“Ammukkutty” Pushpamala

“அம்முக்குட்டி” புஷ்பமாலா– எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். வல்லவன் ஒருவன் படத்தில் ‘அம்முகுட்டி ஹோட்டல்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் பெண்ணாக, தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார். அது பெரும் வரவேற்புப் பெற்றதால், ‘அம்முகுட்டி புஷ்பமாலா’ என்றே என் பெயர் ஆனது. காதலித்தால் போதுமா, கொஞ்சும் குமரி, நான் வாழவைப்பேன், எதிரிகள் ஜாக்கிரதை, நான்கு கில்லாடிகள், மகளே உன் சமது, வெகுளிப்பெண், காரைக்கால் அம்மையார், என்னைப் போல் ஒருவன், ரகசிய போலீஸ் 115 போன்ற நாநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பெரும்பான்மையானவற்றில் இவர் பங்குபெற்றுள்ளார். 1965-1975- களில் தமிழ்ப்படங்களில் இவரது பங்களிப்பு அளப்பரியது. தற்போதும் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வறுமை நிலையில் உள்ளார். தற்போது இவருக்கு வயது 70 இருக்கலாம். இவரது கதை மிகவும் சோகமானது. அது குறித்து  http://www.yarl.com/forum3/index.php?showtopic=37068 வலைத்தளத்தில் வாசித்த ஒரு செய்தியைக் கீழே தொடர்ந்து படியுங்கள்.

வெள்ளித் திரையில் அழகு தேவதையாய் மின்னியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். ஆனால் இன்று சொத்துக்கள் பறிபோய், சொகுசு வாழ்வு கைநழுவிப் போய் சாப்பாட்டுக்குக்கூட வழி யில்லாத நிலையில் இருக்கிறார் நடிகை புஷ்பமாலா.

பெரியார் மாவட்டம், பெருந்துறை, வண்ணாம்பாறையில் நெடிய சந்திலுள்ள ஒரு சிறு அறை கொண்ட வீட்டில்தான் புஷ்பமாலாவின் வாழ்வு கடந்து கொண் டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘1958ல் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி யின் அண்ணன் மகளாக அறிமுகமானேன். முதல் படத்திலேயே சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. எல்லாப் படங்களிலும் 2ஆம் நாயகி வேடங்கள்தான். வல்லவன் ஒரு வன் படத்தில் ‘அம்முகுட்டி ஹோட்டல்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் பெண்ணாக, தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தேன். அது பெரும் வரவேற்புப் பெற்றதால், ‘அம்முகுட்டி புஷ்பமாலா’ என்றே என் பெயர் ஆனது.

அந்தப் படத்திலிருந்து நகைச்சுவை வேடங்களும் என்னைத் தேடி வந்தன. எம்.ஜி.ஆரோடு அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன் என்று ஏறக்குறைய அவரின் எல்லாப் படங்களிலும் நடித்தேன். கடைசியாக விஜய்காந்தின் ‘நெறஞ்ச மனசு’ படத்தில் நாயகி சூசனின் பாட்டியாக நடித்தேன்.

அடிமைப் பெண் படத்தில் சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன்.

படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகங்களிலும் நடித்து வந்தேன். எந்த ஊருக்குச் சென்றாலும் எனது அறையில் என்னுடைய தோழி ராஜாத்திஅம்மாளும் நானும் ஒன்றாக இருப்போம். ஒரு பக்கம் படவாய்ப்புகள் வரத் தொடங்கியபோது, சொத்துக்களும் சேரத் தொடங்கின. சென்னையில் பெரிய பங்களா ஒன்று வாங்கினேன். என் அம்மாதான் என்னுடைய கால்ஷீட் முதல் வீட்டு நிர்வாகம் வரை பார்த்துக்கொண்டார். எங்கள் வீட்டில் அம்மாவுடன் பிறந்த அண்ணன், தம்பிகள், அக்காக்கள் என எல்லோர் குடும்பமும் ஒன்றாகவே வசித்தோம். ஒவ்வொரு வேளையும் கல்யாண வீடுபோல் 25 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அப்போதே எங்கள் குடும்ப எண்ணிக்கையைப் பார்த்து மூன்று கார்கள் வாங்கினேன்.

என் ஒருவள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கக் கூடாது என்பதற்காக, வீட்டிலிருந்த சொந்த பந்தங்கள் பெயரிலெல்லாம் நிறைய சொத்துக்கள் வாங்கிப் போட்டார் என் அம்மா. அம்மாவின் உடல்நிலை நன்றாக இருந்த வரை கலகலப்பாக இருந்த வீடு, அவர் படுத்த படுக்கையான பிறகு களையிழந்து போனது.

அம்மா இறந்தபிறகு, சொத்துக்களோடு சொந்தங்களும் மெல்ல விலகிக் கொண்டன. அம்மா இறந்த துக்கத்தில் படப்பிடிப்பிற்குச் செல்லாமல் இருந்ததால், பட வாய்ப்புகள் கைமாறிப் போனது. வாய்ப்புகளும் குறைந்து, வருமானமும் நின்று போன நிலையில், கணக்குப் பார்த்தபோதுதான், எல்லா சொத்துக்களும், சொந்தங்கள் பெயரில் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் பெயரில் எழுதி வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்துகொண்டேன். ஆதரவில்லாமல் இருந்ததால் யாரும் எனக்கு அவற்றைத் திருப்பித் தரவில்லை.

நடிகர் சங்கத்தில் அப்போது முறையிட்டேன். ஆனால் அதைப்பற்றி விசாரிப்பதற்கு அன்று அவர்களுக்கு நேரமில்லை. பல ஆண்டுகள் சங்கப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த கதி! நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டபோது, அப்போது ஹிந்தி டியூஷனுக்கு என்னுடன் வந்த வைஜெயந்தி மாலா எனக்காக பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். அப்போதெல்லாம் பல நடிகர், நடிகைகளுக்கு உதவ நான் கோரிக்கைகள் வைப்பேன். இன்று எனக்காக பரிந்து பேசத்தான் ஆள் இல்லை.

சிவகுமார் என்னுடைய நிலையைக் கேள்விப்பட்டு வீட்டிற்கே வந்து மருத்துவச் செலவிற்கும், சாப்பாட்டிற்கும் உதவினார். அது கொஞ்சகாலம் வரை எனக்கு உதவியாய் இருந்தது.

எம்.ஜி.ஆர். என்னை அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்த்ததோடு தேர்தல் சமயங்களில் பிரச்சாரத்திற்கும் என்னைப் பயன்படுத்தினார். ஆனால் இப்போது அந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. இன்றைய முன்னணி நடிகைகள், ஊரையே கூட்டி, விருந்து வைத்து அவர்களை நம்முடனே வைத்துக் கொண்டால் என்ன நிலைமையாகும் என்பதை, என் வாழ்க்கையைப் பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்’’ என்றார் கண்ணீர் மல்க.

அரிதாரம் பூசி அழகுராணிகளாய் பவனி வந்தவர்கள் இன்று ஒருவேளைச் சாப்பாட்டிற்கே அல்லலுறுவதைப் பார்க்கும்போது, ‘சினிமா உலகம் ஒரு கனவு உலகம்’ என்று சொல்லுவது சரியாகத்தான் இருக்கிறது.

1971-இல் வெளிவந்த வெகுளிப்பெண் படத்தில் அம்முக்குட்டி புஷ்பமாலாImage

Image

Image

Image

Image

Image

Image

வெகுளிப்பெண் படத்தில் அம்முக்குட்டி புஷ்பமாலாவுடன் நடிகர் ஐ.எஸ்.ஆர்

Image

Image

“தாலாட்டு” படத்தில் அம்முகுட்டி புஷ்பமாலாAMMAKUTTY- Thengai - Thalaattu -AMMAKUTTY- Thengai - Thalaattu -1AMMAKUTTY- Thengai - Thalaattu -2

காரைக்கால் அம்மையார் (1973)  படத்தில் அம்முக்குட்டி

Ammukutty Pushpamala-Karaikkal Ammaiyar-1973-

என்னைப் போல் ஒருவன் [1976] படத்தில் அம்முகுட்டி புஷ்பமாலா தனித்தும் குமாரி ருக்மணியுடனும்Ammukkutty Pushpamala-Ennai Pol Oruvan 1976- Ammukkutty Pushpamala-Kumari Rukmoni-Ennai Pol Oruvan 1976-

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் பலவித முகபாவனைகளுடன்

அம்முகுட்டி புஷ்பமாலா நாகேஷ் மற்றும் உசிலைமணியுடன்Ammukutty Pushpamala-Nagesh-Ragasiya Police 115- Ammukutty Pushpamala-Nagesh-Ragasiya Police 115-1 Ammukutty Pushpamala-Nagesh-Ragasiya Police 115-2 Ammukutty Pushpamala-Nagesh-Ragasiya Police 115-3 Ammukutty Pushpamala-Nagesh-Ragasiya Police 115-4 Ammukutty Pushpamala-Nagesh-Usilai-Ragasiya Police 115- Ammukutty Pushpamala-Ragasiya Police 115-1 Ammukutty Pushpamala-Ragasiya Police 115-3

ஏன் ? [1977] படத்தில் ‘அம்முகுட்டி’ புஷ்பமாலா

Ammukutty Pushpamala-En 1974-

ஏன் ? [1977] படத்தில் மாஸ்ரர் ஆதிநாராயணன், லட்சுமி, என்னத்தே கன்னையாவுடன்  ‘அம்முகுட்டி’ புஷ்பமாலா

Ammukutty Pushpamala-Ennathe Kannaiah-Adi-Lakshmi-En 1974-Ammukutty Pushpamala-Ennathe Kannaiah-En 1974-

ஏன் ? [1977] படத்தில் என்னத்தே கன்னையாவுடன்  ‘அம்முகுட்டி’ புஷ்பமாலாAmmukutty Pushpamala-Ennathe Kannaiah-En 1974-1

ஏன் ? [1977] படத்தில் ‘லட்சுமியுடன் அம்முகுட்டி’ புஷ்பமாலாAmmukutty Pushpamala-Lakshmi-En 1974-Ammukutty Pushpamala-Lakshmi-En 1974-1

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் அம்முகுட்டி புஷ்பமாலா Ammukkutti Pushpamala- Thenkai-Naan Vazhavaippen 1979-Ammukkutti Pushpamala-Thenkai-Naan Vazhavaippen 1979-

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் வரதராஜனுடன் அம்முகுட்டி புஷ்பமாலா Ammukkutti Pushpamala-Varadharajan- Naan Vazhavaippen 1979-

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் ரி.வி.வரதராஜன், தேங்காய் சீனிவாசனுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukkutti Pushpamala-Varadharajan- Thenkai-Naan Vazhavaippen 1979-Ammukkutti Pushpamala-Varadharajan- Thenkai-Naan Vazhavaippen 1979-2Ammukkutti Pushpamala-Varadharajan-Thenkai-Naan Vazhavaippen 1979-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukkutty-Kumara Vijayam 1976-Ammukkutty-Kumara Vijayam 1976-1Ammukkutty-Kumara Vijayam 1976-2

“குமாரவிஜயம்” [1976] படத்தில் ஜெயசித்ராவுடன் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukkutty-Jayachitra-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் பெரியார் ராஜவேலு, எம்.ஜி.சோமன், தேங்காய் சீனிவாசனுடன் அம்முகுட்டி புஷ்பமாலாPeriyar Rajavelu-Ammukkutty-Thengai-Kumara Vijayam 1976-Ammukkutty-Thengai-Kumara Vijayam 1976-

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் தங்கவேலுவுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukutty Pushpamala-Thangavelu-Sowbhagyavathi 1957-1

“அடிமைப் பெண்” 1969 படத்தில் ராஜஸ்ரீயுடன் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukkutti Pushpamala-Adimaippenn 1969-1Ammukkutti Pushpamala-Adimaippenn 1969-Ammukkutti Pushpamala-Rajasree-Adimaippenn 1969-Ammukkutti Pushpamala-Rajasree-Adimaippenn 1969-1

“அடிமைப் பெண்” 1969 படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukkutti-JP.Chandrababu-Adimaippenn 1969-Ammukkutti-JP.Chandrababu-Adimaippenn 1969-1

“ஆடு புலி ஆட்டம்” 1977 படத்தில் கமலஹாசனுடன் அம்முக்குட்டி புஷ்பமாலாAmmukkutty Pushpamala-Aadu Puli Aattam 1977 -Ammukkutty Pushpamala-Kamal-Aadu Puli Aattam 1977 -

“ஆடு புலி ஆட்டம்” 1977 படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் அம்முக்குட்டி புஷ்பமாலாAmmukkutty Pushpamala-Sripriya-Aadu Puli Aattam 1977 -Ammukkutty Pushpamala-Sripriya-Aadu Puli Aattam 1977 -152

’’பட்டினத்தார்’’ 1962 படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukkutti P.A.Pushpamala-Pattinathar 1962-Ammukkutti P.A.Pushpamala-Sattampillai-Pattinathar 1962-54

”ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது”1983 படத்தில் “அம்முக்குட்டி’’ புஸ்பமாலா

ammukutty-pushpamala-oru-pullanguzhal-aduppudhigirathu-1983-1ammukutty-pushpamala-oru-pullanguzhal-aduppudhigirathu-198356

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில்  அம்முகுட்டி புஸ்பமாலாவுடன் ஏ.கருணாநிதிAmmukkutty Pushpamala-Indira En Selvam 1962-Ammukkutty Pushpamala-Indira En Selvam 1962-1Ammukkutty Pushpamala-A.Karunanidhi-Indira En Selvam 1962-Ammukkutty Pushpamala-A.Karunanidhi-Indira En Selvam 1962-1

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் பண்டரிபாய், அம்முகுட்டி புஸ்பமாலாவுடன் ஏ.கருணாநிதிAmmukkutty Pushpamala-A.Karunanidhi-Pandari Bai -Indira En Selvam 1962-61

“தங்க ரத்தினம்” 1960 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் அம்முகுட்டி புஸ்பமாலாAmmukutti Pushpamala-Thanga Rathinam 1960 -2Ammukutti Pushpamala-Thanga Rathinam 1960 -3Ammukutti Pushpamala-Thanga Rathinam 1960 -1Ammukutti Pushpamala-Thanga Rathinam 1960 -Ammukutti Pushpamala-KA.Thangavelu-Thanga Rathinam 1960 -1Ammukutti Pushpamala-KA.Thangavelu-Thanga Rathinam 1960 -

“தங்க ரத்தினம்” 1960 படத்தில் எஸ்.எஸ்.ஆருடன் அம்முகுட்டி புஸ்பமாலாAmmukutti Pushpamala-SSR-Thanga Rathinam 1960 -68

”மாம்பழத்து வண்டு” 1979 படத்தில் அம்முகுட்டி புஸ்பமாலாAmmukutty Pushpamala-Mambalathu vandu 1979-Ammukutty Pushpamala-Mambalathu vandu 1979-170

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukutty Pushpamala-Ninaippatharkku Neramillai 1963-Ammukutty Pushpamala-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் சி.பி.கிட்டானுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukutty Pushpamala-CP.Kittan-Ninaippatharkku Neramillai 1963-

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் சந்திரகாந்தாவுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukutty Pushpamala-Chandrakantha-Ninaippatharkku Neramillai 1963-72

’ஒப்பந்தம்’ 1983 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukkutty Pushpamala-Oppantham 1983-Ammukkutty Pushpamala-SA.Asokan-Oppantham 1983-

’ஒப்பந்தம்’ 1983 படத்தில் கவுண்டமணியுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukkutty Pushpamala-Goundamani-Oppantham 1983-

’ஒப்பந்தம்’ 1983 படத்தில் கவுண்டமணி, ஸ்ரீபிரியாவுடன் அம்முகுட்டி புஷ்பமாலா

Ammukkutty Pushpamala-Sripriya-Oppantham 1983-01Ammukkutty Pushpamala-Sripriya-Goundamani-Oppantham 1983-0177

‘பெண்ணே நீ வாழ்க’ 1967 படத்தில் நாகேஷுடன் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukutty Pushpamala-CK.Nagesh-THIRUDAN 1969-

‘பெண்ணே நீ வாழ்க’ 1967 படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாய், சி.கே.சரசுவதி, நாகேஷுடன் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukutty Pushpamala-CK.Nagesh-CK.Saraswathy-MS.Sundaribhai-THIRUDAN 1969-79

‘வல்லவன் ஒருவன்’ 1966 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukutty Pushpamala-Vallavan Oruvan 1966-Ammukutty Pushpamala-Thengai-Vallavan Oruvan 1966-

‘வல்லவன் ஒருவன்’ 1966 படத்தில் ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி, தேங்காய் சீனிவாசனுடன் அம்முகுட்டி புஷ்பமாலாAmmukutty Pushpamala-Thengai-L.Vijayalakshmi-Jaishankar-Vallavan Oruvan 1966-82

 

9 comments on ““Ammukkutty” Pushpamala

 1. நல்லதொரு நகைச்சுவை நடிகை .மனோரமா சச்சு போல் வருவார் என்று எதிர்பார்கபட்ட நடிகை . தங்கபதக்கம் திரை படத்தில் இரண்டாவது சோவின் மனைவியாக வருவார்

 2. அம்முகுட்டி புஷ்பமாலா பற்றி 2008 இல் வெளிவந்த செய்தி குறிப்பு

  In a goodwill gesture, AIADMK General Secretary J Jayalalithaa today gave an assistance of Rs 25,000 to yesteryear actress Ammukutty Pushpamala.

  Ms Jayalalithaa gave the assistance to the actress when she called on her at her Poes Garden residence and explained her poor financial condition.

  The AIADMK supremo also said Pushpamala, who had acted along with Ms Jayalalithaa in some of the films, would be given a monthly assistance of Rs 5,000 to meet her family expenditure.

  Ms Pushpamala, after receiving the assistance, thanked Ms Jayalalithaa for her gesture, an AIADMK release said.

 3. கணபதி கிருஷ்ணன் இதே செய்தி தினத்தந்தியிலும் வந்தது. அதிலும் 25,000 ரூ கொடுப்பது சம்பந்தமான செய்தி மட்டுமே உள்ளதேயன்றி அம்முக்குட்டி புஷ்பமாலாவைக் குறித்த வேறு எந்த விவரமும் இல்லை. ஆங்கிலச் செய்தியை இங்கே பதிவு செய்துள்ளமைக்கு மிக்க நன்றி கணபதி கிருஷ்ணன்.

 4. she acted in 1974 low budget b/w tamil film – samarpanam acted by vijaykumar and vidhubala…

  additional info : vijayakumar and vidhula -pair was already acted and debut in 1973 ponnuku thangamanasu…along with sivakumar and jayachithra.. Also, poet muthulingam first song debut on this movie…

  • AVM. தயாரிப்பில் SS ராஜேந்திரன்- விஜயகுமாரி நடிப்பில் வெளிவந்த காக்கும் கரங்கள் படத்தில் ராஜேந்திரன் அவர்களின் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்தவர் இந்த அப்புக்குட்டி புஷ்பமாலாவா….?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s