Sreekanth

ஸ்ரீகாந்த்-பிரபல வில்லன் நடிகர்.கதாநாயகனாகவும்,நகைச்சுவைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.இவரது முதல் படம் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை. எதிர் நீச்சல், பூவா தலையா போன்றவை நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.நடிகர் நாகேஷ், கவிஞர் வாலி, நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர்,திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிசெய்தார் . இவர் கதாநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.தங்கப்பதக்கம் இவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத்தந்த படம். கதாநாயகன் வேடத்தில் ரஜினிகாந்தின் முதல் படமான ‘பைரவி’-யில் இவர் பிரதான வில்லன். ராஜ நாகம் படத்தில் இவரது நடிப்பு சிறப்பாகயிருக்கும். கோமாதா என் குலமாதா படமும் இவரது வில்லத்தனத்தைப் பறைசாற்றிய படம். வில்லனாகவே நடித்து வந்த ஸ்ரீகாந்த் 1978 இல் வெளி வந்த “இவள் ஒரு சீதை” படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

Sreekanth is a veteran Indian actor who has performed in Tamil films since the 1960s. He made his acting debut in the 1965 Tamil film Vennira Aadai directed by Sridhar. A close associate of actor Venniradai Moorthy, Srikanth was employed in the American Consulate before entering films. He often portrays supporting characters to actors like Sivaji GanesanMuthuramanJaishankar and in the later period he appeared as villain opposite actors like Rajinikanth and Kamal Haasan. Rajini’s first film as hero, Bairavi had Srikanth playing the main villain role. He played the lead role in the 1974 Tamil film Dikkatra Parvathi which won the National Film Award for Best Feature Film in Tamil in 1975.

Source From Wikipedia, the free encyclopedia

‘வெண்ணிற ஆடை’ [1966] படத்தில் ஸ்ரீகாந்த்

Image

Image

வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் ஸ்ரீகாந்த்

ImageImage

மல்லிகைப்பூ [1973] படத்தில் ஸ்ரீகாந்த் தனித்தும் கே.ஆர்.விஜயாவுடனும்

Srikanth-KR.Vijaya-Malligai Poo-1973-Srikanth-KR.Vijaya-Malligai Poo-1973-1Srikanth-Malligai Poo-1973-1

எதிர் நீச்சல் படத்தில் ஸ்ரீகாந்த்

Sreekanth-Ethir Neechal 1968-

எதிர் நீச்சல் படத்தில் ஸ்ரீகாந்துடன்  சௌகார் ஜானகிSriikanth-Sowcar-Ethir Neechal 1968-1Sriikanth-Sowcar-Ethir Neechal 1968-Sriikanth-Sawcar-Ethir Neechal 1968-

கட்டிலா தொட்டிலா [1973] படத்தில் ஸ்ரீகாந்த்

Sreekanth-Kattila Thottila 1973-Sreekanth-Kattila Thottila 1973-1Sreekanth-Kattila Thottila 1973-2Sreekanth-Kattila Thottila 1973-3

கட்டிலா தொட்டிலா [1973] படத்தில் ஜெமினிகணேசன்,ஸ்ரீகாந்துடன்Sreekanth-Gemini-Kattila Thottila 1973-

கட்டிலா தொட்டிலா [1973] படத்தில் ஜெமினிகணேசன்,ஸ்ரீகாந்துடன் ஏ.சகுந்தலா

A.Sagunthala-Gemini-Sreekanth-Kattila Thottila 1973-

கட்டிலா தொட்டிலா [1973] படத்தில் ஸ்ரீகாந்துடன் ஏ.சகுந்தலாA.Sagunthala-Sreekanth-Kattila Thottila 1973-

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் ஸ்ரீகாந்த்Thengai-Srikanth-Kattila Thottila 1973-

‘அன்னப்பறவை’ படத்தில் ஸ்ரீகாந்துடன் லதா

Sreekanth-Rusi Kanda Poonai 1980-Sreekanth-Rusi Kanda Poonai 1980-2Sreekanth-Latha-Rusi Kanda Poonai 1980-Latha-Sreekanth-Rusi Kanda Poonai 1980-

‘தெய்வக்குழந்தைகள்’ [1973] படத்தில் தனித்தும் எஸ்.வி.ராமதாசுடனும் ஸ்ரீகாந்த்

sreekanth-Deiva Kuzhandaigal 1973-s v ramadhas- sreekanth-Deiva Kuzhandaigal 1973-

‘நீ ஒரு மகாராணி [1976] படத்தில் ஜெயவாணி, ஸ்ரீகாந்த் Vani @ Jayavani-Nee Oru Maharani 1976-1Vani @ Jayavani-Sreekanth-Nee Oru Maharani 1976-Vani @ Jayavani-Sreekanth-Nee Oru Maharani 1976-1

‘நீ ஒரு மகாராணி [1976] படத்தில் சுஜாதா,வி.ஆர்.திலகத்துடன்  ஸ்ரீகாந்த் Sujatha-VR.Thilagam-Sreekanth-Nee Oru Maharani 1976-1

‘கை நிறைய காசு’ படத்தில் எல்.காஞ்சனாவுடன் ஸ்ரீகாந்த்

L Kanjana-Sreekanth-Kai Niraiya Aasai-L Kanjana-Sreekanth-Kai Niraiya Aasai-1

‘சிட்டுக்குருவி’ படத்தில் ஸ்ரீகாந்த் – மனோரமாSreekanth-Chittukkuruvi-Sreekanth-Manorama-Chittukkuruvi-Sreekanth-Manorama-Chittukkuruvi-1

இவள் ஒரு சீதை [1978] படத்தில் ஸ்ரீகாந்த்Sreekanth-Ival Oru Seethai 1978-Sreekanth-Ival Oru Seethai 1978-1Sreekanth-Ival Oru Seethai 1978-2Sreekanth-Ival Oru Seethai 1978-3Sreekanth-Ival Oru Seethai 1978-4

இவள் ஒரு சீதை [1978] படத்தில் பண்டரிபாயுடன் ஸ்ரீகாந்த்Sreekanth-Pandaribai-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் விஜயகுமாருடன் ஸ்ரீகாந்த்Sreekanth-Vijayakumar-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் ஒய்.விஜயாவுடன் ஸ்ரீகாந்த்Sreekanth-Y.Vijaya-Ival Oru Seethai 1978-Sreekanth-Y.Vijaya-Ival Oru Seethai 1978-1

இவள் ஒரு சீதை [1978] படத்தில் ஒய்.விஜயா, பண்டரிபாயுடன் ஸ்ரீகாந்த்Sreekanth-Y.Vijaya-Pandaribai-Ival Oru Seethai 1978-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில்  ஸ்ரீகாந்த்  Sreekanth-Nallathukku Kalamillai-1Sreekanth-Nallathukku Kalamillai-2Sreekanth-Nallathukku Kalamillai-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் ஜெய்சங்கருடன் ஸ்ரீகாந்த்  Sreekanth-Jaisangar-Nallathukku Kalamillai-1Sreekanth-Jaisangar-Nallathukku Kalamillai-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுகுமாரியுடன் ஸ்ரீகாந்த்  Sreekanth-Sukumari-Nallathukku Kalamillai 1977-Sukumari-Sreekanth-Nallathukku Kalamillai 1977-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில்  ஸ்ரீகாந்துடன் லட்சுமிஸ்ரீ, சுகுமாரிLakshmisree-Nallathukku Kalamillai 1977-Sukumari-Sreekanth

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் சுருளிராஜனுடன் ஸ்ரீகாந்த்  Suruli Rajan-Srikanth-Nallathukku Kalamillai 1977-

“நவக்கிரக நாயகி” [1985] படத்தில் டெல்லி கணேசனுடன் ஸ்ரீகாந்த்Sreekanth-Navagraha Nayagi 1985-Sreekanth-Navagraha Nayagi 1985-1Sreekanth-Navagraha Nayagi 1985-2Sreekanth-Delhi Ganesh-Navagraha Nayagi 1985-57

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் குமாரி மஞ்சுளாவுடன் ஸ்ரீகாந்த் Sreekanth-Eduppar Kai Pillai 1975-1Sreekanth-Eduppar Kai Pillai 1975-2Sreekanth-Eduppar Kai Pillai 1975-Sreekanth-Kumari Manjula-Eduppar Kai Pillai 1975-Sreekanth-Kumari Manjula-Eduppar Kai Pillai 1975-1Sreekanth-Kumari Manjula-Eduppar Kai Pillai 1975-263

’தேவரின்’ “தெய்வம்” [1972] படத்தில் ஸ்ரீகாந்துடன் சௌகார் ஜானகி

Sreekanth-Deivam 1972-Sowkar- Sreekanth-Deivam 1972-1Sowkar- Sreekanth-Deivam 1972-Sowkar- Sreekanth-Deivam 1972-267

“அத்தையா மாமியா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஸ்ரீகாந்த்

Sreekanth-Athaiya Mamiya 1974-2Sreekanth-Athaiya Mamiya 1974-1Sreekanth-Athaiya Mamiya 1974-Sreekanth-Vennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-Sreekanth-Vennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-1Sreekanth-Vennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-2Usha Nandini-Sreekanth-Athaiya Mamiya 1974-174

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் ஸ்ரீகாந்துடன் லட்சுமி SREEKANTH-PINCHUMANAM 1975-1SREEKANTH-PINCHUMANAM 1975-Sreekanth-Lakshmi-PINCHUMANAM -

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் ஸ்ரீகாந்துடன் ஜெய்சங்கர்Sreekanth-Jaisangar-PINCHUMANAM 1975-1Sreekanth-Jaisangar-PINCHUMANAM -79

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் ஸ்ரீகாந்த்,சுஜாதாவுடன் Sreekanth-Vaazhnthu Kaattugiren 1975-1Sreekanth-Vaazhnthu Kaattugiren 1975-Sreekanth-Sujatha-Vaazhnthu Kaattugiren 1975-1Sreekanth-Sujatha-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் ஆர்.முத்துராமனுடன் ஸ்ரீகாந்த் Sreekanth-Muthuraman-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் ஸ்ரீகாந்த், எம்.பானுமதி  Sreekanth-M.Bhanumathi-Vaazhnthu Kaattugiren 1975-M.Bhanumathi-Sreekanth-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் ஸ்ரீகாந்துடன்  ஒருவிரல் கிருஷ்ணாராவ்Oruviral Krishnarao-Sreekanth-Vaazhnthu Kaattugiren 1975-

“வாழ்ந்து காட்டுகிறேன்” 1975 படத்தில் ஸ்ரீகாந்த்,  சுஜாதாவுடன் எம்.பானுமதி  M.Bhanumathi-Sujatha-Sreekanth-Vaazhnthu Kaattugiren 1975-88

“மதன மாளிகை” 1976 படத்தில் சிவகுமாருடன் ஸ்ரீகாந்த் sreekanth-madhana-maaligai-1976sreekanth-madhana-maaligai-1976-2sreekanth-madhana-maaligai-1976-1sreekanth-sivakumar-madhana-maaligai-1976

“மதன மாளிகை” 1976 படத்தில் லூஸ் மோகனுடன் ஸ்ரீகாந்த் sreekanth-loose-mohan-madhana-maaligai-197693

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் சுஜாதாவுடன் ஸ்ரீகாந்த்sreekanth-raja-rajeswari-1979sreekanth-raja-rajeswari-1979-1sreekanth-raja-rajeswari-1979-2sreekanth-sujatha-raja-rajeswari-1979

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் அபர்ணாவுடன் ஸ்ரீகாந்த்aparna-sreekanth-raja-rajeswari-1979-1sreekanth-aparna-raja-rajeswari-1979

“ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் மேஜர் சுந்தரராஜன், சுஜாதாவுடன் ஸ்ரீகாந்த்sreekanth-sujatha-major-raja-rajeswari-1979100

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் சோவுடன் ஸ்ரீகாந்த்sreekanth-unmaye-un-vilai-enna-1976sreekanth-unmaye-un-vilai-enna-1976-1sreekanth-cho-unmaye-un-vilai-enna-1976

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் சுகுமாரியுடன் ஸ்ரீகாந்த்sreekanth-sukumari-unmaye-un-vilai-enna-1976-1sreekanth-sukumari-unmaye-un-vilai-enna-1976

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் முத்துராமன், சுகுமாரியுடன் ஸ்ரீகாந்த்

sreekanth-sukumari-r-muthuraman-unmaye-un-vilai-enna-1976

“உண்மையே உன் விலை என்ன? 1976 படத்தில் சுகுமாரி, சோவுடன் ஸ்ரீகாந்த்sreekanth-sukumari-cho-unmaye-un-vilai-enna-1976107

“வேலைக்காரன்” 1987 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் ஸ்ரீகாந்த் sreekanth-kr-vijaya-velaikkaran-1987-1sreekanth-kr-vijaya-velaikkaran-1987

“வேலைக்காரன்” 1987 படத்தில் எஸ்.ஆர்.வீரராகவன், டெல்லி கணேஷ், கே.ஆர்.விஜயாவுடன் ஸ்ரீகாந்த் sreekanth-kr-vijaya-sr-veeraraghavan-velaikkaran-1987sreekanth-kr-vijaya-sr-veeraraghavan-delhi-ganesh-velaikkaran-1987111

Sreekanth-Tamil Actor Nagesh Interview-Nayagan-Zee Tamil(part-1)Sreekanth-Tamil Actor Nagesh Interview-Nayagan-Zee Tamil(part-1)Sreekanth-Tamil Actor Nagesh Interview-Nayagan-Zee Tamil(part-1)-1

Advertisements

14 comments on “Sreekanth

  1. நான் மிகவும் நேசிக்கும் ஒரு நடிகர் . கமல் ரஜினி கால கட்டத்திற்கு முந்தைய நடிகர் . சில நேரங்களில் சில மனிதர்கள்,ஒரு வீடு இரு உலகம்,ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ,புது செருப்பு கடிக்கும் ,கருணை உள்ளம்
    இதயத்தில் ஒரு இடம் போன்ற மிக சிறந்த படங்களை கொடுத்தவர்

    • இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்களில் என்னைக் கவர்ந்த நூற்றுக்கணக்கான படங்களில் வெண்ணிற ஆடை, அவள், ராஜநாகம், எதிர்நீச்சல், ராஜபார்ட் ரங்கதுரை, வெள்ளிக்கிழமை விரதம், பூவா தலையா, நவக்கிரகம் என பலவற்றை பட்டியலிட்டுக்கொண்டே செல்வேன். பெரிய நடிகருடன் மோதிவிட்டாரென புயலைக்கிளப்பி ஒரு கட்டத்தில் அவருக்குப் பட வாய்ப்புக்களையே தடுத்து ஓரங்கட்டிவிட்டனர் திரைத்துறையினர்.

  2. he first acted in K>Balachandar dramas In Major Chandrakanth,in this drama his name was Srikanth so Venkatraman becomes Srikanth later Balachander named the other son of major chandrakanth to Rajinikanth(Shivajirao)

  3. உண்மை மணி சார் மற்றும் சஹாதேவன் சார்
    இன்னும் சில வருடங்கள் ஸ்ரீகாந்த் நடித்து இருக்க வேண்டும் என்பது என் அவா

  4. உண்மை மணி சார்
    திரை துறையில் பணி ஆற்றுவதற்கு சில நெளிவு சுளிவுகள் தேவை
    திரு ஸ்ரீகாந்த் பற்றி இயக்குனர் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது .
    ‘ஸ்ரீகாந்த் மிக சிறந்த நடிகர் . திரை உலகம் இவரை புரிந்து கொள்ளவில்லையா அல்லது இவர் திரை உலகை இவர் புரிந்து கொள்ளவில்லையா ‘
    ஸ்ரீதர் பின்னாட்களில் எடுத்த ‘நானும் ஒரு தொழிலாளி’ திரை படத்தில் திரு.ஸ்ரீகாந்த் ஓர் இரண்டு காட்சிகள் நடித்து விட்டு பிறகு அந்த படத்தில் இருந்து விலகி கொண்டதாகவும் கூறி இருந்தார்

  5. இவர் சமீபத்தில் தான் தன்னுடைய சதாபிஷேக விழாவை மிக எளிமையாக வீட்டில் கொண்டாடியிருக்கிறார். அப்போது அவரின் புகைப்படம் வெளிவந்து வைரலாகி வருகின்றது.

    நீண்ட நாட்கள் கழித்து ஸ்ரீகாந்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இவரா அவர்? என்று பேசி வருகின்றனர்.

  6. ஸ்ரீகாந்த் அவர்கள் குறித்த செய்தியைப் பகிர்ந்துகொண்டமைக்கும், குறிப்பாக அவருடைய, அவரது மனைவியினுடைய புகைப்படத்தை இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொண்டமைக்கும் என் மனமார்ந்த நன்றி திரு.சேதுராமன். நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ரீகாந்த் குறித்த செய்தியைப் படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நாகேஷ் அவர்கள் மரணமடைந்தபோது இவர் அவர் குறித்து தொலைக்காட்சியில் நினைவூட்டியதாக எனக்கு நினைவு.

  7. ஸ்ரீகாந்த்
    – R.P.ராஜநாயஹம்
    ந.முத்துசாமி சாருடன் இருப்பது ரொம்ப அருமையான அனுபவம்.
    டி.வியில் பழைய ஸ்ரீகாந்த் பார்க்க நேர்ந்த போது “ இவரு இப்ப படங்கள்ள நடிக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார்.
    “ கொஞ்ச வருடங்களுக்கு முன் சில டி.வி சீரியலில் பார்த்திருக்கிறேன்.”
    முத்துசாமி சார் “ பெரிய புடுங்கின்னு நெனப்பு. நாங்க அமெரிக்கன் சென்டர் போகிற காலங்களில் அங்க ரொம்ப வெறப்பா அலட்டிக்கிட்டு…இருப்பார்.”
    இப்போது ஸ்ரீகாந்தின் சமீபத்திய புகைப்படம் பார்க்க கிடைத்தது!
    …………………………
    வெண்ணிற ஆடை படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் தியேட்டரில் அவரை திரையில் பார்த்து ரசிகர்கள் கத்தியதை நேரில் பார்த்த போது வெறுத்துப்போனார். அவருடைய நடிப்பு அப்போது தமிழ் ரசிகர்களுக்குப்பிடிக்கவில்லை.
    ரொம்ப அவமானமாயிருந்ததால் ஒரு முடிவெடுத்தார் – இனி சினிமாவில் நடிக்க கூடாது.
    இது அவரே சொன்ன விஷயம்.
    வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதற்கு நேர் மாறாக இவரை படம் பார்த்தவர்கள் புறந்தள்ளினார்கள். இப்போது அந்தப்படம் பார்த்தால் அவருடைய நடிப்பு அப்படியொன்றும் மோசமெல்லாம் கிடையாது.அருமையான பி.பி.எஸ் பாடல்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன்!
    1965ல் இருந்த ரசிகர்கள் முழுக்க எம்.ஜி.ஆர் – சிவாஜி மயக்கத்தில் இருந்தவர்கள்.
    ஸ்ரீகாந்த் அமெரிக்கன் செண்டரில் வேலை பார்த்துக்கொண்டே நடிக்க வந்தவர்.
    இவர் தன் திரைப்பட அறிமுகத்திற்குப்பின் கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டார்.
    ஸ்ரீ காந்த் சினிமா வாழ்வு கொஞ்சம் விசித்திர மானது. இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டதால் இவருக்கு எந்த பெரிய பலனும் கிட்டவில்லை.
    1965ல் ஸ்ரீதர் தரத்துக்கு சற்றும் பொருந்தாத இயக்குனரான ஜோசப் தளியத்தால் அறிமுகமான ஜெய்சங்கர் பிஸியான கதாநாயகன்.
    சிறந்த இயக்குனர் பாலச்சந்தர் நாடகங்களில் நடித்து ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் சினிமாவில் சாதாரண நடிகராகிவிட்டார்.
    ஸ்ரீதர் முன்னதாக அறிமுகப்படுத்திய ரவிச்சந்திரன் கூட ரசிகர்களால் ‘காதலிக்க நேரமில்லை’ யில் ரசிக்கப்பட்டார்.
    பாலச்சந்தர் நாடகங்களில் நடித்தவர் என்பதால் அதே வருடம் ‘நாணல்’ படத்தில் காமெடி பாத்திரம் செய்தார்.
    ஏ.வி.எம் ராஜன் ‘கற்பூரம்’(1967) – ‘நிலவே உனக்கு குறையேது? என் அருகினில் நெருங்கிட வரும்போது’ என்ற ஒரு பாடலுடன் ஸ்ரீகாந்த்துக்கு சின்ன ரோல்.மணிமாலாவை கற்பழிப்பார்.
    செல்வமகள் படத்திலும் ’செல்ல’ வில்லன்.
    பாலச்சந்தரின் “நாணல்”,
    “பாமாவிஜயம்”
    “எதிர் நீச்சல்”
    “பூவாதலையா?”
    “நவக்கிரகம்” படங்களில் எல்லாம் ஸ்ரீகாந்த் தன் முதல் படத்து பிம்பத்துக்கு சம்பந்தமேயில்லாமல் காமெடி ரோல் தான் செய்தார்!
    பாமா விஜயத்தில் சச்சுவிடம் ஸ்ரீகாந்த் ” I have no father.. no mother..”
    எதிர் நீச்சலில் சௌகாரிடம் ” ஏட்டிக்குப்போட்டி பேசாதேடி பட்டோ!”
    பூவாதலையா – “போடச்சொன்னா போட்டுக்கிறேன்.போடும் வரை கன்னத்திலே.” ஏ.எல்.ராகவன் பின்னனி குரல்!
    நவக்கிரகம் – “திட்டுறான் திட்டுறான் மறுபடியும் திட்டுறான்! எல்லாரும் சாட்சி.”
    அதன் பிறகு அந்த பாலச்சந்தர் பட பாத்திரங்களுக்கு சம்பந்தமேயில்லாமல் ப்ளேய் பாய் ஆக ஆளே மாறிவிட்டார். மிக பிஸி.
    “தோரஹா” இந்திப்படம் தமிழில் ‘அவள்’ தயாரிக்கப்பட்டபோது அதில் ருபேஷ் குமார் செய்த வில்லன் ரோலை செய்தார். “I’m always open!”
    வெண்ணிற ஆடை நிர்மலாவை கற்பழிப்பார்.
    சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் படங்களில் ஸ்ரீகாந்த் பிஸியான நடிகர். அதே 1972ல் காசே தான் கடவுளடா, ஞான ஒளி, தொடர்ந்து அடுத்த வருடம் ராஜபார்ட் ரங்கத்துரை.
    1974ல் சிவாஜியின் மகனாக தங்கப்பதக்கத்தில் கலக்கி விட்டார்.
    அதேவருடம் சிங்கிதம் சீனிவாசராவின் ‘திக்கற்ற பார்வதி’யில் கதாநாயகன். கதாநாயகி லக்ஷ்மி!
    ‘ராஜநாகம்’ படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன்.
    தேவர் படம் ‘கோமாதா என் குல மாதா’ வில் பிரமீளாவுக்கு ஜோடி.
    அவருடைய ஹேர்ஸ்டைல் தனித்துவமானது.
    வத,வத என்று பல படங்கள் நடித்தார்.
    ‘பைரவி’, ‘சதுரங்கம்’ இரண்டு 1978 படங்களில் ரஜினிகாந்த்துடன்.
    (மேஜர் சந்திரகாந்த் கதையில் இரண்டு பாத்திரங்கள். சந்திரகாந்தின் இருமகன்கள் ஸ்ரீகாந்த், ரஜினி காந்த்.
    இந்த இரண்டு பெயர்களை பாலசந்தர் இரண்டு நடிகர்களுக்கு சூட்டினார்!)
    கமல்ஹாசனுடன் “நீயா?”(1979)
    ஜெயகாந்தன் நாவல்களின் நாயகன்.
    ஒரு வித்தியாசமான ஸ்ரீகாந்த்.
    சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
    …….
    ஸ்ரீகாந்த் தன் நண்பன் நாகேஷ் பற்றி சொல்லியிருக்கிற சுவாரசியமான விஷயம்.
    நாகேஷ்,ஸ்ரீகாந்த்,கவிஞர் வாலி மூவரும் திரையுலக முயற்சியில் இருந்த காலத்திலேயே நண்பர்கள்.
    நாகேஷுக்கு நண்பர்கள் மத்தியில் பட்டப்பெயர்
    “மொபைல் நாகேஷ்”!
    தங்குவதற்கு தனி அறை ஏதும் இல்லாததால் ஒவ்வொரு நண்பர்கள் அறையாக மாறி, மாறி தங்கிக்கொள்வாராம்! அதனால் மொபைல் நாகேஷ்!

    Thanks to RP.Rajanayaham ,Film director

  8. இக்கட்டுரையை நான் முன்பே படித்திருக்கிறேன் சேதுராமன் அவர்களே. மிகச் சிறப்பாக எழுதியிருந்தார் திரு.ஆர்.பி.ராஜநாயகம் அவர்களே. இங்கே அவ்விணைப்பைப் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s