K.S. Angamuthu

கே.எஸ்.அங்கமுத்து

 தமிழ்ப்படவுலகின் சிறந்த நகைச்சுவை நடிகைகளுள் ஒருவர். மருமகள், காவேரி, எதிர்பாராதது, மந்திரி குமாரி, புகுந்தவீடு, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, டவுன் பஸ், பொண்ணு மாப்பிள்ளை, தெய்வப்பிறவி, வீட்டுக்கு வந்த மருமகள் உள்ளிட்ட 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பராசக்தி படத்தில் பழ வியாபாரியாக வருபவர் இவர் தான்.M.G.R-வுடன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். படப்பிடிப்புக்களுக்கு அக்காலத்தில் மாட்டு வண்டியில் சென்று வந்த ஒரே நடிகை அங்கமுத்து மட்டுமே. நல்ல வசதியோடு இருந்த அங்கமுத்து அவரது இறுதிக் காலத்தில் நோயினால் பீடிக்கப்பட்டார். படங்களில் நடித்ததுமில்லை. அந்நேரத்தில் அவரது மரணம் வரை மாதம்தோறும் ரூ.500/- ஐ உதவியாக அளித்தவர் எம்.ஜி.ஆர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

நாடோடி மன்னன் [1958], மோகனசுந்தரம் [1951], நந்தனார் [1942], மருமகள் [1953], அந்தமான் கைதி, ராஜா ராணி [1956], பிள்ளைக்கனியமுது [1958], கண் மலர் [1970], தேனும் பாலும் [1970], எங்கள் வீட்டு மஹாலட்சுமி [1957]

தி இந்து தமிழ் நாளிதழில் அங்கமுத்து அவர்களைக் குறித்து வெளியாகியிருந்த செய்தி

அங்கமுத்து தமிழ்த்திரையின் முதல் நகைச்சுவை நாயகி!

மோகன் வி ராமன் – November 22, 2013 00:00 ISTUpdated: 

1930களின் சென்னை நகரத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இன்றைக்கு உள்ளதுபோல் ஜன நெருக்கடி இல்லையென்றாலும் கார்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அப்போதும்கூட தினமும் சினிமா படப்பிடிப்புக்கு வில்லு வண்டியில்தான் வருவாராம் அவர். 60கள் வரை இந்தப் பழக்கம் அவரிடம் இருந்தது. தயாரிப்பாளர்கள் கார் அனுப்பத் தயாராக இருந்தாலும் அவர் பிடிவாதமாக இருந்தார். அவர்தான் தமிழின் முதல் நகைச்சுவை நடிகையாகக் கொண்டாடப்படும் அங்கமுத்து.

அங்கமுத்து, 1914ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் எத்திராஜுலு நாயுடு – ஜீவரத்தினம் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். அங்கமுத்துக்கு 5 வயது இருக்கும்போது அவருடைய குடும்பம் மதராஸுக்குக் குடிபெயர்ந்தது. இவருக்கு ஏழு வயது இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். தாயும் சில ஆண்டுகளுக்குள் காலமானார். செளகார்ப்பேட்டை பைராகி பள்ளியில் படித்த இவர், குடும்பச் சூழலின் காரணமாக ஏழாம் வகுப்புடன் படிப்பைப் பாதியில் கைவிடுகிறார். சண்முகம் செட்டியார் அவரை அழைத்துச் சென்று வேலூர் நாயர் கம்பெனியில் சேர்த்துவிடுகிறார். சில மாதங்களிலேயே அவர் தஞ்சை கோவிந்தன் கம்பெனிக்கு மாறுகிறார். அங்குக் கள்ள பார்ட் (திருடன்) வேடமேற்கிறார். பிறகு ரெங்கசுவாமி நாயுடு கம்பெனியுடன் மலேசியா செல்கிறார்.

சில வருடங்களில் அவர் பி.எஸ். ரத்னபாய், பி.எஸ். சரஸ்வதிபாய் சகோதரிகள் நடத்திவந்த நாடகக் கம்பெனியில் இணைகிறார். எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.கே. தியாகராக பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் போன்ற அன்றைய கால நாடக நட்சத்திரங்களுடன் நடித்ததால் அங்கமுத்து மிகப் புகழ்பெற்ற நடிகையானர்.

1933களில் தமிழில் பேசும் படங்கள் எடுக்கப்பட்டன. நியூ சினிமா தியேட்டர் நிறுவனத்தார், நந்தனார் கதையைக் கல்கத்தாவில் எடுக்க விரும்பினர். அந்தப் படத்தில் நடிக்க அங்கமுத்து சிபாரிசு செய்யப்பட்டார். ஆனால் அவர் அப்போது சென்னையில் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அங்கமுத்துக்கு அடுத்த வாய்ப்பு பாமா விஜயம் மூலம் வந்தது. 1934இல் சரஸ்வதிபாய், ரத்னபாய் சகோதரிகள் தயாரித்த பாமா விஜயம் படத்தில் அங்கமுத்து நடித்தார். ஏவிஎம்மின் முதல் பட முயற்சியான ரத்னாவளியில் அங்கமுத்து நடித்துள்ளார்.

ஆனால் அங்கமுத்துவால் முதல் நிலை நடிகராக முடியவில்லை. அதே காலத்தில் நடிகை டி.ஏ. மதுரம், என்.எஸ். கிருஷ்ணனுடன் நகைச்சுவை இணையாக நடித்துக்கொண்டிருந்தார். சி.டி. ராஜகாந்தமும் அப்போது பல படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார். இருந்தும் அங்கமுத்து 40களிலும் 50களிலும் பல படங்களில் தன் பங்களிப்பை அளித்துள்ளார். சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தியில் (1952) நடித்துள்ளார். மந்திரிகுமாரி (1950), தங்க மலை ரகசியம் (1957), மதுரை வீரன் (1960) களத்தூர் கண்ணம்மா (1960) போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் ரஜினிகாந்தின் குப்பத்து ராஜா (1979).

அங்கமுத்து தன் கடைசிக் காலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அங்கமுத்து 1994ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவருடைய மைத்துனியின் பேரன், தனது பாட்டி அங்கமுத்து குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:

“அவர் பிற்காலத்தில் தன்னுடைய வில்லு வண்டியை எல்லாம் விற்றுவிட்டார். ரிக்‌ஷாவில்தான் சனிக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வார். அவருடைய இளம் வயது படம் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும். அதைப் பார்த்தபடி, அங்கமுத்து பாட்டி கேட்பார், இது நீதானா என்று. தான் எப்படியெல்லாம் புகழுடனும் செல்வாக்குடனும் வாழ்ந்தேன் என்று பாட்டி சொல்லுப்போது நான் அதை ஒரு கிழவியின் உளறலாகத்தான் நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அவரது அருமை புரிகிறது” என்கிறார்.

தமிழில் ஆர். ஜெய்குமார்

நன்றி:- http://tamil.thehindu.com/cinema/cinema-others/

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி [1966] படத்தில் அங்கமுத்து

Image

KS.Angamuthu-Town Bus

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் P.D.சம்பந்தம் அவர்களுடன் டவுன் பஸ் திரைப்படத்தில் கே.எஸ்.அங்கமுத்து

KS.Angamuthu-PD.Sampantham-Town Bus-2

டவுன் பஸ் படத்தில் பி.டி.சம்பந்தம் மற்றும் ரி.பி.முத்துலெட்சுமியுடன் அங்கமுத்துKS.Angamuthu-PD.Sampantham-Town Bus KS.Angamuthu-PD.Sampantham-Town Bus-1 KS.Angamuthu-PD.Sampantham-TP.Muthulakshmi-Town Bus

தெய்வப்பிறவி படத்தில் எம்சரோஜா மற்றும்  கே.ஏ.தங்கவேலுவுடன் கே.எஸ்.அங்கமுத்து

KA.THANGAVELU-M.SAROJA- DEIVAPPIRAVI (3) KA.THANGAVELU-M.SAROJA- DEIVAPPIRAVI (2) KA.THANGAVELU-M.SAROJA- DEIVAPPIRAVI (1)

தங்கமலை ரகசியம் படத்தில் தனித்தும் குண்டு கருப்பையாவுடனும் அங்கமுத்து

Angamuthu-Gundu Karuppaiah-Thangamalai Ragasiyam- Angamuthu-Thangamalai Ragasiyam-

 பொண்ணு மாப்பிள்ளை படத்தில் வைரம் கிருஷ்ணமூர்த்தியுடன் அங்கமுத்துAngamuthu-Vairam Krishnamoorthy-Ponnu Mappaillai Angamuthu-Vairam Krishnamoorthy-Ponnu Mappaillai-1

வீட்டுக்கு வந்த மருமகள் [1973] படத்தில் “அச்சச்சோ” சித்ராவுடன் அங்கமுத்துAchacho Chithra-Angamuthu-Veettukku Vandha Marumagal 1973-AAchacho Chithra-Angamuthu-Veettukku Vandha Marumagal 1973-1B

’மோகனசுந்தரம்’ [1951] படத்தில் அங்கமுத்துK.S.Angamuthu-Mohana Sundaram 1951-K.S.Angamuthu-Mohana Sundaram 1951-1

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் கே.எஸ்.அங்கமுத்து  KS.Ankamuthu as Pappa-Nadodi Mannan 1957-KS.Ankamuthu as Pappa-Nadodi Mannan 1957-1

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் கே.எஸ்.அங்கமுத்து  KS.Ankamuthu as Pappa-JP.Chandrababu -Nadodi Mannan 1957-JP.Chandrababu as Sahayam-KS.Ankamuthu-Nadodi Mannan 1957-

’அந்தமான் கைதி’ படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவும் குண்டு கருப்பையாவும்KS.Angamuthu-Gundu Karuppaiah-ANTHAMAN KAITHI 1952-

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் கே.சாய்ராமனுடன் கே.எஸ்.அங்கமுத்து

K.S.Angamuthu-Paanai pidithaval bhagyasali 1958 -K.Sairam-Angamuthu-Paanai pidithaval bhagyasali 1958 -

”பிள்ளைக்கனியமுது” [1958] படத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுடன் கே.எஸ்.அங்கமுத்து

Kakka Radhakrishnan-K.S.Ankamuthu-Pillai kaniyamuthu 1958-1Kakka Radhakrishnan-K.S.Ankamuthu-Pillai kaniyamuthu 1958-

”பிள்ளைக்கனியமுது” [1958] படத்தில் அங்கமுத்துவுடன் கே.சாயிராமன்K.Sairam-Angamuthu-Pillai kaniyamuthu 1958-

”பிள்ளைக்கனியமுது” [1958] படத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுடன் முத்துலட்சுமியும் அங்கமுத்துவும்

 K.S.Ankamuthu-K.Sairam-Kakka Radhakrishnan-TP.Muthulakshmi-Pillai kaniyamuthu 1958-

”பிள்ளைக்கனியமுது” [1958] படத்தில் கே.சாயிராமன், காக்கா ராதாகிருஷ்ணனுடன் அங்கமுத்து

 K.Sairam-Kakka Radhakrishnan-K.S.Ankamuthu-Pillai kaniyamuthu 1958-

“காவேரி” [1955] படத்தில் ரி.ஏ.மதுரத்துடன் கே.எஸ்.அங்கமுத்துKS.Angamuthu-TA.Madhuram- Kaveri 1955-

“கண்மலர்” [1970] படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் மனோரமா, சௌகார் ஜானகி

KS.Angamuthu-SOWKAR JANAKI-Kann Malar 1970-KS.Angamuthu-SOWKAR JANAKI-Manorama-Kann Malar 1970-3KS.Angamuthu-SOWKAR JANAKI-Manorama-Kann Malar 1970-2KS.Angamuthu-SOWKAR JANAKI-Manorama-Kann Malar 1970-1KS.Angamuthu-SOWKAR JANAKI-Manorama-Kann Malar 1970-

மங்கையர் திலகம் [1955] படத்தில் அங்கமுத்துKS.ANGAMUTHU-Mangayar Thilagam 1955-BKS.ANGAMUTHU-Mangayar Thilagam 1955-1KS.ANGAMUTHU-Mangayar Thilagam 1955-2

மங்கையர் திலகம் [1955] படத்தில் அங்கமுத்துவுடன் கே.ஏ.தங்கவேலு, ராகினிKS.ANGAMUTHU-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-KS.ANGAMUTHU-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-1KS.ANGAMUTHU-Ragini-KA.Thangavelu-Mangayar Thilagam 1955-2

மங்கையர் திலகம் [1955] படத்தில் அங்கமுத்துவுடன் கே.கண்ணன்

KS.ANGAMUTHU-K.Kannan-Mangayar Thilagam 1955-1KS.ANGAMUTHU-K.Kannan-Mangayar Thilagam 1955-

“தேனும் பாலும்” [1970] படத்தில் அங்கமுத்துAngamuthu-THENUM PAALUM 1970-

“தேனும் பாலும்” [1970] படத்தில் நாகேஷ், எம்.எஸ்.சுந்தரிபாயுடன் அங்கமுத்து

Angamuthu-Nagesh-MS.Sundaribai-THENUM PAALUM 1970-Angamuthu-Nagesh-MS.Sundaribai-THENUM PAALUM 1970-2Angamuthu-Nagesh-MS.Sundaribai-THENUM PAALUM 1970-1

“ராஜா ராணி” [1956] படத்தில் ராஜசுலோசனாவுடன் கே.எஸ்.அங்கமுத்து KS.Angamuthu-Raja Rani 1956-KS.Angamuthu-Rajasulochana-Raja Rani 1956-3KS.Angamuthu-Rajasulochana-Raja Rani 1956-KS.Angamuthu-Rajasulochana-Raja Rani 1956-2KS.Angamuthu-Rajasulochana-Raja Rani 1956-1

“ராஜா ராணி” [1956] படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜசுலோசனாவுடன் கே.எஸ்.அங்கமுத்து KS.Angamuthu-Rajasulochana-SSR-Raja Rani 1956-

“ராஜா ராணி” [1956] படத்தில் சிவாஜிகணேசனுடன் கே.எஸ்.அங்கமுத்து KS.Angamuthu-Sivaji-Raja Rani 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் அங்கமுத்து KS.Angamuthu-Pennin Perumai 1956-1KS.Angamuthu-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் பிரண்ட் ராமசாமியுடன் அங்கமுத்து

KS.Angamuthu-Friend Ramaswamy-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் ரி.என்.சிவதாணுவுடன் அங்கமுத்து

KS.Angamuthu-TN.Sivathanu-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமியுடன் அங்கமுத்துKS.Angamuthu-Friend Ramaswamy-MN.Rajam-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் ரி.என்.சிவதாணு, பி.எஸ்.ஞானம்,  பிரண்ட் ராமசாமியுடன் அங்கமுத்துTN.Sivathanu-KS.Angamuthu-PS.Gnanam-Friend Ramaswamy-Pennin Perumai 1956-TN.Sivathanu-KS.Angamuthu-PS.Gnanam-Friend Ramaswamy-Pennin Perumai 1956-161

”புகுந்தவீடு” [1971] படத்தில் A.V.M.ராஜனுடன் K.S.அங்கமுத்துKS.Angamuthu-Puguntha Veedu 1971-KS.Angamuthu-Cho-Puguntha Veedu 1971-63

“அந்தமான் கைதி” [1952] படத்தில் கே.எஸ்.அங்கமுத்துKS.Angamuthu-Andhaman Kaidhi 1952-

“அந்தமான் கைதி” [1952] படத்தில் குண்டு கருப்பையாவுடன் கே.எஸ்.அங்கமுத்துKS.Angamuthu-Andhaman Kaidhi 1952-1

“அந்தமான் கைதி” [1952] படத்தில் ரி.எஸ்.பாலையா,கே.எஸ்.அங்கமுத்துKS.Angamuthu-TS.Balaiah-Andhaman Kaidhi 1952-66

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் ஜே.பி.சந்திரபாபு KS.Ankamuthu-Rathakkanneer 1956-JP.Chandrababu-KS.Ankamuthu-Rathakkanneer 1956-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் எம்.என்.ராஜம், ஜே.பி.சந்திரபாபு KS.Ankamuthu-JP.Chandrababu-MN.Rajam-Rathakkanneer 1956-1KS.Ankamuthu-JP.Chandrababu-MN.Rajam-Rathakkanneer 1956-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் எம்.என்.ராஜம், சாயி-சுப்புலட்சுமி சகோதரியர் KS.Ankamuthu-MN.Rajam-Sayee-Subbulakshmi-Rathakkanneer 1956-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் எம்.என்.ராஜம், ஜே.பி.சந்திரபாபு JP.Chandrababu-MN.Rajam-KS.Ankamuthu-Rathakkanneer 1956-72

”தெய்வீக உறவு” 1968 படத்தில் நாகேஷுடன் அங்கமுத்து KS.Angamuthu-Nagesh-Deiviga Uravu 1968-4KS.Angamuthu-Nagesh-Deiviga Uravu 1968-3KS.Angamuthu-Nagesh-Deiviga Uravu 1968-

”தெய்வீக உறவு” 1968 படத்தில் நம்பிராஜன், நாகேஷுடன் அங்கமுத்து KS.Angamuthu-Nagesh-Deiviga Uravu 1968-2KS.Angamuthu-Nagesh-Deiviga Uravu 1968-177

”சர்வாதிகாரி” 1951 படத்தில் அங்கமுத்து , அஞ்சலி தேவிKS.Angamuthu-SARVATHIKARI 1951-2KS.Angamuthu-SARVATHIKARI 1951-1Anjalidevi-KS.Angamuthu-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் அங்கமுத்து , எம்.ஜி.ஆருடன் அஞ்சலி தேவிKS.Angamuthu-SARVATHIKARI 1951-Anjalidevi-KS.Angamuthu-MGR-SARVATHIKARI 1951-KS.Angamuthu-Anjalidevi-MGR-SARVATHIKARI 1951-83

“நானே ராஜா” 1956 படத்தில் அங்கமுத்துKS.Angamuthu-Nanne Raja 1956-1KS.Angamuthu-Nanne Raja 1956-85

”பராசக்தி” 1952 படத்தில் சிவாஜிகணேசனுடன்  அங்கமுத்துks-angamuthu-parasakthi-1952ks-angamuthu-sivaji-parasakthi-1952ks-angamuthu-sivaji-parasakthi-1952-188

“செஞ்சி லட்சுமி” 1960 அங்கமுத்துவுடன் அஞ்சலிதேவிKS.Angamuthu-Anjali Devi-Senchi Lakshmi 1960-KS.Angamuthu-Anjali Devi-Senchi Lakshmi 1960-1

“செஞ்சி லட்சுமி” 1960 அங்கமுத்துவுடன் ஈ.ஆர்.சகாதேவன்KS.Angamuthu-ER.Sahadevan-Senchi Lakshmi 1960-91

“பூமாலை” 1965 படத்தில் நாகேஷுடன் அங்கமுத்துKS.Angamuthu-Nagesh-Poomaalai 1965-KS.Angamuthu-Nagesh-Poomaalai 1965-1

“பூமாலை” 1965 படத்தில் மனோரமா, எஸ்.எஸ்.சிவசூரியன், நாகேஷுடன் அங்கமுத்து

KS.Angamuthu-Nagesh-SS.Sivasuryan-Manorama-Poomaalai 1965-

“பூமாலை” 1965 படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியன், நாகேஷுடன் அங்கமுத்துKS.Angamuthu-Nagesh-SS.Sivasuryan-Poomaalai 1965-95

”எங்கள் வீட்டு மஹாலட்சுமி” 1957 படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாயுடன் அங்கமுத்துKS.Angamuthu-Enga Veetu Mahalakshmi 1957-2KS.Angamuthu-MS.Sundaribhai-Enga Veetu Mahalakshmi 1957-KS.Angamuthu-MS.Sundaribhai-Enga Veetu Mahalakshmi 1957-198

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் எஸ்.வி.சண்முகம் பிள்ளையுடன் அங்கமுத்து

KS.Angamuthu-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-2KS.Angamuthu-Ninaippatharkku Neramillai 1963-100KS.Angamuthu-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-1KS.Angamuthu-SV.Shunmugam Pillai-Ninaippatharkku Neramillai 1963-102

“அமுதவல்லி” 1959 படத்தில் கே..எஸ்..அங்கமுத்துவுடன் ஏ.கருணாநிதிKS.Angamuthu-Amudhavalli 1959-1KS.Angamuthu-Amudhavalli 1959-KS.Angamuthu-A.Karunanidhi-Amudhavalli 1959-105

”போன மச்சான் திரும்பி வந்தான்” [1954] படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் பிரண்ட் ராமசாமிK.S.Angamuthu-Pona Machaan Thirumbi Vanthaan 1954-1K.S.Angamuthu-Pona Machaan Thirumbi Vanthaan 1954-K.S.Angamuthu-Friend Ramasamy-Pona Machaan Thirumbi Vanthaan 1954-02K.S.Angamuthu-Friend Ramasamy-Pona Machaan Thirumbi Vanthaan 1954-01K.S.Angamuthu-Friend Ramasamy-Pona Machaan Thirumbi Vanthaan 1954-Friend Ramasamy-K.S.Angamuthu-Pona Machaan Thirumbi Vanthaan 1954-Friend Ramasamy-K.S.Angamuthu-Pona Machaan Thirumbi Vanthaan 1954-1112

”மதனமோகினி”1953 படத்தில் வி.எம்.ஏழுமலை , புளிமூட்டை ராமசாமியுடன் கே.எஸ்.அங்கமுத்துKS.AngamuthuPulimoottai Ramaswami-VM.Ezhumalai-Madana Mohini 1953-KS.Angamuthu-Madana Mohini 1953-114

”இன்பவல்லி” 1949 படத்தில் ஈ.ஆர்.சகாதேவனுடன் கே.எஸ்.அங்கமுத்துK.S.Angamuthu-Inbavalli 1949-K.S.Angamuthu-E.R.Sahadevan-Inbavalli 1949-ER.Sahadevan-K.S.Angamuthu-Inbavalli 1949-

”இன்பவல்லி” 1949 படத்தில் பி.கே.சரஸ்வதியுடன் கே.எஸ்.அங்கமுத்துK.S.Angamuthu-PK.Saraswathi-Inbavalli 1949-118

”மருமகள்” 1953 படத்தில் v.லட்சுமி காந்தத்துடன் கே.எஸ்.அங்கமுத்துKS.Angamuthu-Marumagal 1953-KS.Angamuthu-Marumagal 1953-1

”மருமகள்” 1953 படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மியுடன் v.லட்சுமி காந்தம், கே.எஸ்.அங்கமுத்துKS.Angamuthu-SD.Subbulakshmi-Marumagal 1953-121

2 comments on “K.S. Angamuthu

  1. Great actress Madam Angamuthu
    Is it possible to contact any family members of her??

    It’s mentioned that she had been to Malaysia through Rangaswamy Naidu company. He happens to be my forefather. Need some information on him. Would be of help

  2. she acted in 16 vayathiniiley, madras to pondichery, parasakthi, naane raja, thanga malai ragasiyam , koduthu vaithaval(1963),kaveri(1955),ninaipatharku neramillai(1963),panai pidithaval bakyasali(1958),nandanar(1942),bhavani(1967)..

    she was popular because of her bulge body, but in her last stage her health deteorated because of her bulge body and later fell into diabetic and lost her eye sight.

    until 60s, she used her own bullcart as mode of transport to studio, never interested in cars.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s