Aisary Velan

இவரது இயற்பெயர் கதிர்வேலன். நடிக்க வருவதற்கு முன் மெட்டல் பாக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக குமாஸ்தாகவும் வேலை செய்துள்ளார். இவ்வேலைகளில் விருப்பமில்லாமல் கலையார்வம் காரணமாக நாடக மாமணி எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், யாதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை ஆகியோருடைய நாடகக் கம்பெனியில் மாணவனாக இணைந்தார். சுமார் 50 நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துப் பயிற்சி பெற்ற கதிர்வேலன், தானே தனித்து நாடகங்கள் எழுதவும் தயாரானார்.

விருதை ராமசாமி எழுதிய ‘எங்குமே எதிர்ப்பு’ என்ற நாடகத்தில் 1956-ஆம் ஆண்டில் சென்னை, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடித்தார். நகைச்சுவை மாமணி ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் இந்நாடகத்தைத் தலைமையேற்று நடத்தினார். நாடகத்தை ரசித்துப் பார்த்து சிரித்து மகிழ்ந்த ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் “ அது சரி, “ அது சரி” என்று குறுக்குப் பேச்சை நாடகம் முழுவதும் தூவி நாடக வெற்றிக்குக் காரணமாயிருந்த ‘ஐசரி வேலனை’ அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்க கதிர்வேலன் என்று இவர் கூற, ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் தனக்கே உரிய பாணியில் மேடையில் சிரித்தவாறு “ அது சரி “ வேலன் என்று கதிர்வேலனைக் குறிப்பிட்டார். இந்த ஒரே நாடகத்தில் அவரது பெயர் “ அது சரி “ வேலன் என்று மாறியது. “ அது சரி “ வேலன் குறுகிய காலத்திற்குள் குறுகி மருவி “ ஐசரி “ வேலன் ” என்றாகிவிட்டது. தமிழ் சினிமாவுக்குள் நுழைய கதிர் வேலன் ஐசரி வேலனாக நுழைய காலம் கனிந்துவிட்டது.

நடிகர் அசோகன் இவரது நாடகங்களைப் பார்வையிட வருவார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட நடிகர் அசோகனே படத்தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்து சினிமாவுக்குள் பிரவேசிக்கச் செய்தார். ’ஐந்து லட்சம்’ படத்தில் அறிமுகமானார். எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றவர் ஐசரி வேலன். எம்.ஜி.ஆரும் தான் நடித்த பல படங்களில் ஐசரி வேலனுக்கு வாய்ப்பளித்தார். எம்.ஜி.ஆர் ஆட்சியமைத்த பின்னரும் இரானுவ வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 25 படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் அதிகமாக வேரூன்றாது போனவர். காரணம் அவருக்கு அமைந்த கதாபாத்திரங்கள் ‘லாயிஸ்டிக்’ காமெடியாக இருந்ததுதான்.

இவர் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒரே நகைச்சுவை நடிகர் என்ற பெருமைக்குரியவர். ஜூன் 1987 அன்று இவர் காலமானார்.

பல்லாவரம் மற்றும் ஆவடியில் அமைந்துள்ள “ வேல் டெக் “ கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஐசரி கணேஷ் இவரது மகனாவார்.

இவர் நடித்த படங்கள்:-

 • ஐந்து லட்சம் [1969]
 • சிநேகிதி [1970]
 • நூறாண்டு காலம் வாழ்க [1970]
 • ரிக்‌ஷாக்காரன் [1971]
 • இதயவீணை [1972]
 • மணிப்பயல் [[1973]
 • வீட்டுக்கு வந்த மருமகள் [1973]
 • உழைக்கும் கரங்கள்
 • கருந்தேழ் கண்ணாயிரம்
 • நேற்று இன்று நாளை [1974]
 • அம்மன் அருள்
 • பல்லாண்டு வாழ்க [1975]
 • இதயக்கனி [1975]
 • புனித அந்தோணியார் [1977]
 • நவரத்தினம் [1976]
 • மாங்குடி மைனர் [1978]
 • மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் [1978]
 • அலங்காரி [1979] (இப்படத்தில் மனோரமா கதாநாயகி)
 • ஒத்தையடிப் பாதையிலே [1980]
 • எச்சில் இரவுகள் [1982]
 • நீதிக்குத் தலைவணங்கு
 • பஞ்சாமிர்தம்
 • ஸ்ரீ காஞ்சி காமாட்சி
 • சிம்லா ஸ்பெஷல்
 • இராணுவ வீரன்
 • பொன் மகள் வந்தாள்
 • கன்னித்தீவு

நெஞ்சில் நிறைந்தவன் இப்படம் முழுமையடையாமல் இடை நின்றது.

நன்றி:- திருநின்றவூர் திரு.ஜி.சந்தான கிருஷ்ணன் மற்றும் ‘ நிழல் ‘ இதழ்.

ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் ஐசரி வேலன் தனித்தும் தேங்காய் சீனிவாசனுடனும்

ImageImage

Image  Image

தேங்காய் சீனிவாசனுடன் ஐசரி வேலன்

Image

படம்:- இராணுவ வீரன்.

 Aisary Velan - Raanuvaveeran (2) Aisary Velan - Raanuvaveeran

படம்:- இராணுவ வீரன். ஸ்ரீதேவி, ஐசரி வேலன், ரஜனிகாந்த், தேங்காய் சீனிவாசன்

Sri Devi - Aisary Velan - Rajani - Raanuvaveeran (7)Sri Devi - Aisary Velan - Rajani - Raanuvaveeran (1)

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஐசரிவேலன்

Aisary Velan-Murthy-Karunthel Kannayiram 1972-

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் மனோரமா, தேங்காய் சீனிவாசன்,வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஐசரிவேலன்

Aisary Velan-Murthy-Manorama-Thenkai-Karunthel Kannayiram 1972- Aisary Velan-Murthy-Manorama-Thenkai-Karunthel Kannayiram 1972-1

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐசரி வேலன்Aisary Velan-Vijayakumar-Mangudi Minor 1978-1Aisary Velan-Vijayakumar-Mangudi Minor 1978-2

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஸ்ரீபிரியாவுடன் ஐசரி வேலன்Aisary Velan-Sripriya-Mangudi Minor 1978-

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் விஜயகுமார் மற்றும் ஸ்ரீபிரியாவுடன் ஐசரி வேலன்

Aisary Velan-Sripriya-Vijayakumar-Mangudi Minor 1978-

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் விஜயகுமாருடன் ஐசரி வேலன்Aisary Velan-Vijayakumar-Mangudi Minor 1978-

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் ஐ.எஸ்.ஆருடன் ஐசரி வேலன்ISR-Aisary velan-Mangudi Minor 1978-

”மாங்குடி மைனர்” [1978] படத்தில் விஜயகுமார் , ஜெமினி மகாலிங்கம், பெரியார் ராஜவேலுவுடன்  ஐசரி வேலன்.

Gemini Mahalingam-Isari Velan-Vijayakumar-Periyar Rajavelu-Mangudi Minor 1978-Gemini Mahalingam-Isari Velan-Vijayakumar-Periyar Rajavelu-Mangudi Minor 1978-2

சிம்லா ஸ்பெஷல் [1982] படத்தில் ஐசரி வேலன்Aisary Velan-SIMLA SPECIAL 1982-

சிம்லா ஸ்பெஷல் [1982] படத்தில் கமலஹாசன், எஸ்.வி.சேகருடன் ஐசரி வேலன்

Aisary Velan-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-1Aisary Velan-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-

சிம்லா ஸ்பெஷல் [1982] படத்தில் கமலஹாசன், காந்திமதி, எஸ்.வி.சேகருடன் ஐசரி வேலன்

Ganthimathi-Aisary Velan-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் ஐசரி வேலன்Aisary Velan-Thanikattu Raja 1983-Aisary Velan-Thengai-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் சத்தியகலாவுடன் ஐசரி வேலன்Aisary Velan-Sathyakala-Thanikattu Raja 1983-

“பொன் மகள் வந்தாள்” 1972 படத்தில் சுருளிராஜனுடன் ஐசரி வேலன்Aisari Velan-Pon Magal Vandhaal 1972-Aisari Velan-Pon Magal Vandhaal 1972-1Aisari Velan-Suruli Rajan-Pon Magal Vandhaal 1972-Aisari Velan-Suruli Rajan-Pon Magal Vandhaal 1972-1

“பொன் மகள் வந்தாள்” 1972 படத்தில் ரி.எஸ்.முத்தையாவுடன் ஐசரி வேலன்Aisari Velan-TS.Muthaiah-Pon Magal Vandhaal 1972-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் சுருளிராஜனுடன் ஐசரி வேலன்Aisarivelan-Sinehithi 1970-1Aisarivelan-Sinehithi 1970-Aisarivelan-Surulirajan-Sinehithi 1970-1

”ஸ்நேகிதி” 1970 படத்தில் சோ, மனோரமாவுடன் ஐசரி வேலன்Aisary Velan-Manorama-Cho-Sinehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் மனோரமா,சுருளிராஜனுடன் ஐசரி வேலன்Aisarivelan-Surulirajan-Manorama-Sinehithi 1970-1Aisarivelan-Surulirajan-Manorama-Sinehithi 1970-

”கன்னித்தீவு” படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஐசரி வேலன்Aisary Velan-Moorthi-Kannitheevu-

”அலங்காரி” 1979 படத்தில் வெண்ணிற ஆடை” மூர்த்தியுடன் ஐசரி வேலன்Aisary Velan-Alankaari -Aisary Velan-Alankaari -1Aisary Velan-Murthy-Alankaari -Aisary Velan-VA.Murthy-Alankaari -

ஒத்தையடிப் பாதையிலே 1980 படத்தில் லூஸ் மோகனுடன் ஐசரி வேலன்

Aisary Velan-Othayadi Paathayilae 1979-Aisary Velan-Loose Mohan-Othayadi Paathayilae 1979-

ஒத்தையடிப் பாதையிலே 1980 படத்தில் [சங்கர்]கணேஷுடன் ஐசரி வேலன்

Aisary Velan-Sangar Ganesh-Othayadi Paathayilae 1979-

ஒத்தையடிப் பாதையிலே 1980 படத்தில் [சங்கர்]கணேஷ், லூஸ் மோகனுடன் ஐசரி வேலன்

Aisary Velan-Loose Mohan-Sangar Ganesh-Othayadi Paathayilae 1979-

ஒத்தையடிப் பாதையிலே 1980 படத்தில் [சங்கர்]கணேஷ், நாஞ்சில் நளினி, பௌர்ணமியுடன் ஐசரி வேலன்

Aisary Velan-Nanchil Nalini-Sangar Ganesh-Pournami-Othayadi Paathayilae 1980-

‘எச்சில் இரவுகள்’ 1982 படத்தில் சந்திரசேகர், ரூபாவுடன் ஐசரி வேலன்Aisary Velan-Echchil Iravugal 1982-0150Aisary Velan-Echchil Iravugal 1982-Aisary Velan-Roopa-Chandrasekhar-Echchil Iravugal 1982-

‘எச்சில் இரவுகள்’ 1982 படத்தில் கம்பர் ஜெயராமன்,கைலாஷுடன் ஐசரி வேலன்Kailash-Aisary Velan-Echchil Iravugal 1982-Kailash-Aisary Velan-Kambar Jayaraman-Echchil Iravugal 1982-

‘எச்சில் இரவுகள்’ 1982 படத்தில் சந்திரசேகர், வனிதா, ரூபாவுடன் ஐசரி வேலன்Aisary Velan-Vanitha-Roopa-Chandrasekhar-Echchil Iravugal 1982-55

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s