N.N.Kannappa

N.N.கண்ணப்பா – தமிழ்ப் படவுலகில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் சிறந்து விளங்கியவர். நாடகத்துறையிலும் சிறந்து விளங்கினார். 1951-ஆம் ஆண்டு தேவகி படத்தின் மூல அறிமுகமானார். தொடர்ந்து டவுன் பஸ், நால்வர், மாலா ஒரு மங்கல விளக்கு, நன்னம்பிக்கை, படித்த பெண், மேதாவிகள், சிங்கப்பூர் சீமான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். டவுன் பஸ் படம் வெற்றிகரமாக ஓடியதால் இவருக்கு டவுன் பஸ் கண்ணப்பா என்றொரு பெயரும் உண்டு. ரத்தத்திலகம் படம் இவரை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக வெளிப்படுத்தியது. மாணிக்க வாசகர், கப்பலோட்டிய தமிழன் படங்களும் இவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் நாடகத்துறையிலிருந்து வந்தவர் மீண்டும் நாடத்துறைக்கே சென்றுவிட்டார். தனது சொந்த நாடகக் குழுவான நவசக்தி மூலம் பல்வேறு நாடகங்களை நடாத்தினார்.

ஆர்.பி.ராஜநாயகம் என்ற பழமை விரும்பும் நண்பர் அவரது http://rprajanayahem.blogspot.in/ வலைத்தளத்தில்

என்.என்.கண்ணப்பா குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டவுன் பஸ் கண்ணப்பா

பட்டபடிப்பு முடித்திருந்த நேரம். கோரிபாளையம்
 அமெரிக்கன் கல்லூரி முன்உள்ள கடைகளுக்கு
 முன் எப்போதும் கலகலப்பாக கூடி பேசிகொண்டிருப்போம்.
என் க்ளாஸ் மேட் அருண் தான் ஒரு புது நண்பன்
ஒருவனை காட்டினான்.

“மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன்

மார்பினில் ஒரு ஆண் குயில் ” என்ற பாடலை

அந்த புது நண்பன் அழகாக பாடினான்.

அருண் சொன்னான்.” மாப்பிள்ளை !

இவனோட அப்பா சினிமா நடிகராம்டா “என்றான்.

அந்த நண்பனிடம் “யார் உங்க அப்பா ?” -கேட்டேன்.

‘என் என் கண்ணப்பா !’ – புது நண்பன் பதில் .

“அடடே ‘டவுன் பஸ்’கதா நாயகன். கே சோமு படம்.

ஏ பி என் வசனம் எழுதினார்.அஞ்சலி தேவி

தான் அதில் உங்க அப்பா கண்ணப்பா வுக்கு ஜோடி.

இருவருக்கும்பாட்டு ‘பொன்னான வாழ்வே

மண்ணாகி போச்சே. உலகம் இது தானா துயரம் நிலை தானா’ ”

அந்த நண்பன் முகம் பிரகாசமாகியது.

நான் தொடர்ந்தேன்.” ”தேவகி ‘ படத்தில் எம் ஜி யார் மனைவி வி என்.ஜானகியோடு கதாநாயகனாக கண்ணப்பா நடித்தவர் ” என்று ஏனைய நண்பர்களிடமும் சொன்னேன்.

‘எஸ் எஸ் ஆர் நடித்த ‘தெய்வத்தின் தெய்வம் ‘ படத்தில்

இரண்டாவதுகதாநாயகன். சிவாஜி படம் கப்பலோட்டிய

தமிழனில் சிதம்பரனாருக்குதேசாந்திர தண்டனைக் கொடுத்தவுடன் பைத்தியமாகி விடும் சிதம்பரனார்

தம்பி.ரத்ததிலகத்தில் சாவித்திரி கணவனாக வரும்

சீனாக்கார ராணுவ அதிகாரி ‘இப்படி நான் அடுக்கி கொண்டே

போகும்போது அந்த புது நண்பன் ( பெயர் இப்போது மறந்து விட்டது.) கண்கள் கலங்கி விட்டது.

” இவ்வளவு நாளும் நான் எங்கப்பா சினிமா நடிகர்

என்று சொன்னால்யாருக்குமே புரியவில்லை.

என்னை ஏளனமாக பார்த்தவர்கள் உண்டு. ‘என்னமோ சொல்றான். யாருன்னே புரியலே ‘

என்பார்கள். நீங்கள் தான் சார் எங்கஅப்பா பற்றி

இவ்வளவு சொல்லியிருக்கிறீர்கள் . இப்படி நான்

சொன்னவுடன் இவ்வளவு விவரமாக எங்க அப்பா பற்றி நீங்கள்

தான் பேசியிருக்கிறீர்கள் !எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

நம் வயதில் யாருக்குமே என் அப்பா

பற்றி எதுவுமே தெரியவில்லை.”

கமல், ரஜினி காலம்.கண்ணப்பா பற்றி யாருக்கு தெரியும்!

அன்று வீட்டில் அவர் அப்பா என் என் கண்ணப்பா விடம்

என்னை பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்லியிருக்கிறார்.

கண்ணப்பா தன் வீட்டுக்கு என்னை விருந்து சாப்பிட
அழைத்திருக்கிறார். மதுரைகே கே நகரில் வீடு. அதற்கு
 மறுநாள் மதியம் கண்ணப்பா மகனுடன் அவர்வீட்டுக்கு
போனேன். கண்ணப்பா வுக்கு ஒரு ஆண், ஒரு பெண் இரண்டு
பிள்ளைகள். பெண் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார். கண்ணப்பா,
அவர் மனைவி இருவரும் என்னை அன்போடு உபசரித்தார்கள்.

பழைய ஆல்பங்களை கண்ணப்பா எடுத்து காட்டினார். எனக்கு பழைய

போட்டோ ஆல்பங்கள் பார்ப்பது என்றால் கொள்ளை விருப்பம்.

ஒரு போட்டோ வில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில்

கண்ணப்பா, சிவாஜிகணேசனும் பன்னிரண்டு வயது சிறுவர்களாக,

அதே புகைப்படத்தில் வேட்டிகட்டிய இளைஞனாக

எம் என் நம்பியார். இன்னும் “சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா “சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்.  பல நடிகர்களை பார்த்துஅவர்கள் பெயரை குறிப்பிட்டு  நானே அடையாளம் காட்டியது கண்ணப்பாவுக்குத் திகைப்பு !

கண்ணப்பா அப்போது ஸ்பெஷல் நாடகங்கள் போட்டுகொண்டிருந்தார்.

 டவுன் பஸ் 1955 படத்தில் என்.என்.கண்ணப்பாImageImage

என்.என்.கண்ணப்பா ஏ,கருணாநிதியுடன் டவுன் பஸ் படத்தில்ImageImage 

என்.என்.கண்ணப்பா அஞ்சலி தேவியுடன் டவுன் பஸ் படத்தில்ImageImage

என்.என்.கண்ணப்பா, தாம்பரம் லலிதா, ஏ,கருணாநிதியுடன் டவுன் பஸ் படத்தில்

Image

கே.சாய்ராம், கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் என்.என்.கண்ணப்பா டவுன் பஸ் படத்தில்

Image

கப்பலோட்டிய தமிழன் படத்தில் என்.என்.கண்ணப்பா

MN.Kannappa-Kappalottiya Thamizhan-

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் வி.கே.ராமசாமி, வைரம் கிருஷ்ணமூர்த்தி, ஆர் .முத்துராமனுடன் என்.என்.கண்ணப்பா

NN.Kannappa-Ninaippatharkku Neramillai 1963-NN.Kannappa-Ninaippatharkku Neramillai 1963-2NN.Kannappa-Ninaippatharkku Neramillai 1963-1NN.Kannappa-R.Muthuraman-VKR-Ninaippatharkku Neramillai 1963-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s