Senthaamarai

செந்தாமரை – தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். மாயா பஜார், மாலையிட்ட மங்கை, உட்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர். கல்யாண மாலை என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு 14.8.1992- அன்று மரணமடைந்தார்.

ரஜனிகாந்தின் தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், பணக்காரன், மூன்று முகம் , பாக்கியராஜின் முந்தானை முடிச்சு ,கமலஹாசனின் காக்கிச்சட்டை படங்களைப் பார்த்தவர்கள் இவரை மறந்திருக்க முடியாது.பல படங்களில் இவர் எம்.எல்.ஏ.வாக நடித்துள்ளதால் இவருக்கு எம்.எல்.ஏ.செந்தாமரை என்ற ஒரு பெயரும் நிலைத்திருந்தது.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

எனக்கு நானே நீதிபதி, நாளை உனது நாள்,  மன்னவன் வந்தானடி, சட்டம் ஒரு விளையாட்டு, தாய், நில் கவனி காதலி, கண்ணில் தெரியும் கதைகள், நான் வாழ வைப்பேன், பாதுகாப்பு, ஆயுசு நூறு, துணைவன், அருணோதயம், பொல்லாதவன், வண்ணக்கிளி, நம்ம வீட்டு தெய்வம், பிராயச்சித்தம், அன்புள்ள ரஜனிகாந்த், தூறல் நின்னு போச்சு, நெஞ்சிருக்கும் வரை, இருளும் ஒளியும், கழுகு, காசேதான் கடவுளடா, தில்லானா மோகனாம்பாள், அன்பளிப்பு, கலாட்டா கல்யாணம், அனுபவம் புதுமை, மிஸ்ரர் சம்பத், எங்க மாமா, முத்தான முத்தல்லவோ, சித்ரா பௌர்ணமி, சிட்டுக்குருவி, சமயபுரத்தாளே சாட்சி, ஒரு கை பார்ப்போம், சுமதி என் சுந்தரி.

நன்றி:- தினகரன் 15.8.1992

“நல்ல தீர்ப்பு” 1959 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் செந்தாமரைSenthamarai-Nalla Theerpu 1959-Senthamarai-TRR-Nalla Theerpu 1959-Senthamarai-TRR-Nalla Theerpu 1959-1

கடவுள் மாமா [1974] படத்தில் செந்தாமரை

ImageImage

பூ விலங்கு (1984) படத்தில் செந்தாமரை

Senthaamarai-Poovilangu-1984-

சுமதி என் சுந்தரி [1968] படத்தில் நடிகர் திலகத்துடன் செந்தாமரைSenthamarai-Sivaji-Sumathi En Sundari 1968-

தேவரின் ‘துணைவன்’ [1969] படத்தில் செந்தாமரை தனித்தும் ஏ.வி.எம்.ராஜனுடனும்

senthamarai-avm.rajan-Thunaivan 1969-senthamarai-Thunaivan 1969-senthamarai-Thunaivan 1969-1

’சிட்டுக்குருவி’ படத்தில் சுமித்ராவுடன் செந்தாமரைSenthamarai-Sumithra-Chittukkuruvi-

‘நில் கவனி காதலி’ [1969] படத்தில் எம்.என்.நம்பியார், ஜெயந்தியுடன் செந்தாமரைSenthamarai-Jayanthi-Nil kavavani kaathali 1969Senthamarai-Nil kavavani kaathali 1969

‘கண்ணில் தெரியும் கதைகள்’ [1980] படத்தில் செந்தாமரைSenthamarai-Kannil Theriyum Kathaikal -Senthamarai-Kannil Theriyum Kathaikal 1980-

‘கண்ணில் தெரியும் கதைகள்’ [1980] படத்தில் ஏ.கே.வீராச்சாமி, குலதெய்வம் ராஜகோபாலுடன் செந்தாமரை        AK.Veerasami-Senthamarai-Kuladeivam-Kannil Theriyum Kathaikal 1980 -AK.Veerasami-Senthamarai-Kuladeivam-Kannil Theriyum Kathaikal 1980 -1

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ [1987] படத்தில் நிஷாந்தியுடன் செந்தாமரை  Nishanthi as Shenbagam-Senthamarai-Enga Ooru Pattukaran 1987-Senthamarai-Nishanthi as Shenbagam-Enga Ooru Pattukaran 1987-

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் செந்தாமரைSenthamarai-Naan Vazhavaippen 1979-Senthamarai-Naan Vazhavaippen 1979-1

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் நடிகர் திலகத்துடன்  செந்தாமரைSenthamarai-Sivaji Ganesan-Naan Vazhavaippen 1979-Senthamarai-Sivaji Ganesan-Naan Vazhavaippen 1979-1Senthamarai-Sivaji Ganesan-Naan Vazhavaippen 1979-2

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் சி.ஐ.டி.சகுந்தலாவுடன் செந்தாமரைSenthamarai-CID.Sagunthala-Naan Vazhavaippen 1979-

”அன்பளிப்பு” [1969] படத்தில் செந்தாமரைSenthamarai-Anbalippu 1969-Senthamarai-Anbalippu 1969-1Senthamarai-Anbalippu 1969-2Senthamarai-Anbalippu 1969-3

”அன்பளிப்பு” [1969] படத்தில் எம்.என்.நம்பியாருடன் செந்தாமரைSenthamarai-MN.Nambiar-Anbalippu 1969-

”அன்பளிப்பு” [1969] படத்தில் ஜெய்சங்கர், நடிகர் திலகத்துடன் செந்தாமரைSenthamarai-Sivaji-Jaisangar-Anbalippu 1969-Senthamarai-Sivaji-Jaisangar-Anbalippu 1969-1

”அன்பளிப்பு” [1969] படத்தில் செந்தாமரையுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்Sattampillai-Senthamarai-Anbalippu 1969-

“நான் மகான் அல்ல” [1984] செந்தாமரை  Senthamarai-Naan Mahan Alla 1984-Senthamarai-Naan Mahan Alla 1984-1Senthamarai-Naan Mahan Alla 1984-2

“நான் மகான் அல்ல” [1984] ரஜினிகாந்துடன் செந்தாமரை  Senthamarai-Rajanikanth-Naan Mahan Alla 1984-

“நான் மகான் அல்ல” [1984] வி.கே.ராமசாமியுடன் செந்தாமரை  Senthamarai-VKR-Naan Mahan Alla 1984-Senthamarai-VKR-Naan Mahan Alla 1984-1

“நான் மகான் அல்ல” [1984] கே.கண்ணனுடன் செந்தாமரை  K.Kannan-Senthamarai-Naan Mahan Alla 1984-K.Kannan-Senthamarai-Naan Mahan Alla 1984-1

“நான் மகான் அல்ல” [1984] செந்தாமரையுடன் சங்கிலி முருகன் Sangili Murugan-Senthamarai-Naan Mahan Alla 1984-

“முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் செந்தாமரைSenthamarai- Muthaana Muthallavo 1976-Senthamarai- Muthaana Muthallavo 1976-1

“முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் செந்தாமரையுடன் உடையப்பத்தேவர்Senthamarai-Udayappa Devar- Muthaana Muthallavo 1976-1Senthamarai-Udayappa Devar- Muthaana Muthallavo 1976-

“முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் செந்தாமரையுடன் எம்.ஆர்.கே   Senthamarai- MRK-Muthaana Muthallavo 1976-Senthamarai- MRK-Muthaana Muthallavo 1976-1

“முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் செந்தாமரையுடன் உடையப்பத்தேவர்,  எம்.ஆர்.கே, முத்துராமன்,

Udayappa Devar- Senthamarai-Muthuraman-Muthaana Muthallavo 1976-Udayappa Devar- MRK-Senthamarai-Muthuraman-Muthaana Muthallavo 1976-2Udayappa Devar- MRK-Senthamarai-Muthuraman-Muthaana Muthallavo 1976-1

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் மணிமாலாவுடன் செந்தாமரை

Senthamarai-Samayapurathale Satchi 1985-1Senthamarai-Samayapurathale Satchi 1985-Senthamarai-Manimala-Samayapurathale Satchi 1985-

“ஒரு கை பார்ப்போம்” 1982 படத்தில் மனோரமாவுடன் செந்தாமரை Senthamarai-Oru Kai Parpom 1982-2Senthamarai-Oru Kai Parpom 1982-1Senthamarai-Oru Kai Parpom 1982-Senthamarai-Manorama-Oru Kai Parpom 1982-

“ஒரு கை பார்ப்போம்” 1982 படத்தில் ராதாவுடன் செந்தாமரை Senthamarai-Radha-Oru Kai Parpom 1982-1Senthamarai-Radha-Oru Kai Parpom 1982-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை மூர்த்தியுடன்  செந்தாமரை

VA.Moorthi-Senthamarai-Jaisangar-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் செந்தாமரை, ஜெய்சங்கர், ரஜனிகாந்த்.Senthamarai-Jaisangar-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் செந்தாமரை, வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன்,  சங்கிலி முருகனுடன் மாலிMaali-Sangili Murugan-Senthamarai-Thengai-VKR-Thanikattu Raja 1983-

”தேவதை” 1979 படத்தில் ஜெயந்தியுடன் செந்தாமரை Senthamarai-Devathai 1979-Senthamarai-Jayanthi-Devathai 1979-

”தேவதை” 1979 படத்தில்  சச்சுவுடன் செந்தாமரை Senthamarai-Sachu-Devathai 1979-

”தேவதை” 1979 படத்தில் சிவகுமாருடன் செந்தாமரை Senthamarai-Sivakumar-Devathai 1979-

”தேவதை” 1979 படத்தில் நீலு, சுருளிராஜன், சச்சுவுடன் செந்தாமரை Senthamarai-Neelu-Surulirajan-Sachu-Devathai 1979-1Senthamarai-Neelu-Surulirajan-Sachu-Devathai 1979-

“மன்னவன் வந்தானடி” 1975 படத்தில் செந்தாமரையுடன் ஜெயசுதாJayasudha-Senthamarai-Mannavan Vanthanadi 1975-

“மன்னவன் வந்தானடி” 1975 படத்தில் செந்தாமரையுடன் நாகேஷ்,  சிவாஜிகணேசன், மஞ்சுளா

Senthamarai-Nagesh-Mannavan Vanthanadi 1975-Senthamarai-Nagesh-Sivaji-Mannavan Vanthanadi 1975-Senthamarai-Manjula-Mannavan Vanthanadi 1975-Senthamarai-Manjula-Sivaji-Mannavan Vanthanadi 1975-

“நாளை உனது நாள்” 1984 படத்தில் செந்தாமரையுடன் விஜயகாந்த்Senthamarai-Naalai Unadhu Naal 1984-2Senthamarai-Naalai Unadhu Naal 1984-3Senthamarai-Naalai Unadhu Naal 1984-1Senthamarai-Naalai Unadhu Naal 1984-Senthamarai-Vijayakanth-Naalai Unadhu Naal 1984-

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் செந்தாமரைsenthamarai-enakku-nane-neethipathi-1986-2senthamarai-enakku-nane-neethipathi-1986-1senthamarai-enakku-nane-neethipathi-1986senthamarai-vinuchakkaravarthi-enakku-nane-neethipathi-1986

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் வி.கே.ராமசாமி, செந்தில், (சங்கர்) கணேஷுடன் செந்தாமரைsenthamarai-neethiyin-marupakkam-1985senthamarai-neethiyin-marupakkam-1985-1senthamarai-sankar-ganesh-senthil-neethiyin-marupakkam-1985senthamarai-v-k-ramasamy-neethiyin-marupakkam-1985

“அதிசயப்பிறவி” 1990 படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மனுடன் செந்தாமரை senthaamarai-adhisaya-piravi-1990senthaamarai-adhisaya-piravi-1990-1senthaamarai-lic-narasimhan-adhisaya-piravi-1990

“அதிசயப்பிறவி” 1990 படத்தில் நாகேஷுடன் செந்தாமரை senthaamarai-nagesh-adhisaya-piravi-1990

“அதிசயப்பிறவி” 1990 படத்தில் விஜயலலிதா, சின்னி ஜெயந்த், ரஜனிகாந்துடன் செந்தாமரை senthaamarai-vijayalalitha-rajinikanth-chinni-jayanth-adhisaya-piravi-1990

“குரு சிஷ்யன்” 1988 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் செந்தாமரை  senthamarai-guru-sishyan-1988-4senthamarai-guru-sishyan-1988-3senthamarai-guru-sishyan-1988senthamarai-guru-sishyan-1988-1senthamarai-guru-sishyan-1988-2senthamarai-vinu-chakravarthy-guru-sishyan-1988

“அன்னை அபிராமி” 1972 படத்தில் செந்தாமரைsenthamarai-annai-abirami-1972-4senthamarai-annai-abirami-1972-2senthamarai-annai-abirami-1972-1senthamarai-annai-abirami-1972-3senthamarai-annai-abirami-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில் செந்தாமரை, கே.எம்.நம்பிராஜன், குலதெய்வம் ராஜகோபாலுடன் ஏ.வீரப்பன்

a-veerappan-km-nambirajan-kuladeivam-senthamarai-annai-abirami-1972

Advertisements

2 comments on “Senthaamarai

  1. “ `நடிகர் செந்தாமரை, பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக் கூடாது!” – நடிகை கெளசல்யா
    பூவே பூச்சூடவா’ சீரியலைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள், அதில் வில்லத்தனங்களை அரங்கேற்றி வரும் யுவராணியைக்கூட மன்னித்துவிடுகிறார்கள். ஆனால், யுவராணிக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருக்கும் அவரின் அம்மா கௌசல்யாவை மன்னிக்கத் தயாராய் இல்லை. `கிழவிக்கு இந்த வயசுல வில்லத்தனத்தைப் பாருங்கய்யா’ எனத் திட்டித் தீர்க்கிறார்கள். 72 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டு, மக்களிடம் திட்டும் வாங்கிக்கொண்டிருக்கிற கௌசல்யா யார் என்பது அந்த சீரியலில் உடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கே தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுடன் மேடை நாடகங்கள், ரஜினி, கமலுடன் அதிகளவில் படங்கள்… என ஒரு காலத்தில் பரபரப்பான நடிகராக இருந்து மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவிதான் இந்தக் கௌசல்யா. சென்னை ஆழ்வார் திருநகரில் தனி ஆளாக வசித்துவரும் கௌசல்யாவின் வீட்டுக்குச் சென்றோம். வாசலில் பிரமாண்டமாக இருந்த செந்தாமரையின் புகைப்படம் நம்மை வரவேற்றது.

    `இறந்து 25 வருடம் ஆயிடுச்சு. ஆனா, இன்றைக்கும் நான் காலையில எழுந்தா முதல்ல வெளியே வந்து முகப்புல இருக்கிற இந்தப் போட்டோவுக்கு குட்மார்னிங் சொல்லிட்டுதான் பல் துலக்கவே போவேன். ஏன்னா, என்னைப் பொறுத்தவரை அவர் சாகலை, என்னோட வாழ்ந்துட்டுதான் இருக்கார். ஏதோ பைத்தியக்காரி மாதிரி பேசுறா கிழவினு நினைக்காத தம்பி. உண்மை அதுதான். உடம்புக்குதான் வயசாகும். மனசு இளமையானது. அதுல எண்ணம் நிரந்தரமானது” என்ற கௌசல்யா, ‘அவரைப் பத்தி இன்றைக்கு இன்டஸ்ட்ரியில இருக்கிறவங்களுக்கு என்ன தெரியும்!’ எனக் கேட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

    ”நான் எம்.ஜி.ஆர், நாடக மன்றத்துல இருக்க, அவர் சிவாஜி நாடகக் கம்பெனியில இருந்தார். ‘சுமைதாங்கி’னு ஒரு நாடகம். அதுல நாங்க ரெண்டுபேரும் அண்ணன் தங்கையா நடிச்சோம். ஆனா, அவரை எனக்கு சுத்தமாப் பிடிக்காது. முரட்டுத்தனமா ‘என்ன’னு அவர் கேட்டா, ‘ம்ம்… விளக்கெண்ணெ’னு நானும் பதிலுக்கு முறைப்பேன். எங்களுக்குள்ள மோதலாவே போயிட்டிருந்ததைக் `காதல்’னு கண்டுபிடிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டாங்க, ஆர்.ஆர்.லலிதா. கல்யாணத்துக்குப் பிறகும்கூட எங்களுக்குள்ள முட்டல் மோதல் நீடிச்சது.

    ஆனா, `திருடாதே’ படம் ரிலீசான பிறகு எனக்கும் பல வாய்ப்புகள் வர, அவரும் சினிமாவுல பிஸியாகிட்டதால எங்களுக்குள்ள சண்டைபோடக்கூட நேரமில்லாம போச்சு. ஒருத்தரை ஒருத்தர் பார்க்கக்கூட நேரமில்லாம போயிட்டே இருந்ததால, அதுக்குப் பிறகு கிடைக்கிற கொஞ்ச நேரத்துல சண்டை போட்டுட்டு இருப்போம். பிறகு, பொண்ணு வந்துட்டா. நான், என் புருஷன், என் புள்ளைனு இருக்காம, மாமியார், என்னோட அக்கா, அவ பிள்ளைங்கனு கூட்டுக் குடும்பமாவே இருந்தோம். அவர் நல்லா சம்பாதிச்சுப் போட்டார்; நல்லா குடும்பத்தைக் கவனிச்சிக்கிட்டார். என்னை ராணி மாதிரி நடத்தினார்.

    உடனே வாழ்க்கையில கஷ்டமே படலையானு கேட்கக் கூடாது. அதெல்லாம் நிறையவே பட்டிருக்கோம். ஏன்னா, அவருக்குப் பொய் சொல்லப் பிடிக்காது. கட் அண்ட் ரைட்டாப் பேசுவார்; கட்சியில இருந்தார். இதெல்லாம் அவரோட சினிமா வாய்ப்புகளைக் காலி பண்ணுச்சு. எம்.ஜி.ஆர், சிவாஜியேகூட , `நாடகங்களோட இவனை நிறுத்திடணும்னுதானே நினைச்சாங்க. தவிர, தி.மு.க-வுல இருந்ததாலேயும் சிலர் இவரைக் கூப்பிடப் பயந்தாங்க. ஆனா, காசு பணத்தை வெச்சு சந்தோஷத்தை அளவிடமாட்டார். மனசளவுல என்னை ராணி மாதிரிதான் வெச்சிருந்தார். கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கப் போக வேண்டாம்னு சொல்லிட்டார். நானும் சரினு அவருக்கு ஆக்கிப் போட்டுக்கிட்டு, சந்தோஷமா குடும்பத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். ரொம்பப் போட்டி பொறாமைகளைச் சந்திச்சுக்கிட்டே பல படங்கள்ல நடிச்சார். அதுல ரஜினி, சத்யா மூவிஸ், பாக்யராஜ்… இவங்களையெல்லாம் சும்மா சொல்லக் கூடாது. தங்களோட படங்கள்ல வெயிட்டான கேரக்டர்கள் பண்ண இவங்க தந்த இடமே இவரை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்துச்சு.

    அதேபோல பாலச்சந்தரும் இவருக்குப் படங்கள் தந்து உயரே வரக் கை கொடுத்தார். ஏன் ஹீரோவாக்கூட `அந்த ஜூன் 16-ம் நாள்’ங்கிற படத்துல நடிச்சாரேப்பா!

    கடைசியில சாகுறப்போகூட அந்த உயிர் நடிச்சபடியேதான் போச்சு. 29 வருடம் அவரோட வாழ்ந்தேன். சாகுறப்போ வீடு, தோட்டம்னு எல்லாமே அவர் சேர்த்து வெச்சுட்டுதான் போனார். ஆனா, எதுவுமே எனக்குக் கிடைக்கலை; இதுதான் நிஜம். இதை நான் என்னனு வெளியில சொல்ல… `நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டுப் போயிட்டார்’னு அவருக்கு அவப்பெயர் கிடைக்கிறதை நான் விரும்பலை. அதேசமயம் புள்ளைங்க கைவிட்டுட்டாங்கனு என் வாயால சொல்ல விரும்பலை. உடம்புலேயும் மனசுலேயும் தெம்பு இருக்கிற வரை உழைச்சுச் சாப்பிடலாமேனுதான், இப்போ சீரியல்ல நடிக்க வந்துட்டேன்.

    உண்மையிலேயே நாளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன வழிங்கிற நிலைமைதான். ஆனா, நான் கஷ்டப்படுறேன். எனக்கு உதவுங்கனு யார்கிட்டேயும் போய் நிற்க விரும்பலை. ஏன்… ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ பொற்கிழி தர்றேன்னு கூப்பிட்டப்போகூட போகலையே நான்! அப்படிப் போனா, இறந்த பிறகு, நான் அந்த மனுஷனை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகிடும். அவரு கடைசியா போட்டிருந்த செருப்பை இப்போவரை வெச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். வேலை கொடுனு அதிகாரமாக் கேட்பேன். அதுக்கான சம்பளத்தை வாங்கி, பொங்கிச் சாப்பிட்டுட்டுப் போறேன். ஏதாவது நோய்வாய்ப்பட்டு படுத்துடக் கூடாதுங்கிற பயம் மட்டும் மனசுக்குள்ள இருக்கு. அதை அந்த ஆண்டவன்கிட்ட விட்டுட்டேன்” என்றவர், ‘டப்பிங் போகணும், கண்ணா கிளம்பட்டுமா’ என அடுத்த வேலைக்கு ஆயத்தமானார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s