M. S. Viswanathan

. சு. விசுவநாதன்– (எம். எஸ். விஸ்வநாதன் அல்லது பொதுவாக எம்எஸ்வி), இயற்பெயர்-மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன்-பிறப்பு: 24 சூன் 1928) வயது-85-இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928-ஆம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பின்னணிப் பாடகர் பல்வேறு படங்களில் பின்னணி பாடியுள்ளார். கிளபம் /ஆர்மோனியம் /கின்னரப்பெட்டி போன்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்.

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள். உடல்நல குறைவு காரணமாக, தன்னுடைய 30 வயதில் (1952) சி. ஆர். சுப்புராமன் அவர்கள் மறைந்தார். அவருடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள் . தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் . ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை 700 படங்களுக்கு இணைந்து இசையமைத்தார்கள். இவர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவுசெந்தமிழ்ப் பாட்டுசெந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளார் . 1995-ல் சத்யராஜ் அவர்கள் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள்.. 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் “சித்ராலயா”கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங்,கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களிடம் மற்ற இயக்குனர்களை விட அதிகமாக வேலை பார்த்திருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜாஅ. இ. ரகுமான்கங்கை அமரன்தேவாயுவன் சங்கர் ராஜாஜி. வி. பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார்.

நன்றி:-Wikipedia

ImageImageImage

சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் காட்சியில் எம்.எஸ்.வி. தனது குழுவினரோடும் சௌந்தரராஜனோடும்MSV - Sarver Sundaram AMSV - TMS - Sarver Sundaram-AMSV - TMS-Sarver Sundaram-A

1942-இல் கண்ணகி படத்தில் நடித்ததற்குப் பின் நடிகனாக சிறந்ததொரு கதாபாத்திரத்தில் ‘மெஸ் விஸ்வநாதனாக’ ‘காதல் மன்னன்’ என்ற படத்தில் 1998-இல் நடித்ததிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.msv-kadhal-mannan-1998msv-kadhal-mannan-1998-1

”தாய் மூகாம்பிகை” 1982 படத்தில் பாலமுரளி கிருஷ்ணா சீர்காழி எஸ்.கோவிந்தராஜனுடன் எம்.எஸ்.விஸ்வநாதன்

MSV-Thaai Mookambigai 1982-MSV-Thaai Mookambigai 1982-1Balamurali Krishna-MSV-Seergazhi-Thaai Mookambigai 1982-

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

சென்னை, : பிரபல இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. உடல்நலக்குறைவு காரணமாக,  சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அங்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் 4.15 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து சென்னை  சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தகனம்,  பெசன்ட் நகர்  மின்மயானத்தில் இன்று காலை நடக்கிறது. மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த சில வருடங்களுக்கு முன் காலமானார்.  இவர்களுக்கு கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் ஆகிய மகன்களும்  லதா மோகன், மது பிரசாத் மோகன், சாந்திகுமார் ஆகிய மகள்களும்  உள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியுடன் இணைந்து பல்வேறு மொழிகளில் சுமார் 1200 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். தனியாக 500  படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு ரத்து: எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவை ஒட்டி,  இன்று (புதன்கிழமை) ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைவர்கள்  அஞ்சலி: முதல்வர் ஜெயலலிதா சார்பில், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்   எம்.எஸ்.விஸ்வ நாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர்  ஜி.கே.வாசன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன்,  விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், பிரபு, டி.ராஜேந்தர், சிவக்குமார், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன்  உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=155922

எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி- ரஜினிகாந்த் மரியாதை

பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜூலை 14,2015, 1:48 PM IST

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் சாந்தோமில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிச் சடங்குகள் நாளை (புதன்கிழமை) காலை நடை பெறும் என்று அவரது மகன் கோபி தெரிவித்தார். எம்.எஸ்.விஸ்வ நாதனின் உடல் சாந்தோமில் உள்ள அவர் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்  செல்லப்படும். அங்கு அவர் உடல் தகனம் செய்யப்படும்.

எம்.எஸ்.விஸ்வநாதன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், திரையுலக பிர முகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ், பின்னணி பாடகி வாணி ஜெயராம், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் காலையிலேயே வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன், விடுதலை சிறுத் தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். நடிகர்கள் பிரபு, டி.ராஜேந்தர், சிவக்குமார், பட அதிபர் ஏ.வி.எம். சரவணன், பின் னணி பாடகிகள் சுசீலா, ஜானகி, சீர்காழி சிவசிதம் பரம், மாணிக்கம் விநாயகம், நித்யஸ்ரீ மகாதேவன் ஆகி யோரும் அஞ்சலி செலுத் தினர்.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச் சர்கள் நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வ நாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.எம்.எஸ்.விஸ்வநாதன் குடும்பத்தினரிடம் முதல்- அமைச்சர் சார்பில் ஆறு தலும் கூறினர்.’

நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  நடிகர் விவேக், நடிகை  குஷ்பு,  உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பட தொழிலாளர் (பெப்சி) சங்க தலைவர் ஜி.சிவா வெளியிட்ட அறிக்கையில்  கூறிருப்பதாவது:-

மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற  இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசை யமைப்பாளர்  எம்.எஸ். விஸ்வநாதன்  இன்று நம்மை எல்லாம்  விட்டு பிரிந்து இறைவனிடமும் இயற் கையிடமும், இசையிடமும் கலந்து விட்டார். அவரு டைய ஆத்மா   சாந்தி அடைய   தென்னிந்திய  திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்   சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு,    அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நாளை  படப்பிடிப்புகளை    ரத்து செய்யப்படுகிறது என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம்.என்று கூறி உள்ளார்.

5 comments on “M. S. Viswanathan

 1. உணர்வு பூர்வமான பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார். டிஎம்எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால் அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர். மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டிஎம்எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

  “நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அது மட்டுமன்றி இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை. எனவே மன்னிக்க வேண்டும், இந்தப் பாடலை என்னால் பாட முடியாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டிஎம்எஸ்.

  “நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும் குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும். எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும்.” என்று டிஎம்எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்எஸ்வி.

  “அப்படியா? இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?” என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டிஎம்எஸ்.

  ஆனால் எம்எஸ்வி தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. “நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இந்தப் பாடலும் உங்கள் பாடல்களில் மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத்தான் போகிறது’ என்று சொல்லிய எம்எஸ்வி டிஎம்எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.

  பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள். பாடலைக் கேட்ட நடிகர் திலகம் “உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

  அவரிடம் காரணம் கேட்டபோது அவர் சொன்னார். “மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்எஸ்வி அவர்கள். டிஎம்எஸ் மிகவும் அபாரமாக இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார். இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன். டிஎம்எஸ்ஸும், எம்எஸ்வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும். அதனால்தான் படப்பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்” என்றாராம் சிவாஜி.

  சொன்னது போலவே அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து அந்த மெட்டையும் டிஎம்எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம் மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.

  அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா? சாந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற “யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?”

 2. ஆண்டுகள் ஐம்பது உருண்டு ஓடிவிட்டாலும் தேய்பிறைபோல் தேய்ந்து மறையாமல் இன்றும்கூட பூரணநிலவாக எனது மனவானில் உலாவரும் இனிமையான நிலவு “யார் அந்த நிலவு”. கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான கவிதைக்கு மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசையும் T.M.S ஐயாவின் உயிரோட்டமான குரலும் நடிகர்திலகத்தின் உருக்கமான நடிப்பும் இந்த நிலவை தமழ்த்திரை இசைவானின் உச்சிக்கே அழைத்துச்சென்றுவிட்டன.

 3. கேட்டவரெல்லாம் பாடலாம் – தங்கை

  கே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர் இவர்களுடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகளும்.

  திருலோக் சிச்சுவேஷனைச் சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக் கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.

  முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன்தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.

  அப்போது கண்ணதாசன் கோபத்துடன் “விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக் காட்டி இதுதான்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே” என்று சொல்ல எம்எஸ்வி முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.

  “சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று உட்கார்ந்துவிட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.

  அப்போது வாசலில் “சார்..போஸ்ட்” என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து “யப்பா அந்த போஸ்ட்மேனை உள்ளே கூப்பிடு” என்றார். “அவனை எதுக்கு கூப்பிடுறீங்க?” என்று பாலாஜி கேட்க “பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்” என்றார்.

  போஸ்ட்மேனும் வந்தார். அவரிடம் “தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?” என்று கேட்க “சரி, சொல்லுங்க சார்” என்றார்.

  “இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக் காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்” என்று சொல்லி விட்டு “விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு” என்று சொல்ல எம்எஸ்வியும் வாசித்தார். கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அந்த போஸ்ட்மேன் “சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்” என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.

  “ரொம்ப நன்றிப்பா” என்று போஸ்ட்மேனை அனுப்பி வைத்தனர்.

  புன்னகையுடன் பாலாஜியைப் பார்த்தார் இயக்குனர். “பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்” என்றார்.

  அப்போது கண்ணதாசன் “விசு, அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்ல சொல்ல எழுதிக்கிட்டே வா” என்று வழக்கம் போல வரிகளைக் கொட்டத் துவங்கினார்.

  கேட்டவரெல்லாம் பாடலாம்
  என்பாட்டுக்கு தாளம் போடலாம்
  பாட்டினிலே சுவையிருக்கும்
  பாவையரின் கதையிருக்கும்
  மனமும் குளிரும் முகமும் மலரும்
  ஓ….ஓ….ஓ….ஓ…ஓஓஓஓஓஓஓஓ

  பாட்டுக்கு வீடியோ கிடைக்கவில்லை. இங்கே கரவோகே முறையில் வரிகளைப் பார்த்துக் கொண்டே பாட்டை கேட்கலாம்.

  பாடல் அருமையாக அமைந்ததுடன், 1967 ல் டாப் டென் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

  ஒரு பொதுஜனப் பிரதிநிதி தேர்ந்தெடுத்த மெட்டு இது.

  இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இது போல நாலைந்து ட்யூன்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, எம்எஸ்வி அவர்களைப்பார்த்து கவிஞர் கண்ணதாசன் “விசு, வாசல்லே யாராவது போஸ்ட்மேன் வர்ரானா பார்” என்று கிண்டலடிப்பார்.

  • இந்த பாடல் உருவான கதையை அந்நாளைய நினைவுகளுடன் மீட்டிப்பார்க்கச் செய்திருக்கிறீர்கள் திரு.சேதுராமன். காலத்தால் அழிக்க முடியாத பாடல் இப்பாடல். எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காது. மெல்லிசை மன்னரின் தேனிசை கானம். பொதுவாகவே பாலாஜியின் அந்நாளைய படங்களில் அத்தனையுமே இனிமையாகத்தான் இருக்கும். நன்றி.

 4. கேட்டவரெல்லாம் பாடலாம்
  என்பாட்டுக்கு தாளம் போடலாம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s