Kalpana

கல்பனா- 8.7.1943-இல் பிறந்து 12.5.1979 இல் இறந்தார்.வயது-36. தமிழ்ப் படங்களில் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சாது மிரண்டால், கட்டிலா தொட்டிலா போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார், மலையாளத்தில் ஸ்கூல் மாஸ்டர், காட்டு மல்லிகா போன்ற படங்களிலும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாகவும்  நடித்தவர்.தெலுங்கு மொழியிலும் பிரதான கதாநாயகர்களுடன் சில படங்களில் நடித்துள்ளார். இவர் 1979-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். கல்பனா குறித்த மேலும் விவரங்கள் கீழே ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகியிருந்ததைக் காணலாம்.

Kalpana – (8 July 1943 – 12 May 1979), Aged-36-born Sharat Lata was a Kannadafilm actress. She was affectionately referred to as Minugu Taare (“A Shining Star”) among the film fraternity. She is widely recognized as one of the greatest actresses of Kannada cinema who enjoyed both fan following and critical acclaimations showering upon her film after films. She made her screen debut as a lead actress in the 1963 released Saaku Magalu directed by veteran B.R. Pantulu. During a career that spanned from the early 1960s to the late 1970s, Kalpana appeared in numerous commercially successful as well as critically appreciated films, many of which featured her alongside actor Rajkumar. She worked in few TamilTulu and Telugu films as well. Majority of her successful films were incidentally female centric that gave ample scope for her performances.

One of her best-known roles was that of ‘Kaveri’ in the Multi-awarded film Sharapanjarareleased in 1971, a performance that won her Karnataka State Film Award for Best Actressfor that year. Her portrayal of the highly spirited and complex role who fights her mental trauma won her the largest fan following ever for a Kannada actress. Her association with the veteran film maker Puttanna Kanagal both professionally and personally became the talk of the town back in 1970’s. They both went on to work successfully in many commercially and critically successful films until they fell apart with each other.

Kalpana committed suicide and met with her death on 12 May 1979 after her alleged failed romance. Her career was in decline during the time she died.

Kalpana was born to a Tulu speaking couple, Krishnamurthy and Janakamma, as Sharat Lata in South Canara district of Karnatakastate. She was highly passionate about acting and took part in all the talent competitions held at her school. She was also very much conscious about the then recent style statement and was always had her own distinct style in her outfits and attitude.

Kalpana was recruited to the Kannada film industry in 1963 by director B.R. Pantulu for his Rajkumar starrer Saaku Magalu. However, it was the 1967 released Belli Moda that brought her to the forefront. This role portrayal of hers was instantly accepted and she soon catapulted to the top position among the actresses of 1960’s. She dominated the Kannada film industry during the late 1960s and 1970s and was critically acclaimed for some of her career best roles in author backed movies like SharapanjaraGejje PoojeBelli Moda,Eradu KanasuKappu BilupuBayalu DaariGandhada Gudi and Bangarada Hoovu. She worked with almost all the leading actors and directors of her time. Her most frequent co-stars were RajkumarGangadhar and Udaya KumarP. Susheela and S. Janaki were the regular voices behind her songs in the films. She gave a tiff competition to her contemporaries such as JayanthiBharathiAarathi,Manjula among others.

Initially she was the most favored heroine of ace director Puttana Kanagal. Their association produced some of the finest movies in the history of Kannada cinema. Majority of their films had strong hard hitting messages which were treasured in the cinema history. Kanagal groomed Kalpana to a great extent and they were also romantically linked by the media, much to their denials. However they fell apart due to the misunderstandings and Kanagal went on to groom other heroines like Aarthi and Padma Vasanti while Kalpana featured in some average and above average films later on. All her efforts to resurrect her career failed. Even the later moves which she acted with Dr. Rajkumar ( Daari Tappida Maga and Eradu kanasu) Ananth Nag (Bayaludaari ) were hits, they failed to do any good to her. By 1977 she had no movies in hand. She then started focusing on drama companies in North karnataka and started playing in them. She mainly worked in Gudigeri Basavaraj’s drama company. With mounting debts and diminishing film offers she had no choice.

She had also acted in a few Tamil and Telugu movies, such as Madras To Pondicherry. This film was later made in Hindi, starringAmitabh Bachchan and Aruna Irani in leading roles. Both the films were very successful at the box office. She also acted in Koti Channayya, a Tulu movie, directed by Dr. Shivaram Karanth.

Kalpana was a fashion icon of her times. Her elegance, taste and sophistication in dressing could not be matched by other female stars of her time. The mega sleeve blouses, frill blouses are her contribution to Karnataka’s style. Some of her fashion statements are big ear rings, big rings in the hand, brocade silk saris, chiffon saris and long necklaces.

Suicidal Death

Kalpana’s high profile career ended with her tragic suicide in 1979; in Gotur IB, near SankeshwarBelgaum district of Karnataka state. She had a brief marriage with Gudigeri Basavaraj, the owner of the drama company she was working. On May 11, 1979 night, she had a terrible fight with him and it turned to physical abuse. She decided to walk out of the marriage and move to Bangalore. Basavraj promised her that he will come next day afternoon and then drop her to Bangalore. However when he failed to turn up, Kalpana became depressed and then she swallowed 14 sleeping pills and diamond from her ring and committed suicide.

Kalpana’s last days were depressing. The Kannada film industry where she reigned as leading actress forgotten her. From a highly paid actress, her daily earning came down to mere 800 Rs. When she died she had no films in hand. Her younger brother, whom she wanted to groom as a leading cameraman, turned wayward.

The incident took the entire South Indian film fraternity and film lovers to deep shock and pain.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ்-டூரிங் டாக்கீஸ் பகுதியில் 20.3.2015 அன்று வெளியாகியிருந்த கல்பனா குறித்த கட்டுரை.

கல்பனா எனும் கண்ணீர்க் கவிதை!

Updated: March 20, 2015 11:55 IST

ஆர்.சி. ஜெயந்தன்

கேரளம் இன்று தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வருவதுபோன்று அன்று கர்நாடகம் கருணை காட்டியது. கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழர்களும் பாசத்தைக் கொட்டினார்கள். சரோஜா தேவியைப் போல இவரும் இங்கேயே தங்கிவிட மாட்டாரா எனத் தமிழ் ரசிகர்கள் ஏங்கினார்களா என்று தெரியவில்லை. ஆனால் தன் தாய்மொழித் திரைக்குத் தன்னைப்போல் ஒரு தனிப்பெரும் நாயகி தேவை என்று கன்னடம் திரும்பினார். இந்தியத் திரையில் யாருமே நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.

20 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயதில் தற்கொலை செய்து கொண்டது வரை 16 ஆண்டுகள் கதாநாயகியாக மட்டுமே அரிதாரம் பூசியிருக்கிறார். கருப்பு வெள்ளையில் பயணத்தைத் தொடங்கி வண்ணப்படங்களில் வண்ணக் கோலங்கள் வரைந்து மறைந்த அந்தக் கன்னடத்துக் கண்ணீர்க் கவிதை வேறு யாருமல்ல.. ‘மினுகு தாரா’(மின்னும் தாரகை) என்று கர்நாடக மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட கல்பனாதான்.

திரையிலும் கதாநாயகிக் கனவு

பீம்சிங் தயாரிப்பில் இரட்டை இயக்குநர்கள் திருமலை மகாலிங்கம் எழுதி இயக்கிய தமிழின் முதல் ரோடு மூவியான ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’(1966) படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் கல்பனா. சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் வீட்டை விட்டு ஓடிவரும் ஓர் இளம்பெண் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்று நடித்தார்.

ஆனால் அதற்கு முன்பே 1963-ல் பி.ஆர். பந்துலு கன்னடத்தில் இயக்கிய ‘சாகு மகளு’(Saaku Magalu) படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மூன்றே ஆண்டுகளில் கன்னட சினிமாவில் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்தார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரியைத் தொடர்ந்து ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் கன்னடப் படவுலகம் தனது தவப் புதல்வியாகக் கல்பனாவைத் தத்தெடுத்துக்கொண்டது. அதற்குக் காரணமாக அமைந்தது புட்டண்ணா கனகல் கல்பனா கூட்டணி.

மின்னிய கூட்டணி

கன்னட சினிமாவை வெகுஜன சினிமாத் தளத்தில் மட்டுமல்ல, இந்திய அரங்கிலும், உலக ஆரங்கிலும் கம்பீரமாக இடம்பெறச் செய்த படைப்பாளிகளில் முக்கியமானவர் புட்டண்ணா கனகல். அவரது இயக்கத்தில் 1967-ம் ஆண்டு வெளியானது ‘பெல்லி மூடா’ (Belli Moda வெள்ளி மேகம்) என்ற திரைப்படம். கல்யாண்குமார் நாயகனாக நடித்திருந்தாலும் கல்பனா ஏற்று நடித்திருந்த ‘சந்திரா’ கதாபாத்திரமே கதையின் மையம்.

எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய இந்தப் படத்தில்தான் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் முதன்முதலாகக் கல்பனா நடித்தார். இந்தப் படம் புட்டண்ணா கனகலுக்கு முதல் வெற்றியையும் கல்பனாவுக்கு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான முதல் விருதையும் கொண்டு சேர்த்தது.

இந்தப் படத்தின் டைட்டில் பாடலில் இடம்பெற்ற வார்த்தைகளைக் கொண்டே பின்னர் ‘மின்னும் தாரகை’யாக இவர் ரசிகர்களால் கிரீடம் சூட்டப்பட்டார். புகழின் உச்சியில் பெங்களூருவில் கட்டிய தனது வீட்டுக்கும் இந்தப் படத்தின் பெயரையே வைத்தார் கல்பனா.

இதன் பிறகு பெண் கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடித்த புட்டண்ணா கனகலின் உயர்தரமான படங்களின் ஆஸ்தான நாயகியானர் கல்பனா. ‘ஜெஜ்ஜி பூஜே’ (Gejje Pooje சலங்கை பூஜை) படத்தில் தேவதாசிக் குடும்பத்திலிருந்து மீண்டெழுந்து படித்துப் பட்டம் பெற்று முறையான திருமண வாழ்வு வாழ நினைக்கும் பெண்ணாக நடித்தார்.

காதலனால் கைவிடப்பட்டு மீண்டும் தேவதாசி வாழ்வில் தள்ளப்படும் இந்தக் கதாபாத்திரம், வைர மோதிரத்தை விழுங்கித் தற்கொலை செய்துகொள்வதுபோலப் படத்தை முடித்திருந்தார் புட்டண்ணா கனகல். கல்பனாவின் நிஜவாழ்வும் மணவாழ்வில் ஏற்பட்ட விரிசலால் தற்கொலையில் முடிந்துபோனது பெரும் சோகம்.

உறவும் பிரிவும்

புட்டண்ணா கனகலின் தலைசிறந்த படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக வாழ்ந்து புகழை அள்ளிய கல்பனா, அவருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் தனது கதாநாயகியைப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் கனகலுக்கு ஏற்பட்டது. அவரது படங்களில் கல்பனாவின் இடத்தை பாரதி, ஆர்த்தி ஆகியோர் எடுத்துக் கொண்டாலும் கல்பனாவே கன்னடக் கனவுலகின் கலைக்க முடியாத சித்திரமாகத் தொடர்ந்தார்.

துயரம் கவ்விய கதாபாத்திரங்களில் அதிகம் நடித்திருந்தாலும் அழகும், இளமையும், காதலும் மிளிர்ந்த கதாபாத்திரங்களிலும் வசீகரிக்கத் தவறவில்லை. கன்னடச் சினிமாவில் 60களில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை இவர் இணைந்து நடிக்காத நடிகர்களோ, இயக்குநர்களோ இல்லை என்ற நிலை உருவானது.

திரைப்படங்களில் நவீன டிசைன்களில் இவர் அணிந்த ஷிபான் புடவைகள், பெரிய கை மற்றும் சிறு கைகளில் விதவிதமான ப்ரில்கள் வைத்த ரவிக்கைகள், பெரிய காது வளையங்கள் போன்றவை தென்னிந்திய சினிமா முழுவதும் ஃபேஷனாகப் பரவி நின்றன.

திரை நடிப்பில் முத்திரை பதித்த அதேநேரம் ஆரம்பம் முதலே நாடகங்களிலும் நடிக்கத் தவறவில்லை கல்பனா. வட கர்நாடகத்தின் மாபெரும் நாடக மேதையாகக் கொண்டாடப்படும் குடுசேரி பசவராஜ் (Gudugeri Basavaraj) நாடகக் குழுவில் முக்கிய நடிகையாகப் பிரகாசித்து வந்த கல்பனா, அவரை மணந்துகொண்டு குடும்ப வாழ்வில் கனவுகளுடன் காலடி வைத்தார். ஆனால் எந்தப் புள்ளியில் அந்த வாழ்க்கை கசந்ததோ தெரியவில்லை! தனது 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

அசலும் நிழலும்

நடிகைகளின் வாழ்க்கைக் கதைகளை படமாக்குவதில் அவ்வப்போது ஆர்வம் காட்டும் இந்திய சினிமாவில் கல்பனாவின் வாழ்க்கையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இம்முறை மற்றொரு முன்னணி நடிகையே கல்பனாவின் கதாபாத்திரத்தை ஏற்று அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்தார். அவர் பூஜா காந்தி. பிரபுசாலமன் இயக்கிய ’கொக்கி’ படத்தின் மூலம் கவர்ந்தாரே அவரேதான்.

அந்த பூஜாவா இவர் என்று எண்ண வைத்தார் அவரது அடுத்த படத்தில். கர்நாடகத்தையே கதிகலங்க வைத்த ‘ தண்டுபாளையாம்’ கொலை, கொள்ளை கும்பலின் நிஜக்கதை படமானபோது அதில் சுருட்டுக் குடித்தபடி, பன்றியின் கால்களைக் கட்டி தோளில் போட்டுத் தூக்கிச் செல்லும் கிரிமினல் பெண் கதாபாத்திரத்தில் அதிர வைத்தார். தமிழிலும் வெளியான அந்தப் படத்தின் அதிரடி அழகியான பூஜா காந்திதான் கல்பனா கதாபாத்திரத்திலும் நடித்து கர்நாடகத்தை மாநிலத்தைத் தற்போது கலங்கடித்திருக்கிறார்.

‘அபிநேத்ரி’ (Abhinetri The Tragedy of a Legend) என்ற தலைப்புடன் கடந்த 2013 ஜூலையில் பூஜா படத்தைத் தொடங்கியபோதே வரிசையாய் படத்தை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. புட்டண்ணா கனகல், கல்பனா ஆகிய இருதரப்பு உறவுகளும் வழக்குகளைத் தொடுக்க எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வந்துவிட்டது அபிநேத்ரி.

கல்பனா கதாபாத்திரத்துக்கு பூஜா காந்தியின் குரல் எடுபடவில்லை என்று விமர்சனங்கள் வந்தாலும், கணிசமான வெற்றியை அள்ளிவிட்டது. மினுகு தாராவின் நினைவுகளைக் கன்னட ரசிகர்களின் இதயத்தில் மீட்டிச் சென்றுவிட்டது அபிநேத்ரி 2015.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/

Source:-Wikipedia

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் கல்பனா

ImageImage

Image

Image

Image

Image

Image

ImageImageImageImage

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பி.எஸ்.ரவிச்சந்திரன் அவர்களுடன் கல்பனா தோன்றிய காட்சி                                                                              ImageImageImage

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் கல்பனா Kalpana-Sadhu Mirandal 1966- Kalpana-Sadhu Mirandal 1966-1 Kalpana-Sadhu Mirandal 1966-3

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் கல்பனா மாஸ்டர் பிரபாகர் மற்றும் குட்டி பத்மினியுடன்Kalpana-Kutty Padmini-Prabhagar-Sadhu Mirandal 1966-1

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் நாகேசுடன் கல்பனா  Kalpana-Nagesh-Sadhu Mirandal 1966-

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் கல்பனா ரி.ஆர்.இராமச்சந்திரனுடன்

Kalpana-TRR-Sadhu Mirandal 1966-

1974-இல் வெளிவந்த “எரடு கனசு” என்ற கன்னடப் படத்தில் கல்பனா .Kalpana-Eradu Kanasu 1974-Kalpana-Eradu Kanasu 1974-1Kalpana-Eradu Kanasu 1974-3

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் கல்பனா Kalpana-Kattila Thottila 1973-Kalpana-Kattila Thottila 1973-2Kalpana-Kattila Thottila 1973-4Kalpana-Kattila Thottila 1973-6Kalpana-Kattila Thottila 1973-1Kalpana-Kattila Thottila 1973-5

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் மாஸ்ரர் சேகருடன் கல்பனா Kalpana-Master Sekar-Kattila Thottila 1973-Kalpana-Master Sekar-Kattila Thottila 1973-1

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் நடிப்பின் இலக்கணம் பி.பானுமதியுடன் கல்பனா 

Kalpana-P.Bhanumathi-Kattila Thottila 1973-

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் சிவகுமாருடன் கல்பனா  Kalpana-Sivakumar-Kattila Thottila 1973-

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் பானுமதி, வி.எஸ்.ராகவன், ஜெமினிகணேசனுடன் கல்பனா 

Kalpana-VSR-Gemini-P.Bhanumathi-Kattila Thottila 1973-

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் சேகருடன் கல்பனா Master Sekar-Kalpana-Kattila Thottila 1973-Sivakumar-Kalpana-Kattila Thottila 1973-

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் சிவகுமாருடன் கல்பனா Sivakumar-Kalpana-Kattila Thottila 1973-1

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் வி.எஸ்.இராகவனுடன் கல்பனா VS.Raghavan-Kalpana-Kattila Thottila 1973-

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் சேகர்,கல்பனா ,ஜெமினிகணேசன்,மாஸ்ரர் ரமேஷ்

Kalpana-Gemini-Master Ramesh-Master Sekar-Kattila Thottila 1973-

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் ஜெமினிகணேஷ்,பானுமதி,கல்பனா 

Kalpana-Gemini-P.Bhanumathi-Kattila Thottila 1973-

”தென்னங்கீற்று” 1975 படத்தில் விஜயகுமாருடன் கல்பனாKalpana-Thennangkeetru 1975-3Kalpana-Thennangkeetru 1975-1Kalpana-Thennangkeetru 1975-2Kalpana-Thennangkeetru 1975-Kalpana-Vijayakumar-Thennangkeetru 1975-

”தென்னங்கீற்று” 1975 படத்தில் ஜெய்கணேஷுடன் கல்பனாKalpana-Jaiganesh-Thennangkeetru 1975-

Advertisements

3 comments on “Kalpana

  1. தக்க நேரத்தில் தவறைச் சுட்டிக்காட்டிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இதுவரையிலும் எத்தனையோ பேர் இப்பக்கத்தைப் பார்த்திருந்தும் யாரும் இக்குறையைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால் வருடக்கணக்கில் இந்தத் தவறு களையப்படாமல் இருந்திருக்கிறது. இப்பதிவுகளை மேற்கொண்டிருந்த சமயம் காஞ்சனாவின் படங்களையும் பதிவேற்றியிருந்திருப்பேன். அதனால்தான் அதே ஞாபகத்தில் இங்கேயும் காஞ்சனா என பதிவு செய்திருக்கிறேன்.

  2. Kalpana was affectionately called as Minugu tare ( twinkle star ) to day after 39 years after her demise, still she is reining as shining star in the memory of her fans. Great.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s