C.S.Pandiyan

C.S.பாண்டியன்தமிழில் மிகச்சிறந்த நாடக மற்றும் திரைப்பட  நகைச்சுவை நடிகர். நத்தையில் முத்து, அவர் எனக்கே சொந்தம், நல்லதம்பி, காவியத்தலைவி, மகேஸ்வரி, ஜஸ்ரிஸ் விஸ்வநாத், வெள்ளி விழா, கொஞ்சும் குமரி, யார் பையன், மணமகள், திருடாதே, தெய்வப்பிறவி, பூக்காரி, நீதிபதி, காதலித்தால் போதுமா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, டில்லி மாப்பிள்ளை, சிங்காரி, கைராசி, ஸ்ரீ காஞ்சி காமாட்சி,வாழையடி வாழை, புதுமைப்பித்தன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திரம் மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகப்பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவர்.

சிறு வயதிலேயே பாய்ஸ் கம்பெனியில் நடிக்கச் சேர்ந்தவர். 1935-ஆம் ஆண்டு மதுரை பால கான சபாவில் நடிக்கச் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் இக்கம்பெனி மிகவும் நொடிந்துவிட்டது. அந்த சமயத்தில் இச்செய்தியைக் கேள்விப்பட்டு நொடித்த நிலையிலும் உடனடியாக சென்று விவரம் கேட்டு இக்கம்பெனியை விலைக்கு வாங்கினார் கலைவாணர். இக்கம்பெனி பின்னாளில் என்.எஸ்.கே.நாடக சபாவாக மாறியது.

பழைய கம்பெனியைச் சேர்ந்த இவர்களுக்கெல்லாம் மாதம் ரூ.15/- [பதினைந்து ரூபாய் மட்டும்] சம்பளமாகக் கொடுத்தார் கலைவாணர். அதுவரை சம்பளம் என்றால் என்ன என்பதையே அறிந்திராத இவர்களுக்கு அது ஒரு பெரிய அதிர்ஷ்டமாக இருந்தது.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்த நாடகக் கம்பெனியை விலைக்கு வாங்கிய பிறகுதான் அனைவருக்கும் சம்பளம் நிருணயிக்கப்பட்டது. சிவாஜி கணேசன், காகா ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.சிவசூரியன், டி.பாலசுப்பிரமணியம், டி.வி.நாராயணசாமி, கே.பி.காமாட்சி, கே.ஆர்.ராமசாமி அவ்வளவு பேரும் அன்று கலைவாணர் நாடகக் குழுவில் இருந்தனர்.

 சிவாஜிகணேசன், C.S.பாண்டியன் இருவருக்கும் 15 ரூபாய் சம்பளம். இருவருமே முதல் மாத சம்பளத்தை வாங்கி, தங்கள் தாயாருக்கு அனுப்பிவிட்டனர். மறுநாள் கலைவாணர், அனைவரையும் அழைத்து, ‘சம்பளப் பணத்தை என்னடா செய்தீர்கள்?” என்று கேட்கும் போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செலவு செய்ததாகக் கூறினர்.

சிவாஜிகணேசன், C.S.பாண்டியன் இருவரும் மட்டும் அம்மாவுக்கு அனுப்பியதாகக் கூறினர். அதைக் கேட்ட கலைவாணர் மனம் மகிழ்ந்து, அவர்கள் இருவருக்கும் மட்டும் 5 ரூபாய் சம்பள உயர்வு கொடுத்தார்.

கலைவாணரின் சொந்தப் படமான ‘பைத்தியக்காரன்’ [1947] படத்தில் இவர் நடிகராக நடித்திருந்தார். இவர் பேசிய ‘என் பரந்த அனுபவத்தில் ஒரு பொடி விஷயம்’, என்ற வசனத்தை எல்லோருமே சொல்ல ஆரம்பித்தனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் எடுக்கப்பட்ட ‘மனோகரா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 3 மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

அன்றைய பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவரான லேனா செட்டியார் தயாரித்த ‘கிருஷ்ணபக்தி’ படத்தில் நடித்துள்ளார். அதில் இவருக்கு மனைவியாக சி.ரி.ராஜகாந்தமும், மகளாக ரி.ஆர்.ராஜகுமாரியும் நடித்துள்ளனர்.

கலைவாணர் இயக்கிய ‘பணம்’ படத்தில் கலைவாணருக்கு 2 பாடல்கள் என்பதால், இவருக்கும் 2 பாடல்களுக்கு ஏற்பாடு செய்தார் கலைவாணர்.

சிறந்த இயக்குநர்களான எல்.வி.பிரசாத், ரி.ஆர்.ரகுநாத், கே.ராம்நாத், ராஜா சந்திரசேகர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பா.நீலகண்டன், கே.பாலசந்தர், கே.கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணன் பஞ்சு, கே.பாலசந்தர், ஏ.எஸ்.ஏ.சாமி போன்ற இயக்குநர்களின் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார்.

சுயக் குரலில் பாடக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர். அத்துடன் நடனமும் தெரியும். சண்டை போடவும் தெரியும். இதெல்லாம் நாடக்குழுவில் இருந்ததால் கற்றுக்கொண்டார். வி.கே.ராமசாமியின் சொந்தப் படமான ‘ஜோடிப்புறா’வின் வசனம் இவர் எழுதியதுதான்.

தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ பட்டம் அளித்து கௌரவித்தது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பணம், நான் கண்ட சொர்க்கம், கைராசி, தெய்வப்பிறவி, மகேஸ்வரி, மணமகள், திருடாதே, கண்மலர் என்று சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் டணால் கே.ஏ.தங்கவேலுவுடன் இணைந்து நடித்தவர் சி.எஸ்.பாண்டியன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாடக சபாவில் தங்கவேலுவுடன் நடித்த நடிகர்களுள் ஒருவர். நாடகம், சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சியிலும் தங்கவேலுவுடன் பங்கேற்றிருக்கிறார்.

1.07.1982-சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

கிருஷ்ண பக்தி [1948], வனசுந்தரி [1951], சுதர்ஸன் [1951], என் தங்கை [1952],  ஆயிரம் ரூபாய் [1964], குமார விஜயம் [1976], சங்கே முழங்கு [1972], படிக்காத பண்ணையார் [1985], ஸ்ரீ கிருஷ்ண லீலா [1977], ருத்ரதாண்டவம் [1978]

Image

ImageImage

CS.Pandiyan- Kanchi Kamatchi 1978

பேபி சுதாவுடன் ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில்  சி.எஸ்.பாண்டியன்

CS.Pandiyan-Baby Sudha Kanchi Kamatchi 1978

ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் காந்திமதியுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandiyan-Kanthimathi- Kanchi Kamatchi 1978

CS.Pandiyan-Kanthimathi- Kanchi Kamatchi 1978-1

CS.Pandiyan-Kanthimathi- Kanchi Kamatchi 1978-2

CS.Pandiyan-Kanthimathi- Kanchi Kamatchi 1978-3

CS.Pandiyan-Kanthimathi- Kanchi Kamatchi 1978-4

இடது வி.எஸ்.ராகவன் வலது சி.எஸ்.பாண்டியன்

ImageImage

பி.எஸ்.ரவிச்சந்திரனுடன் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் சி.எஸ்.பாண்டியன்

Image

நீதிபதி (1955) படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம், கரிக்கோல்ராஜு, எஸ்.வி.ஷண்முகம் ஆகியோருடன் சி.எஸ்.பாண்டியன்

C.S.Pandiyan-Karikol Raj-Neethipathi-1955-2 C.S.Pandiyan-Karikol Raj-Neethipathi-1955-3-Re C.S.Pandiyan-Sagasranamam-Neethipathi-1955-1 Re C.S.Pandiyan-Sagasranamam-Neethipathi-1955-2 Re CS.Pandiyan-Karikol Raj-Neethipathi-1955-1 Re Karikol Raj-CS.Pandiyan-Neethipathi-1955 S.V.Shunmugam-CS.Pandiyan-TS.Balaiah-Neethipathi-1955

யார் பையன் (1957) படத்தில் கலைவாணர் மற்றும் ரி.ஏ.மதுரத்துடன் சி.எஸ்.பாண்டியன்   CS.Pandiyan-NSK-TA.Madhuram-Yaar Paiyyan-1957-CS.Pandiyan-Yaar Paiyyan-1957-

1970-இல் வெளிவந்த “டில்லி மாப்பிள்ளை” படத்தில் கொங்கு தமிழ் பேசுபவராக வி.கே.ராமசாமியுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandiyan-VKR-Delhi Mappillai 1970- CS.Pandiyan-VKR-Delhi Mappillai 1970-1 CS.Pandiyan-VKR-Delhi Mappillai 1970-2

1970-இல் வெளிவந்த “டில்லி மாப்பிள்ளை” படத்தில் கொங்கு தமிழ் பேசுபவராக ரவிச்சந்திரனுடன் சி.எஸ்.பாண்டியன்

Ravichandran-CS.Pandian-Delhi Mappillai 1970-

புதுமைப்பித்தன் [1957] படத்தில் ரி.எஸ்.பாலையா, ஆர்.பாலசுப்பிரமணியத்துடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandiyan- TS.Balaiah-R.Balasubramoniyam-Pudhumai Pithan 1957-

‘அவர் எனக்கே சொந்தம்’ [1977] படத்தில் சி.எஸ்.பாண்டியன், குலதெய்வம் ராஜகோபால், வி.கே.ராமசாமி, டைப்பிஸ்ட் கோபு

CS.Pandian-Kuladeivam-VKR-Typist Gopu-Avar Enakke Sontham 1977-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் சி.எஸ்.பாண்டியன்- ஜெமினிகணேசன்CS Pandian-KUZHANTHAI ULLAM 1969-CS Pandian-KUZHANTHAI ULLAM 1969-1CS Pandian-Gemini-KUZHANTHAI ULLAM 1969-

‘பாரிஜாதம்’ [1950] படத்தில் கலைவாணருடன் ஸ்ரீதாமன் என்ற கதாபாத்திரத்தில் சி.எஸ்.பாண்டியன்

CS Pandian as Kaakkai - NSK as Sreethaman-PARIJATHAMCS Pandian as Kaakkai - PARIJATHAM

‘பாரிஜாதம்’ [1950] படத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுடன் சி.எஸ்.பாண்டியன்

CS Pandian-Kaakka Radhakrishnan as Thambi - PARIJATHAM

‘பாரிஜாதம்’ [1950] படத்தில் கலைவாணர், காக்கா ராதாகிருஷ்ணனுடன் சி.எஸ்.பாண்டியன்

CS Pandian-Kaakka Radhakrishnan as Thambi -NSK- PARIJATHAM

‘பாரிஜாதம்’ [1950] படத்தில் ரி,ஏ.மதுரம் , கலைவாணருடன் சி.எஸ்.பாண்டியன்

CS Pandian-NSK as Sreethaman-TA Mathuram-PARIJATHAM-1

‘பாரிஜாதம்’ [1950] படத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுடன் சி.எஸ்.பாண்டியன்

Kaakka Radhakrishnan as Thambi - CS Pandian-PARIJATHAMKaakka Radhakrishnan as Thambi - CS Pandian-PARIJATHAM-2

‘பாக்தாத் பேரழகி’ [1953] படத்தில் நாகேஷ், வி.கே.ராமசாமியுடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-Nagesh-VKR-Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ [1953] படத்தில் வி.கே.ராமசாமியுடன் பாண்டியன்CS.Pandian-VKR-Baghdad Perazhagi 1973-

’குலகௌரவம்’ [1974] படத்தில் கரிக்கோல்ராஜுடன் சி.எஸ்.பாண்டியன்  CS.Pandian-Karikkolraju-KULAGOWRAVAM 1974-CS.Pandian-Karikkolraju-KULAGOWRAVAM 1974-1

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் ஜெயகோபியுடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandiyan-Jayagopi-Padikkatha Pannaiyar 1985-CS.Pandiyan-Jayagopi-Padikkatha Pannaiyar 1985-1CS.Pandiyan-Jayagopi-Padikkatha Pannaiyar 1985-2

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் நடிகர் திலகத்துடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandiyan-Sivaji-Padikkatha Pannaiyar 1985-

”படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் பயில்வான் ரங்கநாதன், வி.கோபாலகிருஷ்ணனுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-Bailvan Ranganathan-V.Gopalakrishnan-Nagaraja Chozhan-Padikkatha Pannaiyar 1985-

”நல்லதம்பி” [1949] படத்தில் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-NALLATHAMBI 1949-CS.Pandian-NALLATHAMBI 1949-1

”நல்லதம்பி” [1949] படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமத்துடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-Sahasranamam-NALLATHAMBI 1949-CS.Pandian-Sahasranamam-NALLATHAMBI 1949-1

”வனசுந்தரி” [1951] படத்தில் சி.எஸ்.பாண்டியன் CS.Pandian-Vanasundari 1951-1CS.Pandian as Karadi-Vanasundari 1951-

”வனசுந்தரி” [1951] படத்தில் வி.கே.ராமசாமியுடன் சி.எஸ்.பாண்டியன் CS.Pandian-VK.Ramaswamy-Vanasundari 1951-CS.Pandian-VK.Ramaswamy-Vanasundari 1951-1

”வனசுந்தரி” [1951] படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் சி.எஸ்.பாண்டியன் CS.Pandian-NSK-Vanasundari 1951-

”வனசுந்தரி” [1951] படத்தில் ரி.ஏ.மதுரத்துடன் சி.எஸ்.பாண்டியன் CS.Pandian-TA.Madhuram-Vanasundari 1951-CS.Pandian-TA.Madhuram-Vanasundari 1951-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன்  சி.எஸ்.பாண்டியன் CS.Pandiyan-VKR-Kumara Vijayam 1976-

“கண்மலர்” [1970] படத்தில் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-Kann Malar 1970-CS.Pandian-Kann Malar 1970-2ACS.Pandian-Kann Malar 1970-1

“கண்மலர்” [1970] படத்தில் சௌகார் ஜானகியுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-SOWKAR JANAKI-Kann Malar 1970-3CS.Pandian-SOWKAR JANAKI-Kann Malar 1970-2CS.Pandian-SOWKAR JANAKI-Kann Malar 1970-1CS.Pandian-SOWKAR JANAKI-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில்  கே.ஏ.தங்கவேலுவுடன்  சி.எஸ்.பாண்டியன்KA.Thangavelu-CS.Pandian-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில்  கே.ஏ.தங்கவேலுசி.எஸ்.பாண்டியன், ஜெமினிகணேசன்KA.Thangavelu-Gemini Ganesan-CS.Pandian-Kann Malar 1970-1KA.Thangavelu-Gemini Ganesan-CS.Pandian-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் சௌகார் ஜானகி, பி.சரோஜாதேவியுடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-SOWKAR JANAKI-Sarojadevi-KA.Thangavelu-Kann Malar 1970-

“கண்மலர்” [1970] படத்தில் சௌகார் ஜானகி, எஸ்.ஏ.அசோகன், கே.ஏ.தங்கவேலுவுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-SOWKAR JANAKI-Asokan-KA.Thangavelu-Kann Malar 1970-ACS.Pandian-SOWKAR JANAKI-Asokan-KA.Thangavelu-Kann Malar 1970-1CS.Pandian-SOWKAR JANAKI-Asokan-KA.Thangavelu-Kann Malar 1970-58

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் ஜெயலலிதாவுடன் சி.எஸ்.பாண்டியன் 

CS.Pandian-Neerum Neruppum 1971-CS.Pandian-Jayalalitha-Neerum Neruppum 1971-

”தலைவன்” [1970] படத்தில் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-Thalaivan 1970-1CS.Pandian-Thalaivan 1970-

”தலைவன்” [1970] படத்தில் எம்.என்.நம்பியார், அசோகனுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-Ashokan-Thalaivan 1970-CS.Pandian-MN.Nambiar-Ashokan-Thalaivan 1970-

“தலைவன்” [1970] படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன் வாணிஸ்ரீ,சாண்டோ கிருஷ்ணன்

Sandow Krishnan-CS.Pandian-Thalaivan 1970-1Sandow Krishnan-CS.Pandian-Thalaivan 1970-Sandow Krishnan-CS.Pandian-Thalaivan 1970-2

“சங்கே முழங்கு” [1972] படத்தில் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-Sangae Muzhangu 1972-CS.Pandian-Sangae Muzhangu 1972-184

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன் CS.Pandian-MR.Radha-Aayiram Rupai 1964-1CS.Pandian-MR.Radha-Aayiram Rupai 1964-CS.Pandian-MR.Radha-Aayiram Rupai 1964-2

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் நாகேஷ்,அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன், எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-MR.Radha-Kottappuli Jayaraman-Ashokan-Aayiram Rupai 1964-CS.Pandian-MR.Radha-Nagesh-Ashokan-Aayiram Rupai 1964-89

“என் தங்கை” [1952] படத்தில் எம்.என்.ராஜத்துடன் சி.எஸ்.பாண்டியன் CS.Pandian-En Thangai 1952-CS.Pandian-En Thangai 1952-1CS.Pandian-En Thangai 1952-2CS.Pandian-MN.Rajam-PV.Narasimha Bharathi -En Thangai 1952-93

”குமுதம்” [1961] படத்தில் பி.எஸ்.சரோஜாவுடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandiyan-Kumudham 1961-CS.Pandiyan-BS.Saroja-Kumudham 1961-

”குமுதம்” [1961] படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandiyan-MR.Radha-Kumudham 1961-CS.Pandiyan-MR.Radha-Kumudham 1961-1CS.Pandiyan-MR.Radha-Kumudham 1961-2

”குமுதம்” [1961] படத்தில் சீதாலட்சுமி, பி.டி.சம்பந்தம், எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன்

PD.Sampantham-Seethalakshmi-CS.Pandiyan-MR.Radha-Kumudham 1961-MR.Radha-PD.Sampantham-Seethalakshmi-CS.Pandiyan-Kumudham 1961-

”குமுதம்” [1961] படத்தில் மொட்டை சுப்பையா, எஸ்.ராமராவுடன் சி.எஸ்.பாண்டியன்

S.Ramarao-Mottai Subbaiah-CS.Pandiyan-Kumudham 1961-

”குமுதம்” [1961] படத்தில் நடிகவேள், மொட்டை சுப்பையா, எஸ்.ராமராவுடன் சி.எஸ்.பாண்டியன்

S.Ramarao-Mottai Subbaiah-CS.Pandiyan-MR.Radha-Kumudham 1961-102

“அடிமைப் பெண்” 1969 படத்தில் பாண்டியன் CS.Pandian-Adimaippenn 1969-CS.Pandian-Adimaippenn 1969-1

“அடிமைப் பெண்” 1969 படத்தில் ஓ.ஏ.கே.தேவர் ,சீதாலட்சுமியுடன் சி.எஸ்.பாண்டியன்Seethalakshmi-CS.Pandian-OAK.Devar-Adimaippenn 1969-105

“மணமகள் “ 1951 படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன் கலைவாணர் CS.Pandiyan-NS.Krishnan-Manamagal 1951-

“மணமகள் “ 1951 படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன் ஆழ்வார் குப்புசாமிCS.Pandiyan-Azhwar Kuppusamy-Manamagal 1951-

“மணமகள் “ 1951 படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன் டி.பாலசுப்பிரமணியம்CS.Pandiyan-D.Balasubramonian-Manamagal 1951-Kanyakumari Triveni Sangamam-1CS.Pandiyan-D.Balasubramonian-Manamagal 1951-

“மணமகள் “ 1951 படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன் ஆழ்வார் குப்புசாமிCS.Pandiyan-Azhwar Kuppusamy-Manamagal 1951-1

“மணமகள் “ 1951 படத்தில் சி.எஸ்.பாண்டியனுடன் பத்மினி CS.Pandiyan-Padmini-Manamagal 1951-111

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் காந்திமதியுடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-Ganthimathi-SRI KRISHNA LEELAI 1977-112

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-Rudra Thandavam 1978-1CS.Pandian-Thengai-Rudra Thandavam 1978-1

“ருத்ரதாண்டவம்” 1978 படத்தில் தேங்காய் சீனிவாசன், நாகேஷுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-Nagesh-Rudra Thandavam 1978-1CS.Pandian-Nagesh-Thengai-Rudra Thandavam 1978-1116

”புதுப்பட்டி பொன்னுத்தாயி” 1991 படத்தில் நெப்போலியன், ராதிகா, நளினிகாந்துடன் சி.எஸ்.பாண்டியன் [கடைசியாக நிற்பவர்]CS.Pandian-Radhika-Nepoleon-Nalinikanth-Puthupatti Ponnuthayee 1991-117

”கிருஷ்ண பக்தி” 1948 படத்தில் சி.ரி.ராஜகாந்தம், ரி.ஆர். ராஜகுமாரியுடன் சி.எஸ்.பாண்டியன்CS.Pandian-Krishna Bakthi 1948-CS.Pandian-CT.Rajakantham-Krishna Bakthi 1948-CS.Pandian-CT.Rajakantham-TR.Rajakumari-Krishna Bakthi 1948-120

”சுதர்ஸன்” 1951 படத்தில்  சி.பி.கிட்டான், ரி.எஸ்.பாலையா, கே.சாய்ராமுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-K.Sairam-TS.Balaiah-CP.Kittan-Sudharsan 1951-1121

Advertisements

One comment on “C.S.Pandiyan

  1. today i seen a movie in which cspandiyan acted in support role – the movie were rathnakumar, thiruvarutselvar and kudumbam oru kovil.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s