

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் கே.டி.சந்தானம் KD.Santhanam as Singarayan-Gomathiyin Kathalan 1955-1KD.Santhanam as Singarayan-Gomathiyin Kathalan 1955-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் பி.டி.சம்பந்தம், கே.சாயிராமனுடன் கே.டி.சந்தானம் PD.Sampandham-KD.Santhanam-K.Sairam-SS.Sivasooriyan-Gomathiyin Kathalan 1955-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் கே.டி.சந்தானம் KD.Santhanam-Sangae Muzhangu 1972-KD.Santhanam-Sangae Muzhangu 1972-1KD.Santhanam-Sangae Muzhangu 1972-3

“அகத்தியர்” 1972 படத்தில் கே.டி.சந்தானம், சீதாலட்சுமியுடன் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்kd-santhanam-seethalakshmi-agathiyar-1972kd-santhanam-seethalakshmi-sirkazhi-govindarajan-agathiyar-1972“தெய்வத்திருமணங்கள்” ” 1981 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரியுடன் கே.டி.சந்தானம் kd-santhanam-deiva-thirumanangal-1981-1kd-santhanam-deiva-thirumanangal-1981kd-santhanam-vijayakumari-deiva-thirumanangal-1981kd-santhanam-vijayakumari-deiva-thirumanangal-1981-1

“பாலும் பழமும்” 1961 படத்தில் ஸ்ரீராமுடன் கே.டி.சந்தானம் KD.Santhanam-Palum Pazhamum 1962-1KD.Santhanam-Palum Pazhamum 1962-KD.Santhanam-Sriram-Palum Pazhamum 1962-

“பாலும் பழமும்” 1961 படத்தில் பாலையாவுடன் கே.டி.சந்தானம் KD.Santhanam-TS.Balaiah-Palum Pazhamum 1962-

“பாலும் பழமும்” 1961 படத்தில் சரோஜா தேவியுடன் கே.டி.சந்தானம் KD.Santhanam-B.Saroja Devi-Palum Pazhamum 1962-KD.Santhanam-B.Saroja Devi-Palum Pazhamum 1962-153

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் எஸ்.வி.ரங்காராவுடன் கே.டி.சந்தானம்KD.Santhanam-Poovum Pottum 1968-KD.Santhanam-SVR-Poovum Pottum 1968-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் ஆர்.முத்துராமன், நாகேஷுடன் கே.டி.சந்தானம்KD.Santhanam-Muthuraman-Poovum Pottum 1968-KD.Santhanam-Nagesh-Poovum Pottum 1968-KD.Santhanam-Nagesh-Muthuraman-Poovum Pottum 1968-58

”சுதர்ஸன்” 1951 படத்தில் பி.கண்ணாம்பாவுடன் கே.டி.சந்தானம்KD.Santhanam-P.Kannamba-Sudharsan 1951-59

“கவலையில்லாத மனிதன்” 1960 படத்தில் ரி.ஆர்.மகாலிங்கம் , ரி.எஸ்.பாலையாவுடன் கே.டி.சந்தானம்KD.Santhanam -Kavalai Illatha Manithan 1960-KD.Santhanam-TR.Mahalingam-Kavalai Illatha Manithan 1960-KD.Santhanam-TS.Balaiah -Kavalai Illatha Manithan 1960-62

”எங்கள் குடும்பம் பெரிசு” 1958 படத்தில் குலதெய்வம் வி.ஆர்.ராஜகோபாலுடன் கே.டி.சந்தானம்

KD.Santhanam-Engal Kudumbam Perisu 1958-KD.Santhanam-Kuladeivam-Engal Kudumbam Perisu 1958-64

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், எஸ்.வி.சகஸ்ரநாமத்துடன் “ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் கே.டி.சந்தானம்KD.Santhanam-Raja Raja Cholan 1973-KD.Santhanam-Raja Raja Cholan 1973-1KD.Santhanam-Seergazhi-Sahasranamam-Raja Raja Cholan 1973-

சிவாஜி கணேசனுடன் “ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் கே.டி.சந்தானம்KD.Santhanam-Sivaji-Raja Raja Cholan 1973-

மாஸ்டர் சேகருடன் “ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் கே.டி.சந்தானம்KD.Santhanam-Master Sekar-Raja Raja Cholan 1973-69

ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களுக்கு எனது நன்றி.

Advertisements

10 comments on “K.D.Santhanam

 1. This will be his centenary year. This Sivaji’s Mentor was born in 16th Aug 1917. we have also released a book on him recently. The book was written by Akila Vijayakumar and was published by Manivasagar Publishers. This books contains the list of songs written by him and also some trivia around his journey in Cinema industry. It will be great if Nadigar Sangam recognizes his efforts and dedication. They have to come together to celebrate his centenary year.

 2. நன்றி_நன்றி💐
  அகிலா விஜயகுமார் தனது கடின
  உழைப்பால் உருவாக்கிய படைப்பு. சந்தானம் ஐயா அவர்களின் பாடல்களை தொகுத்து வழங்க பெரும் முயற்சி எடுத்து கொண்டு அனைத்து ரசிகர்களின் பாராட்டைப்
  பெற்றார். அணிந்துரை எழுதியவர்களில் நானும் ஒருவன்.

 3. தூர்தர்ஷன் பொதிகை காலைத்தென்றல் நம் விருந்தினராக
  R.P. ராஜநாயஹம்——–18-04-2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s