Rajani

எஸ்.ரஜனி – ரஜனி தேவி என்ற பெயரும் உண்டு. பரிட்சைக்கு நேரமாச்சு, தங்க மகன், அடுத்தாத்து ஆல்பர்ட், அந்த உறவுக்கு சாட்சி, தண்டிக்கப்பட்ட நியாயங்கள், நான் சிகப்பு மனிதன், என் ஆசை உன்னோடுதான், சட்டத்தை உடைக்கிறேன் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் ஜெயலட்சுமி. ஜெயலட்சுமி என்கிற இவரது இயற்பெயரில் வேறு சில நடிகைகள் இருந்ததால் ஒரு தெலுங்குப் படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரான ரஜினியுடன், நிவேதா சேர்த்துக்கொண்டு ரஜினி நிவேதாவானார். இவர் குழந்தை நட்சத்திரமாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர். தங்கமகன் படத்தில் இவருக்கு இணையாக நடித்தவர் மாஸ்டர் சேகர்.

வெள்ளித் திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நடித்து வருபவர். இவரது அப்பா திரைப்பட வினியோகிஸ்தர். `நெஞ்சிலே பூத்த மலர்’ படத்தில் அறிமுகமாகி, `ரோஜா மலரே’, `செவ்வந்தி’, உறங்காத கண்கள்’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.`நவரத்தினம்’, `வெள்ளை ரோஜா’, `இமைகள்’, `போக்கிரி ராஜா’ என நூற்றுக்கணக்கான படங்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் என எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்திருப்பவர் இவர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

நல்லதுக்குக் காலமில்லை [1977], மனிதரில் இத்தனை நிறங்களா [1978], அனிச்ச மலர் [1981], ராணித்தேனீ [1982], சிம்லா ஸ்பெஷல் [1982], இமைகள் [1983], கண்ணத்தொறக்கணும் சாமி [1986], உனக்காக நான் [1976], ரசிகன் ஒரு ரசிகை [1986], கோடுகள் இல்லாத கோலம் [1983], பயணங்கள் முடிவதில்லை [1982], சட்டத்தைத் திருத்துங்கள்[1984], அலை ஓசை [1985].

 

”சினிமா விகடன்” இதழில் வெளியாகியிருந்த இவரது பேட்டி.

ரஜினின்னு கூப்பிட்டா நானும் ரஜினியும் போய் நிப்போம்!” – ‘ரஜினி’ நிவேதா

கு.ஆனந்தராஜ்
Published Date: 9 JULY 2018 12:53PM
Last Updated Date: 9 JULY 2018 12:53PM

ன்ன கேள்வி வேணாலும் கேளுங்க. சந்தோஷமா பதில் சொல்றேன். ஆனால், என் முதல் படம், என் வயசு பற்றி கேட்காதீங்க. மீறிக் கேட்டால் செல்லமாகக் கோபப்படுவேன்” என கண்டிஷன்களுடன் பேசத் தொடங்கினார், நடிகை ரஜினி நிவேதா. சினிமா மற்றும் சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து புகழ்பெற்றவர்.
அப்பா சினிமா வினியோகிஸ்தர். அதனால், அவரோடு அம்மாவும் ஷூட்டிங் போவாங்க. அப்படி அஞ்சு மாசக் கைக்குழந்தையான என்னைத் தூக்கிக்கிட்டு ஒரு தெலுங்கு ஷூட்டிங்குக்குப் போயிருக்காங்க. அங்கே நடிகை தேவிகாவின் குழந்தையா என்னை நடிக்கவெச்சிருக்காங்க. அந்தப் படம் எதுனு எனக்கும் தெரியலை. பிற்காலத்தில் அதுபற்றி அம்மாகிட்டயும் கேட்டுக்கலை. அப்படியே தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன். அந்தப் படம் ரிலீஸான வருஷத்தை வெச்சு, என் வயசைக் கண்டுபிடிச்சுடுவீங்களே” எனச் சிரிக்கிறார்.

விவரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் பல படங்களில் நடிச்சிருக்கேன். சின்ன வயசிலிருந்தே டான்ஸ்ல அதிக ஆர்வம். பெரிய டான்ஸ் மாஸ்டரான பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியிடம் அசிஸ்டென்ட்டா சேர்ந்து, நிறைய படங்களில் வொர்க் பண்ணினேன். வாணிஶ்ரீ, ஜெயபிரதா, ஜெயசுதா, ஶ்ரீதேவி, மஞ்சு பார்கவி, ஶ்ரீவித்யா, ராஜசுலோச்சனா, ராஜஶ்ரீ என அப்போது தெலுங்கின் பெரிய ஹீரோயின்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்திருக்கேன். பல ஹீரோயின்களின் வீட்டுக்கே போய் டான்ஸ் சொல்லிக்கொடுத்த அனுபவங்களை மறக்கமுடியாது. அவங்க எல்லோருடனும் நட்பு இருந்துச்சு. இந்நிலையில, மீண்டும் ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு.

`நெஞ்சிலே பூத்த மலர்’ படத்தில் அறிமுகமாகி, `ரோஜா மலரே’, `செவ்வந்தி’, உறங்காத கண்கள்’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினா நடிச்சேன். என் படங்களில் சில பாடல்களுக்கு நானே கொரியோகிராபி பண்ணிப்பேன். ஒருகட்டத்துக்கு மேலே கேரக்டர் ரோல்கள் வர ஆரம்பிச்சுது. அப்போ, ஜெயலட்சுமி என்கிற என் இயற்பெயரில் வேறு சில நடிகைகள் இருந்தாங்க. அதனால், ஒரு தெலுங்குப் படத்தில் என் கேரக்டர் பெயரான ரஜினியுடன், நிவேதா சேர்த்துக்கிட்டேன். `நவரத்தினம்’, `வெள்ளை ரோஜா’, `இமைகள்’, `நான் சிவப்பு மனிதன்’, `தங்க மகன்’, `போக்கிரி ராஜா’ என நூற்றுக்கணக்கான படங்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடிச்சிருக்கேன்.

எஸ்.பி.முத்துராமன் சார்,

`ரஜினி’னு கூப்பிட்டால்

நானும் ரஜினிகாந்த் சாரும் வந்து நிற்போம். அதெல்லாம் பெரிய காமெடி ஆகிடும். அதனால், `பெண் ரஜினி’னு என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. நான் எல்லோரிடமும் கலகலப்பாப் பேசுவேன். பலரை மாதிரி பேசுவேன். அப்போவெல்லாம் மரத்தடியில்தான் ரெஸ்ட் எடுப்போம். அந்த நேரம் கலகலப்பாப் பேசி எல்லோரையும் ரசிக்க வெப்பேன்” என்கிற ரஜினி நிவேதா, நடன ஆசிரியையாகப் பல பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார். தற்போது வீட்டிலேயே நடனம் பயிற்றுவிக்கிறார்.

“சினிமா வாய்ப்பு குறைஞ்சதும் சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன். `ஆனந்தம்’, `கோலங்கள்’, `மலர்கள்’ என ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சுட்டேன். எனக்கு சினிமாவும் டான்ஸும்தான் உயிர். இந்த ஃபீல்டில் நல்ல அடையாளம் பெறணும்னு நினைச்சேன். ஆனால், 1990-களுக்குப் பிறகு பெரிசா மக்கள் மனசுல இடம்பிடிக்க முடியலையோனு தோணுது. பொருளாதார ரீதியா குறைவில்லை. ஆனா, சரியான சினிமா வாய்ப்பு வரலைனு மனசுதான் கஷ்டப்படுது. எனக்கு வயசு எத்தனை வேணா இருக்கலாம். ஆனா, மனதளவில் இளமையாதான் இருக்கேன். எந்த கேரக்டரா இருந்தாலும் தூள் கிளப்ப ரெடியா இருக்கேன்” எனச் சிரிக்கிறார் ரஜினி நிவேதா.

நன்றி:- https://cinema.vikatan.com/tamil-cinema/interview/130220-interview-with-rajini-nivetha.html

https://cinema.vikatan.com/amp/tamil-cinema/interview/130220-interview-with-rajini-nivetha.html?__twitter_impression=true

‘பூந்தளிர்’ படத்தில் ரஜனி

Image

Image

நடிகர் சிவகுமாருடன் பூந்தளிர் திரைப்படத்தில்

Image

‘மனிதரில் இத்தனை நிறங்களா’ [1978] படத்தில் எஸ்.ரஜனி  S.Rajani-Manidharil Ithanai Nirangala 1978-1S.Rajani-Manidharil Ithanai Nirangala 1978-2S.Rajani-Manidharil Ithanai Nirangala 1978-

‘மனிதரில் இத்தனை நிறங்களா’ [1978] படத்தில் மனோரமா, ஸ்ரீதேவி  S.Rajani-Sridevi-Manorama-Manidharil Ithanai Nirangala 1978-

“ராணித்தேனீ” [1982] படத்தில் மகாலெட்சுமியுடன் ரஜனி

Rajani-Sree-Rani Theni 1982-Rajani-Sree-Rani Theni 1982-1

“ராணித்தேனீ” [1982] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் ரஜனி

Rajani-Thengai-Rani Theni 1982-

“ராணித்தேனீ” [1982] படத்தில் சிவசந்திரனுடன் ரஜனி

Rajani-Sivachandran-Rani Theni 1982-Rajani-Sivachandran-Rani Theni 1982-1Rajani-Sivachandran-Rani Theni 1982-2

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் ரஜனி Rajani-Nallathukku Kalamillai 1977-1Rajani-Nallathukku Kalamillai 1977-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் ஜெய்சங்கருடன் ரஜனி

Rajani-Jai-Nallathukku Kalamillai 1977-1Rajani-Jai-Nallathukku Kalamillai 1977-Rajani-Jai-Nallathukku Kalamillai 1977-2

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ரஜனி

Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-1Suruli Rajan-Nallathukku Kalamillai 1977-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் எஸ்.ரஜனியுடன் கமலஹாசன்

S.Rajani-SIMLA SPECIAL 1982-1S.Rajani-SIMLA SPECIAL 1982-3S.Rajani-SIMLA SPECIAL 1982-2S.Rajani-SIMLA SPECIAL 1982-S.Rajani-Kamal-SIMLA SPECIAL 1982-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் எஸ்.ரஜனியுடன் எஸ்.வி.சேகர்  S.Rajani-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-

“இமைகள்” [1983] படத்தில் சிவாஜிகணேசனுடன் ரஜனி S.Rajani-Emaigal 1983-S.Rajani-Emaigal 1983-1S.Rajani-Sivaji-Emaigal 1983-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் எஸ்.ரஜினியுடன் காந்திமதி S.Rajani-Anitcha Malar 1981-S.Rajani-Anitcha Malar 1981-2S.Rajani-Anitcha Malar 1981-3S.Rajani-Ganthimathi-Anitcha Malar 1981-Ganthimathi-S.Rajani-Anitcha Malar 1981-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் எஸ்.ரஜினியுடன் சத்யப்ரியா S.Rajani-Sathyachitra-Anitcha Malar 1981-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் எஸ்.ரஜினியுடன் இரா.வெ.உடையப்பத்தேவர், மனோரமா,  காந்திமதி

Ganthimathi-Udayappa-S.Rajni-Manoram-Anitcha Malar 1981-

“கண்ணத்தொறக்கணும் சாமி” 1986 படத்தில் சோ, சிவகுமாருடன் எஸ்.ரஜனி  S.Rajani-Kanna Thorakkanum Saami 1986-S.Rajani-Cho-Kanna Thorakkanum Saami 1986-2S.Rajani-Cho-Kanna Thorakkanum Saami 1986-1S.Rajani-Cho-Kanna Thorakkanum Saami 1986-S.Rajani-Cho-Sivakumar-Kanna Thorakkanum Saami 1986-S.Rajani-Cho-Sivakumar-Kanna Thorakkanum Saami 1986-1

“உனக்காக நான்” 1976 படத்தில் எஸ்.ரஜனியுடன் நாகேஷ், பேபி இந்திராRajini-Baby Indra-Nagesh-Unakkaga Naan 1976-Rajini-Baby Indra-Unakkaga Naan 1976-Baby Indra-Rajini-Unakkaga Naan 1976-

“ரசிகன் ஒரு ரசிகை’’ 1986 படத்தில் கவுண்டமணி, செந்திலுடன் எஸ்.ரஜனி Rajani-Rasigan Oru Rasigai 1986-Rajani-Senthil-Rasigan Oru Rasigai 1986-Rajani-Senthil-Rasigan Oru Rasigai 1986-1Rajani-Goundamani-Senthil-Rasigan Oru Rasigai 1986-

“கோடுகள் இல்லாத கோலம்” 1983 படத்தில் எம்.என்.ராஜத்துடன் ரஜனி  Rajani-KODUGAL ILLATHA KOLAM 1983-1Rajani-KODUGAL ILLATHA KOLAM 1983-2Rajani-KODUGAL ILLATHA KOLAM 1983-Rajani-MN.Rajam-KODUGAL ILLATHA KOLAM 1983-

“கோடுகள் இல்லாத கோலம்” 1983 படத்தில் சுஜாதாவுடன் ரஜனி  Rajani-Sujatha-KODUGAL ILLATHA KOLAM 1983-

“கோடுகள் இல்லாத கோலம்” 1983 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், எம்.என்.ராஜத்துடன் ரஜனி  Rajani-YGM-KODUGAL ILLATHA KOLAM 1983-Rajani-YGM-MN.Rajam-KODUGAL ILLATHA KOLAM 1983-56

”பயணங்கள் முடிவதில்லை” 1982 படத்தில் ரஜினியுடன் பூர்ணிமா ஜெயராம்Rajani-Payanangal Mudivathillai 1982-Rajani-Payanangal Mudivathillai 1982-1Rajani-Payanangal Mudivathillai 1982-2Rajani-Payanangal Mudivathillai 1982-TapPoornima Bhagyaraj-Rajani-Payanangal Mudivathillai 1982-2Poornima Bhagyaraj-Rajani-Payanangal Mudivathillai 1982-

”பயணங்கள் முடிவதில்லை” 1982 படத்தில் ரஜினியுடன் ரி.கே.எஸ்.சந்திரன்Rajani-T.K.S.Chandran-Payanangal Mudivathillai 1982-Rajani-T.K.S.Chandran-Payanangal Mudivathillai 1982-164

”சட்டத்தைத் திருத்துங்கள்” 1984 படத்தில் மோகன், ஜெய்சங்கருடன் எஸ்.ரஜனிRajani S-Sattathai Thirutthungal 1984-Rajani S-Sattathai Thirutthungal 1984-1.jpgRajani S-Mohan-Sattathai Thirutthungal 1984-Rajani S-Jaisangar-Sattathai Thirutthungal 1984-68

”அலை ஓசை” 1985 படத்தில் நளினியுடன் ரஜினிRajani-Alai Oasai 1985-03Rajani-Alai Oasai 1985-01Rajani-Alai Oasai 1985-Rajani-Nalini-Alai Oasai 1985-72

ஆகாயத் தாமரைகள் [1995] படத்தில் கவுண்டமணியுடன் ரஜனி நிவேதாRajani-Aagayath Thamaraigal 1985-Rajani-Goundamani-Aagayath Thamaraigal 1985- (2)Rajani-Goundamani-Aagayath Thamaraigal 1985- (3)Rajani-Black Subbiah-Aagayath Thamaraigal 1985- (2)

ஆகாயத் தாமரைகள் [1995] படத்தில் கருப்பு சுப்பையாவுடன் ரஜனி நிவேதாRajani-Black Subbiah-Aagayath Thamaraigal 1985- (3)Rajani-Black Subbiah-Aagayath Thamaraigal 1985- (2)

ஆகாயத் தாமரைகள் [1995] படத்தில் கருப்பு சுப்பையா, கவுண்டமணியுடன் ரஜனி நிவேதாRajani-Black Subbiah-Aagayath Thamaraigal 1985- (1)79

3 comments on “Rajani

  1. in apoorva raganal – title card credited as rajani kanth (introduction) and below to super star, her name as rajini.

    In later years, rajani kanth changed his spelling to rajini kanth.

    In Anichamalar, actress rajini changed to s.rajani,,,,in recent years, she changed her name rajini nivetha.

    So only difference between them is kanth and nivetha…both now have same spelling as rajini.

    With the new name, she contested – 2016 TN assembly election as independent candidate and secure only 1000+votes,

  2. In those days, before getting popular in character roles, vadivukarishi, rajini nivetha tried their luck in glam roles…movie like sigappu rojakkal is one to say ….then, vadivukarishi shot to fame because of muthal mariyathai. and well supported her film background like APN.. unfortunately rajini nivetha did not gave big break. She started into comedy role in Vijay tv lollu sabha, that helped her to manage in tv serials. I still did not understand why she contested in election.?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s