Vennira Aadai Moorthy

வெண்ணிற ஆடை மூர்த்தி (மூர்த்தி நட்ராஜா சாஸ்திரி) (பிறப்பு: 1936), வயது-78.வெண்ணிற ஆடை படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் இவரை அறிமுகம் செய்தார். அந்த படத்தின் பெயர் பின்னாளில் இவரது பெயருடன் ஒட்டிக்கொண்டு வெண்ணிற ஆடை மூர்த்தி ஆனார்.சிறந்த ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி. எல். பட்டதாரி, தொழில்முறை வழக்கறிஞர், அதுமட்டுமின்றி சோதிடம் பார்ப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.கமலஹாசன் முழுக் கதையின் நாயகனாக நடித்த, மாலை சூட வா திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.இவரது மனைவி மணிமாலாவும் ஒரு பிரபல நடிகை.இவருக்கு ஒரெயொரு மகன் உள்ளார்.

நன்றி-:-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

சங்கிலி [1982] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி

Image

சத்திய சுந்தரம் [1981] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி

Image

சங்கிலி-சுருளிராஜனுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி

Image

சத்திய சுந்தரம் -சுருளிராஜனுடன் வெண்ணிற ஆடை மூர்த்திImage

நளினிகாந்துடன் வெண்ணிற ஆடை மூர்த்தி

ImageImage

தேடி வந்த லட்சுமி (1973) படத்தில் தனித்தும் லட்சுமியுடனும் மூர்த்திVennira Aadai .Moorthy-Lakshmi-Thedi Vantha Lakshmi-1973-Vennira Aadai Moorthy-Lakshmi-Thedi Vantha Lakshmi-1973-Vennira Aadai Moorthy-Lakshmi-Thedi Vantha Lakshmi-1973-1Vennira Aadai Moorthy-Lakshmi-Thedi Vantha Lakshmi-1973-2Vennira Aadai Moorthy-Lakshmi-Thedi Vantha Lakshmi-1973-3

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் ஐசரிவேலன் மனோரமா, தேங்காய் சீனிவாசன்,வெண்ணிற ஆடை மூர்த்தி

Aisary Velan-Murthy-Manorama-Thenkai-Karunthel Kannayiram 1972-1

Aisary Velan-Murthy-Manorama-Thenkai-Karunthel Kannayiram 1972-

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் ஐசரிவேலன்  –வெண்ணிற ஆடை மூர்த்தி

Aisary Velan-Murthy-Karunthel Kannayiram 1972-

சுமதி என் சுந்தரி [1968] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்திV.A.Murthy-Sumathi En Sundari 1968-

“அவர் எனக்கே சொந்தம்” [1977] படத்தில் தனித்தும் தேங்காய் சீனிவாசனுடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி

Thengai-V.A.Murthy-Avar Enakke Sontham 1977-Venniradai Murthy-Avar Enakke Sontham 1977-

“நீ ஒரு மகாராணி” [ 1976] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்திVA.Moorthy-Nee Oru Maharani 1976-

சிட்டுக்குருவி படத்தில் சுமித்ரா, எஸ்,என்,லட்சுமியுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி

VA.Moorthy-Chittukkuruvi-VA.Moorthy-Sumithra-SN.Lakshmi-Chittukkuruvi-

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் ஏகே.வீராச்சாமி

Moorthy-Bommalattam 1968-2Moorthy-Kannil Theriyum Kathaikal 1980 -Moorthy-AK.Veerasami-Kannil Theriyum Kathaikal 1980 -

“பொம்மலட்டம்’ [1968] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்திMoorthy-Bommalattam 1968-Moorthy-Bommalattam 1968-1

“பொம்மலட்டம்’ [1968] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் கே.வி.சீனிவாசன்  KV.Sreenivasan-Moorthy-Bommalattam 1968-KV.Sreenivasan-Moorthy-Bommalattam 1968-1KV.Sreenivasan-Moorthy-Bommalattam 1968-2

’மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி Moorthy-Enga Ooru Pattukaran 1987-Moorthy-Enga Ooru Pattukaran 1987-1

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி  VA.Murthy-Muthaana Muthallavo 1976-

’முத்தான முத்தல்லவோ’ [1976] படத்தில் சுஜாதாவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி VA.Murthy-Sujatha-Muthaana Muthallavo 1976-VA.Murthy-Sujatha-Muthaana Muthallavo 1976-1VA.Murthy-Sujatha-Muthaana Muthallavo 1976-2

‘சிம்ம சொப்பனம்” [1981] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் மனோரமாவும் VA.Moorthi-Manorama-Simma Swappanam 1981-2VA.Moorthi-Manorama-Simma Swappanam 1981-3VA.Moorthi-Manorama-Simma Swappanam 1981-4VA.Moorthi-Manorama-Simma Swappanam 1981-1VA.Moorthi-Manorama-Simma Swappanam 1981-

“டாக்டரம்மா” [1974] படத்தில் உசிலை மணியுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி

Usilai Mani-V.A.Moorthy-Doctoramma 1974-Usilai Mani-V.A.Moorthy-Doctoramma 1974-3

“டாக்டரம்மா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்திV.A.Moorthy-Doctoramma 1974-1V.A.Moorthy-Doctoramma 1974-

V.A.Moorthy-Doctoramma 1974-3V.A.Moorthy-Doctoramma 1974-2

“டாக்டரம்மா” [1974] படத்தில் வி.ஆர்.திலகத்துடன் , வெண்ணிற ஆடை மூர்த்திVR.Thilagam-V.A.Moorthy-Doctoramma 1974-

“டாக்டரம்மா” [1974] படத்தில் வி.ஆர்.திலகம் , வெண்ணிற ஆடை மூர்த்தி, மஞ்சுளாVR.Thilagam-Manjula-V.A.Moorthy-Doctoramma 1974-

”சந்திப்பு” [1983] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்திVennira Adai Murthi-Santhippu 1983-

“நவக்கிரக நாயகி” [1985] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி Venniraadai Moorthy-Navagraha Nayagi 1985-

“நவக்கிரக நாயகி” [1985] படத்தில் பாண்டியன், பிந்துகோஷுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி Venniraadai Moorthy-Pandian-Navagraha Nayagi 1985-1Venniraadai Moorthy-Pandian-Navagraha Nayagi 1985-

Bindhugoash-Venniraadai Moorthy-Pandian-Navagraha Nayagi 1985-152

“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் மூர்த்திMurthy-Mohammed Bin Tughlaq 1971-Murthy-Mohammed Bin Tughlaq 1971-1

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் மனோரமாவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி

Vennira Aadai Moorthi-SIMLA SPECIAL 1982-1Vennira Aadai Moorthi-SIMLA SPECIAL 1982-Vennira Aadai Moorthi-Manorama-SIMLA SPECIAL 1982-57

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்திVA.Moorthi-Samayapurathale Satchi 1985-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் தயிர் வடை தேஷிகன், செந்தில்

VA.Moorthi-Senthil-Samayapurathale Satchi 1985-Thayirvada Desigan-VA.Moorthi-Senthil-Samayapurathale Satchi 1985-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன்  தயிர் வடை தேஷிகன்

Thayirvada Desigan-VA.Murthy-Samayapurathale Satchi 1985-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் திடீர் கன்னையா, தயிர் வடை தேஷிகன்Thayirvada Desigan-Thideer Kannaiah-VA.Murthy-Samayapurathale Satchi 1985-62

“தீர்ப்புகள் திருத்தப்படலாம்” [1982] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி

VA.Murthy-Theerppukal Thiruthapadalam 1982-VA.Murthy-Theerppukal Thiruthapadalam 1982-1

“தீர்ப்புகள் திருத்தப்படலாம்” [1982] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஒய்.ஜி.மகேந்திரன் VA.Murthy-YGM-Theerppukal Thiruthapadalam 1982-

“தீர்ப்புகள் திருத்தப்படலாம்” [1982] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் சிவகுமார் VA.Murthy-Sivakumar-Theerppukal Thiruthapadalam 1982-VA.Murthy-Sivakumar-Theerppukal Thiruthapadalam 1982-167

“அத்தையா மாமியா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்திVennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-Vennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-1

“அத்தையா மாமியா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் மனோரமா

Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் நாகேஷ் Vennira Aadai Moorthy-Nagesh-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஸ்ரீகாந்த்

Sreekanth-Vennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-2Sreekanth-Vennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-1Sreekanth-Vennira Aadai Moorthy-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் தேங்காய் சீனிவாசன்

Vennira Aadai Moorthy-THENGAI-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமாவுடன் எம்.பானுமதி

M.Bhanumathi-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-1M.Bhanumathi-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில்  வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் நாகேஷ், ஸ்ரீகாந்த்

Vennira Aadai Moorthy-Nagesh-Sreekanth-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமாவுடன் காந்திமதி

Gandhimathi-Thengai-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-Gandhimathi-Thengai-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-180

“குடும்பம்” 1984 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஜெய்சங்கர் V.A.Murthy-Kudumbam 1984-V.A.Murthy-Jaisangar-Kudumbam 1984-

“குடும்பம்” 1984 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன்  எம்.ஆர்.கே. V.A.Murthy-MRK-Kudumbam 1984-

“குடும்பம்” 1984 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் கல்லாபெட்டி சிங்காரம் V.A.Murthy-Kallappetti-Kudumbam 1984-84

“அனுபவம் புதுமை’’ 1967 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் முத்துராமன் VA.Moorthi-Anubavam Pudhumai 1967-VA.Moorthi-R.Muthuraman-Anubavam Pudhumai 1967-VA.Moorthi-R.Muthuraman-Anubavam Pudhumai 1967-1VA.Moorthi-R.Muthuraman-Anubavam Pudhumai 1967-288

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஜெய்சங்கருடன் வெண்ணிற  ஆடை மூர்த்திVA.Moorthi-Thanikattu Raja 1983-1VA.Moorthi-Thanikattu Raja 1983-VA.Moorthi-Jaisangar-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் செந்தாமரை,ஜெய்சங்கருடன் வெண்ணிற  ஆடை மூர்த்தி

VA.Moorthi-Senthamarai-Jaisangar-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் கே.கண்ணன், ராஜேஷ்,ஜெய்சங்கருடன் வெண்ணிற  ஆடை மூர்த்தி,K.Kannan-Jaisankar-Rajesh-VA.Moorthi-Thanikattu Raja 1983-93

“ஒரு இனிய உதயம்” [1986] படத்தில் விஜயகாந்துடன் வெண்ணிற ஆடை மூர்த்தி VA.Murthy-Oru Iniya Udhayam 1986-VA.Murthy-Oru Iniya Udhayam 1986-1VA.Murthy-Vijayakanth-Oru Iniya Udhayam 1986-

“ஒரு இனிய உதயம்” [1986] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அமலாVA.Murthy-Amala-Oru Iniya Udhayam 1986-

“ஒரு இனிய உதயம்” [1986] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் சி.கே.சரஸ்வதிCK.Saraswathi-VA.Murthy-Oru Iniya Udhayam 1986-98

”புது யுகம்” [1985] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் வெண்ணிற ஆடை மூர்த்திVA.MURTHY-Puthu Yugam 1985-VA.MURTHY-Puthu Yugam 1985-1VA.MURTHY-YGM-Puthu Yugam 1985-VA.MURTHY-YGM-Puthu Yugam 1985-1102

Advertisements

7 comments on “Vennira Aadai Moorthy

  1. பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.

    காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் – நடிகை என்ற முறையில் `ஹலோ’ சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய, நட்பு ஆனது.

    5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு, திருமணத்தில் முடிந்தது. 1970-ம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார், மூர்த்தி.

    இதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படிச் சொன்னார்:

    “பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம். சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.

    மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், “இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே” என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ’வும் இருந்ததில்லை. அதனால் “நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்” என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

    மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.

    திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நடிகர்கள் ஜெமினிகணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள். நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.

    நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி, எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.

    திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு `மனோ’ என்று ஒரே மகன். என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையும் உண்டு.

    மனோவின் மனைவி சபிதா, கம்ப்யூட்டர் என்ஜினீயர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவர். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.

    மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா – மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட, ஒரு சின்ன தப்புகூட அவனைப்பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

    கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட, உடனே போன் பண்ணி `இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்’ என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.

    மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருஷத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், “அப்பா! அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா” என்றான். எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது. “அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா… எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்” என்றேன். நான் இப்படிச் சொன்னபோது, அவனும் கண் கலங்கிவிட்டான்.

    திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை, டைரக்டர் கே.பாலசந்தர் “சிந்து பைரவி” படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வர்ற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலசந்தரின் “சஹானா” சீரியலிலும் நடிச்சாங்க. இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட, என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க.”

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும், மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

    வைஜயந்தி மாலா நடித்த “வாழ்க்கை”யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து “எல்லைக்கோடு” படத்தில் காமெடி செய்திருக்கிறார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று பரிமாணங்களிலும் வெளிப்பட்டவர். அவருடனும் “சமையல்காரன்” படத்தில் நடித்தார், மூர்த்தி.

    டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா’ என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார். இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார், மூர்த்தி.

    3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார், மூர்த்தி.

    வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    “தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.

    “எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க” என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா’ இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் “சின்னவீடு” என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு’ என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?

    அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.”

    இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

  2. இதே கட்டுரையை நானும் படித்திருக்கிறேன் திரு.சேதுராமன். இங்கே பிரசுரித்ததற்கு மிக்க நன்றி.

  3. Moorthy with his mother

    தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் `வெண்ணிற ஆடை’ மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

    810 படங்களில் நடித்த வெண்ணிற ஆடை மூர்த்தி
    தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் `வெண்ணிற ஆடை’ மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

    மூர்த்தி, எடுத்த எடுப்பிலேயே நடிக்க வந்துவிடவில்லை. வக்கீல் வேலைக்கு படித்தார். கோர்ட்டில் தனது கட்சிக்காரர்களுக்காக `யுவர் ஆனர்’ என்று ஆரம்பித்திருக்க வேண்டிய இவரது `சட்ட’ வாழ்க்கை, சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு கலைத்துறைக்குள் பயணிக்க நேர்ந்தது முற்றிலும் எதிர்பாராத விஷயம்.

    சொந்த ஊர் சிதம்பரம். அப்பா கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிரிமினல் வக்கீலாக இருந்தார். அப்பா, தன் வழியில் மகன் மூர்த்தியையும் வக்கீலாக்கிப் பார்க்க விரும்பியிருக்கிறார்.

    தனக்கென்று வேறு எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில், மூர்த்தியும் வக்கீலுக்கு படித்து பாஸ் செய்தார்.

    அப்பாவிடமே ஜுனியராக சேர்ந்திருந்தால் கடலூர் மாவட்டத்துக்கு இன்னொரு பிரபல கிரிமினல் வக்கீல் கிடைத்திருப்பார். ஆனால் மூர்த்தி சட்டப்படிப்பை முடித்த நேரத்தில் அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போக, வேறொரு சீனியரிடம் ஜுனியராக பிராக்டிஸ் செய்ய மூர்த்தியின் மனம் ஒப்பவில்லை. இதனால் அப்போது சர்வதேச அளவில் வியாபித்திருந்த “ரெமிங்டன்” டைப்ரைட்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலைக்குப் போனார். ஒரு வருடம் இந்தப் பணி தொடர்ந்திருக்கிறது.

    பிறகு எப்படி மூர்த்தி நடிகரானார்? இந்த வகையில் அவரை நடிப்பு பக்கம் திருப்பியதே ஜாதகம்தான்.

    அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்: “ரெமிங்டன் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலையில் ஊர் ஊராக சுற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படி `நாளொரு பயணம்; பொழுதொரு ஊர்’ என்ற நிலை எனக்கு ஒத்துவரவில்லை. அதனால் அந்த வேலையை விட்டு விட்டு, சுமார் 6 மாதம் சும்மா இருந்தேன்.

    அப்போது நான் சென்னையில் “ஒய்.எம்.சி.ஏ” விடுதியில் தங்கியிருந்தேன். ஒருநாள் சாப்பிட்டு முடித்துவிட்டு கடைத்தெரு வழியாக வரும்போது ஜோதிடம் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகம் என் கண்ணில் பட்டது. வாங்கி படித்தேன்.

    அதில் ஜோதிடரிடம் ஒருவர் “எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?” என்று கேட்டிருந்தார். பதிலுக்கு அந்த ஜோதிடர் “வருகிற ஜுலை மாதம் 10-ந்தேதிக்குள் திருமணம் நடந்தே தீரும்” என்று எழுதியிருந்தார்.

    எனக்கு ஆச்சரியம். இத்தனை தெளிவாக தேதி வாரியாக ஒருவரின் வாழ்க்கை நிலையை தீர்மானிக்க ஜோதிடத்தால் முடியுமா? இந்தக் கேள்வியை அந்த ஜோதிடரிடம் நேரில் சென்று கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அந்தப் பத்திரிகையில் அவர் கொடுத்திருந்த போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். “உங்களை சந்திக்க வேண்டும்” என்றேன். “சைதாப்பேட்டையில் இருக்கிறேன். மதியம் வாருங்கள்” என்றார்.

    போனேன். சாதாரண ஓட்டு வீட்டில் இருந்தார். அறை முழுக்க ஜோதிட புத்தகங்கள். பார்த்த மாத்திரத்தில் மரியாதை தரும்

    தோற்றம்.என்னைப் பார்த்ததும், “நீங்கதான் போன் பண்ணினீங்களா?” என்று கேட்டார். பேச்சு சகஜமாக வளரத் தொடங்கிய நேரத்தில், “ஒருத்தருக்கு கல்யாணம் எப்போ நடக்கும்? வேலை எப்ப கிடைக்கும்? இதெல்லாம் ஜோதிடம் எப்படி முடிவு செய்ய முடியும்? நீங்கள் இதில் இன்னும் ஒருபடி மேலே போய் “இந்த தேதிக்குள் நடக்கும் என்று சொல்வதெல்லாம் சரிதானா?” என்று கேட்டேன்.

    என் கேள்வியை புரிந்து கொண்டவர் என்னிடம், “தம்பி! ஜோதிடம் என்பது மேஜிக் விஷயம் அல்ல. அது கணிதம். சரியாக குறித்தோமானால் நேரம் தப்பாது” என்றார்.

    “அப்படியானால், எதிர்காலத்தில் நான் என்னவாக வருவேன் என்பதை சொல்ல முடியுமா, உங்களால்?” என்று கேட்டேன்.

    “உன் ராசி, லக்னத்தை சொல்லு” என்றார்.

    நானும் “கன்யா ராசி; துலாம் லக்னம்” என்று சொன்னேன்.

    குறித்துக் கொண்டவர், என் பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றையும் கேட்டுக்கொண்டார். பிறகு ஏதேதோ கணக்கு மாதிரி எழுதினார். `என்ன சொல்லப் போகிறாரோ’ என்ற ஆர்வத்தில் இருந்த என்னிடம், “தம்பி! உங்களுக்கு `மேக்கப்’ வாழ்க்கைதான் அமையும். சினிமாவில் நடிப்பீங்க. ஜனங்களை சிரிக்க வைப்பீங்க. ஆனால் அதுல நம்பர் ஒன்ல வரமாட்டீங்க. நம்பர் டூ-திரிக்குள் இருப்பீங்க. வயதாகி குச்சி ஊன்றும் காலம் வரை நடிப்பில் உங்கள் இடம் நிரந்தரமாக இருக்கும்” என்றார்.

    நான் நடிப்பேனா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருக்கிறது. அப்புறமாய் அதைக்கூட மறந்தாச்சு. பிறகு எப்படி நடிக்க வாய்ப்பு? அதுவும் சினிமாவில்?

    இந்த மாதிரி கேள்விகள் எனக்குள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்த நேரத்தில்கூட அவரை விடவில்லை. “நீங்கள் சொன்னதை எனக்கு எழுதித்தர வேண்டும். அதுவும் எவ்வளவு நாளைக்குள் இது நடக்கும் என்று எழுதித் தரவேண்டும்” என்றேன்.

    “ஏன், என் மேல் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார் ஜோதிடர்.

    “நீங்கள் சொன்ன தேதிக்குள் நடிகனாகி விட்டால் உங்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமே. அதற்குத்தான் தேதி கேட்டேன்” என்றேன்.

    நான் ஜோதிடரை சந்தித்தது 1964-ம் ஆண்டு பிப்ரவரியில்.

    அவர் என்னிடம் “வருகிற அக்டோபர் 30-ந்தேதிக்குள் நடிகனாகி விடுவாய்” என்று எழுதி கையெழுத்து போட்டு தந்தார். அவர் சொன்னதை விடவும் 7 நாளுக்கு முன்பே அதாவது அக்டோபர் 23-ந்தேதியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. டைரக்டர் ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை’ படம்தான் என் ஜோதிடத்தை மெய்யாக்கி என்னையும் நடிகனாக்கி விட்டது. ஒரு 7 நாள் தள்ளிப் போயிருந்தால் சினிமா உலகம் தப்பிச்சிருக்கும்!”

    நகைச்சுவையாகவே சொன்னார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    மூர்த்திக்கு ஸ்ரீதர் சினிமா வாய்ப்பு அளித்தது எப்படி?

    மூர்த்தி, ஜோதிடரை சந்தித்த சில நாட்களுக்குப்பிறகு, ஸ்ரீதரின் உதவியாளராக இருந்த என்.சி.சக்ரவர்த்தியை தற்செயலாக சந்தித்திருக்கிறார். அப்போது அவர் ஸ்ரீதரின் உதவியாளர் என்று தெரிந்ததும், “டைரக்டர் ஸ்ரீதரிடம் ஒருநாள் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள்” என்று

    கேட்டார்.`அதற்கென்ன’ என்று சர்வசாதாரணமாக சொன்ன சக்ரவர்த்தி, அடுத்த சந்திப்பிலேயே மூர்த்தியை ஸ்ரீதர் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்.

    நடிக்க வேண்டும் என்று நினைத்ததுமே டைரக்டர் ஸ்ரீதரின் பட வாய்ப்பு கிடைத்து விடும் போலிருக்கிறதே என்று மூர்த்திக்கும் ஆச்சரியம்.

    “இப்போது நான் எடுப்பது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம். உங்களுக்கு எந்த மாதிரி நடிப்பு வரும்?” என்று ஸ்ரீதர் கேட்டார்.

    “எனக்கு காமெடி நல்லா வரும்னு நினைக்கிறேன்” என்றார் மூர்த்தி.

    “நீங்கள் வக்கீலுக்கு படித்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில்கூட `படித்தவர்’ என்ற களை தெரியுது. நீங்கள் எப்படி நடிப்பில் சிரிக்க வைக்க முடியும்?” என்று கேட்டார், ஸ்ரீதர்.

    தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று மூர்த்திக்கு புரிந்து விட்டது. “பரவாயில்லை சார்! எனக்கு வாய்ப்பு தருவதாக இருந்தால் உங்க மானேஜர் மூலமாக எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

    அப்போதுதான் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டது. அதை மூர்த்தியே சொல்கிறார்:

    “நடிக்க வாய்ப்பு இல்லை, ஆனால் முகத்தில் நல்ல `களை’ இருக்கிறது என்று ஸ்ரீதர் சார் சொன்னது என் மனதில் ஆழப்பதிந்து விட்டது. எனவே, அவரிடம் விடைபெற்று வாசல் வரை வந்தபோது மறுபடியும் அவர் பக்கமாக திரும்பினேன். “சார்! `ஒருத்தருக்கு நல்ல முகம் அமைஞ்சா அதுவே அதிர்ஷ்டமாகவும் ஆகிவிடும்’ என்பது ஆங்கிலப் பழமொழி. ஆனால், என் விஷயத்தில் மட்டும் இந்தப் பழமொழி பொய்யாகி விட்டது. பரவாயில்லை சார். நான் வருகிறேன்” என்று அறைக் கதவை திறந்தேன்.

    நான் சொன்னது ஸ்ரீதர் சாரை பாதித்து விட்டது போலும். எனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். எனக்கு மீசை வைத்து மேக்கப் போட்டு, படம் எடுத்தார்கள். அப்போது நான் `திருதிரு’வென விழித்ததில், எனக்குள் இருந்த காமெடி நடிகனை கண்டு கொண்டார், ஸ்ரீதர். ஸ்ரீதர் சாரின் `வெண்ணிற ஆடை’ படம் மூலம் காமெடி நடிகன் ஆனேன். சாதாரண மூர்த்தி `வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஆனது

    இப்படித்தான்.”இவ்வாறு “வெண்ணிற ஆடை” மூர்த்தி கூறினார்.

    Thanks to Maalaimalar

  4. மீண்டும் ஜோக்ஸ் டயரி
    0 reviews
    Author: “கலைமாமணி” வெண்ணிற ஆடை மூர்த்தி

    Category: நகைச்சுவை

    Stock Available – Shipped in 1-2 business days

    PRICE: 40.00

    It is an excellent book consists of lot of jokes.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s