Vennira Aadai Nirmala

வெண்ணிற ஆடை நிர்மலா. இயற்பெயர் A. B.சாந்தி. மலையாளத் திரைப்படங்களில் இவரது பெயர் உஷா குமாரி. ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் 1965 ஆம் ஆண்டு இவர் அறிமுகம் ஆனார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளப்படங்கள் பலவற்றில் கதாநாயகியாக நடித்தவர். பின்னாளில் நல்ல குணச்சித்திரப்பாத்திரங்களிலும் நகைச்சுவை

வேடங்களிலும் நடித்தவர், நடித்துவருபவர். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். நாட்டியப்பள்ளியும் நடாத்திவருகிறார்.

ரகசிய போலீஸ் 115, காதலித்தால் போதுமா, இதயக்கனி, லட்சுமி கல்யாணம், ஆதிபராசக்தி, தங்கக்கோபுரம், பூக்காரி, தெய்வம் பேசுமா, எங்கமாமா, சொர்க்கம், நாடகமே உலகம், மன்னிப்பு, வைராக்கியம், வீட்டுக்கு வீடு, அன்புக்கோர் அண்ணன்,  சுடரும் சூறாவளியும், பூவா தலையா, நீதிதேவன், தங்கைக்காக, அன்பு சகோதரர்கள், வெகுளிப்பெண், அவள், இன்று போல் என்றும் வாழ்க போன்றவை இவர் நடித்தவற்றுள் சில.

Vennira Aadai Nirmala (born as A. B. Shanthi in Kumbakonam) is an Tamil film actress. Debuting through C. V. Sridhar‘s Vennira Aadai in 1965, she has appeared in over 200 films in Tamil. In addition to her acting career, Nirmala is also a trained Bharatanatyam dancer.

எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் இணைந்து நடித்து புகழ் பெற்று விளங்கிய நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா என்ற தலைப்பில் வலைப்பூவில் வெண்ணிற ஆடை நிர்மலா குறித்து வெளியாகியிருந்த கட்டுரை.

“வெண்ணிற ஆடை” மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமான நிர்மலா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.உண்மையில், “வெண்ணிற ஆடை”யில் நடித்தபின் மேற்கொண்டு நடிக்க நிர்மலா விரும்பவில்லை.இதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தனியாக 10-ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்து விட்டு, கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாவது காரணம், “வெண்ணிற ஆடை”யில் தன்னுடைய நடிப்பு நிர்மலாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பட உலகையே விட்டு ஒதுங்கிவிட எண்ணினார்.இந்த சமயத்தில் பிரபல மலையாள டைரக்டர் குஞ்சாகோ, தான் எடுக்கும் “காட்டு துளசி” என்ற படத்தில் நிர்மலாவை நடிக்க வைக்க விரும்பினார்.ஆனால் நிர்மலா நடிக்க மறுத்தார். “என் முதல் படத்திலேயே என் நடிப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, எனக்கு நடிக்க விருப்பம் இல்லை” என்று கூறினார்.ஆனால் குஞ்சாகோ விடுவதாக இல்லை. “உங்களிடம் மறைந்திருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவர என்னால் முடியும். `காட்டுத்துளசி’, உங்களுக்கு ஏற்ற அருமையான கதை. இதில் நடித்தால், உங்களுக்கு பெரும் புகழ் கிடைப்பது உறுதி” என்று கூறினார்.அவருடைய வற்புறுத்தல் காரணமாக, “காட்டுத்துளசி”யில் நிர்மலா நடித்தார்.அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாளப்பட உலகில் நிர்மலா பெரும் புகழ் பெற்றார். நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன.

இதனால், மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தை கைவிட்டு மலையாளப் படங்களில் நடிக்கலானார்.

இதன்பின் 1968-ம் ஆண்டு, சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த “லட்சுமி கல்யாணம்” படத்தில் நடிக்க, நிர்மலாவுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, நிர்மலா நடித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த “ரகசிய போலீஸ் 115” என்ற படத்தில், எம்.ஜி.ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து “கண்ணில் தெரிகின்ற வானம், கையில் வராதோ” என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.

தொடர்ந்து, “பூவா தலையா”, “மன்னிப்பு”, “வைராக்கியம்”, “வீட்டுக்கு வீடு”, “அன்புக்கு ஒரு அண்ணன்”, “சுடரும் சூறாவளியும்”, “நீதிதேவன்”, “தங்கச்சுரங்கம்”, “எங்கமாமா”, “தங்கைக்காக”, “அன்பு சகோதரர்கள்”, “வெகுளிப்பெண்”, “இன்றுபோல் என்றும் வாழ்க”, “இதயக்கனி” உள்பட பல படங்களில் நடித்தார்.

1972-ல் இந்தியில் “தோரகா” என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட “புதிய அலை” படம்.

இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, “அவள்” என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனாக ஸ்ரீகாந்த்தும் நடித்தனர்.

இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார்.

ஒரு விருந்தில், எல்லோரும் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.

இந்த படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்று பட்டிமன்றமே நடந்தது. “படம் ஆபாசம்” என்று சிலர் கூறினார்கள். “குடிப்பழக்கத்தின் தீமையை, இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது” என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.

1974-ம் ஆண்டு “அவளுக்கு நிகர் அவளே” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார், நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடித்தார்.

இப்படத்தின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.

200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

தமிழக அரசின் “கலைமாமணி” விருதும், “நாட்டிய திலகம்” என்ற பட்டமும் பெற்றவர்.

“ஆடிவரும் தேனே”, “கற்பகம்”, “கல்கி” ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.

தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-

“எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் குணம், என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது.

சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சி தொடர்கள் எனக்கு ஒத்து வரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.”

இவ்வாறு நிர்மலா கூறினார்.

http://www.maalaimalar.com/2014/08/17224246/mgr-sivaji-famous-actors-veni.html

இவர் அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தின் காட்சிகள்

ImageImage

ஸ்ரீதருடன் வெண்ணிற ஆடை படத்தில்

ImageImage

 எங்க மாமா படத்தில் ஏ.பி.நிர்மலா [ Enga Maamaa ]

Image

ImageImage

சிவாஜிகணேசனுடன் ஏ.பி.நிர்மலா

Image

நாடகமே உலகம் [1978] படத்தில்

Image

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் தனித்தும் எஸ்.ஏ.அசோகனுடனும் வெண்ணிற ஆடை நிர்மலாVennira aadai Nirmala-Ragasiya Police 115-1Vennira aadai Nirmala-SA.Ashokan-Ragasiya Police 115-

பொம்மா பொருசா [1971] தெலுங்குப் படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா. இப்படம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற பூவா தலையா படத்தின் தழுவல். தெலுங்கில் ஏவி.எம். தயாரிப்பில் கே.பாலசந்தரே இப்படத்தையும் இயக்கியிருந்தார். தமிழில் இவருக்கு ஜோடி ஜெய்சங்கர். தெலுங்கில் சந்திரமோகன்.

Venniradai Nirmala-Bomma Borusa [Poovaa Thalaiyaa] 1971-

காயங்குளம் கொச்சுண்ணி [1966] படத்தில் பாடகர் கே.ஜே.யேசுதாஸுடனும் தனித்தும் வெண்ணிற ஆடை நிர்மலா

Vennira Aadai Nirmala-Kayamkulam Kochunni 1967-Vennira Aadai Nirmala-Kayamkulam Kochunni 1967-1KJ.Yesudhas-Nirmala-Kayamkulam Kochunni 1967-

” ஏன் “ [1974] படத்தில் ஏ.பி.நிர்மலாA B Nirmala-En 1974-A B Nirmala-En 1974-1A B Nirmala-En 1974-2A B Nirmala-En 1974-3

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  ஏ.பி.நிர்மலாA B Nirmala-Lakshmi-En 1974-

” ஏன் “ [1974] படத்தில் ஏ.பி.நிர்மலாவுடன் ஏவி.எம்.ராஜன்A B Nirmala-AVM Rajan-En 1974-2A B Nirmala-AVM Rajan-En 1974-1A B Nirmala-AVM Rajan-En 1974-

ஏவி.எம்-மின் ‘மூக நோமு’ [1969] படத்தில் ஏ.பி.நிர்மலா தனித்தும் ராஜநளா காலேஸ்வர ராவுடனும்

AB.Nirmala-Mooga Nomu 1969-AB.Nirmala-Rajanala-Mooga Nomu 1969-AB.Nirmala-Rajanala-Mooga Nomu 1969-1

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் ஏ.பி.நிர்மலா

AB.Nirmala-Aathi Parasakthi 1971-AB.Nirmala-Aathi Parasakthi 1971-1AB.Nirmala-Aathi Parasakthi 1971-2AB.Nirmala-Aathi Parasakthi 1971-C

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் ஷைலஸ்ரீயுடன் நிர்மலா

AB.Nirmala-Shailasree-Aathi Parasakthi 1971-Shailasree-AB.Nirmala-Aathi Parasakthi 1971-Shailasree-AB.Nirmala-Aathi Parasakthi 1971-1

1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் ஆர்.முத்துராமனுடன்

Muthuraman-Nirmala-Aathi Parasakthi 1971-C

“அவளுக்கு நிகர் அவளே” [1974] படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவும், ஷண்முகசுந்தரமும்

AB.Nirmala-Avalukku Nigar Avale 1974-Shunmuga Sundaram-AB.Nirmala-Avalukku Nigar Avale 1974-

தங்கைக்காக [1972] படத்தில் சிவாஜிகணேசனுடன் ஏ.பி.நிர்மலா

AB.Nirmala-Thangaikkaga 1970-1AB.Nirmala-Thangaikkaga 1970-AB.Nirmala-Sivaji-Thangaikkaga 1970-AB.Nirmala-Sivaji-Thangaikkaga 1970-1

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாAB.Nirmala-Eduppar Kai Pillai 1975-AB.Nirmala-Eduppar Kai Pillai 1975-2AB.Nirmala-Eduppar Kai Pillai 1975-1

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் ஜெய்சங்கருடன் வெண்ணிற ஆடை நிர்மலா

AB.Nirmala-Jaisangar-Eduppar Kai Pillai 1975-AB.Nirmala-Jaisangar-Eduppar Kai Pillai 1975-1AB.Nirmala-Jaisangar-Eduppar Kai Pillai 1975-2

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் பி.பானுமதியுடன் வெண்ணிற ஆடை நிர்மலா

AB.Nirmala-P.Banumathi-Eduppar Kai Pillai 1975-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில்  நிர்மலாAB.Nirmala-Lakshmi Kalyanam 1968-1AB.Nirmala-Lakshmi Kalyanam 1968-AB.Nirmala-Lakshmi Kalyanam 1968-A

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் சிவாஜி, சௌகார் ஜானகியுடன் நிர்மலா

AB.Nirmala-Sowkar-Sivaji-Lakshmi Kalyanam 1968-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் சோவுடன் நிர்மலாAB.Nirmala-Cho-Lakshmi Kalyanam 1968-1AB.Nirmala-Cho-Lakshmi Kalyanam 1968-

“லக்ஷ்மி கல்யாணம்” [1968] படத்தில் ஏ.கருணாநிதியுடன் நிர்மலாA.Karunanithi-AB.Nirmala-Lakshmi Kalyanam 1968-54

“குழந்தைக்காக” [1968] படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் கிருஷ்ணா

P.Nirmala-Kuzhanthaikkaga 1968-P.Nirmala-Krishna-Kuzhanthaikkaga 1968-Krishna-P.Nirmala-Kuzhanthaikkaga 1968-57

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் ஏ.பி.நிர்மலாNIRMALA-Gnana Kuzhanthai 1979-NIRMALA-Gnana Kuzhanthai 1979-1NIRMALA-Gnana Kuzhanthai 1979-4NIRMALA-Gnana Kuzhanthai 1979-3ANIRMALA-Gnana Kuzhanthai 1979-3

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் ஏ.பி.நிர்மலாவுடன் பேபி சுதா BABY SUDHA-NIRMALA-Gnana Kuzhanthai 1979-

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் ஏ.பி.நிர்மலாவுடன் ஜெமினி கணேசன்Gemini-NIRMALA-Gnana Kuzhanthai 1979-2Gemini-NIRMALA-Gnana Kuzhanthai 1979-1Gemini-NIRMALA-Gnana Kuzhanthai 1979-66

“மறவில் திரிவு சூக்ஷிக்குக” 1972 படத்தில் உஷா குமாரி என்ற வெண்ணிற ஆடை நிர்மலாUshakumari as Maalu-Maravil Thirivu Sookshikkuka 1972-Ushakumari as Maalu-Maravil Thirivu Sookshikkuka 1972-1Ushakumari -Prem Nazir as Jayadevan-Maravil Thirivu Sookshikkuka 1972-Ushakumari -Prem Nazir-Maravil Thirivu Sookshikkuka 1972-Ushakumari -Vincent-Maravil Thirivu Sookshikkuka 1972-71

“கல்லுக்குள் ஈரம்” 1980 படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் பாரதிராஜாVennira Aadai Nirmala-Kallukkul Eeram 1980 -2Vennira Aadai Nirmala-Kallukkul Eeram 1980 -1Vennira Aadai Nirmala-Kallukkul Eeram 1980 -Vennira Aadai Nirmala-Bharathiraja-Kallukkul Eeram 1980 -75

“உனக்காக நான்” 1976 படத்தில் ஜெமினி கணேசனுடன் வெண்ணிற ஆடை நிர்மலாVennira Aadai Nirmala-Unakkaga Naan 1976-Vennira Aadai Nirmala-Unakkaga Naan 1976-1Vennira Aadai Nirmala-Unakkaga Naan 1976-2Vennira Aadai Nirmala-Gemini-Unakkaga Naan 1976-1Vennira Aadai Nirmala-Gemini-Unakkaga Naan 1976-80

எம்.ஜி.ஆருடன் ஏ.பி.நிர்மலா படம்:-நாளை நமதே [1975]v-a-nirmala-naalai-namadhe-1975-1v-a-nirmala-naalai-namadhe-1975v-a-nirmala-mgr-naalai-namadhe-1975

 கே.கண்ணனுடன் ஏ.பி.நிர்மலா படம்:-நாளை நமதே [1975]v-a-nirmala-kannan-naalai-namadhe-197584

மீனவ நண்பன் [1977] படத்தில் எம்.ஜி.ஆருடன் நிர்மலாvennira-aadai-nirmala-as-shanti-meenava-nanban-1977vennira-aadai-nirmala-mgr-meenava-nanban-1977

மீனவ நண்பன் [1977] படத்தில் எம்.என்.நம்பியாருடன் நிர்மலாvennira-aadai-nirmala-mn-namvbiar-meenava-nanban-1977

மீனவ நண்பன் [1977] படத்தில் வி.கே.ராமசாமி, நிர்மலாvennira-aadai-nirmala-v-k-ramaswamy-meenava-nanban-1977

மீனவ நண்பன் [1977] படத்தில் வி.கே.ராமசாமி, லதாவுடன் நிர்மலாvennira-aadai-nirmala-v-k-ramaswamy-latha-meenava-nanban-1977

மீனவ நண்பன் [1977] படத்தில் வி.கே.ராமசாமி, லதா, எம்.என்.நம்பியாருடன் நிர்மலா

vennira-aadai-nirmala-v-k-ramaswamy-mn-namvbiar-latha-meenava-nanban-197790

“தெய்வத்திருமணங்கள்” ” 1981 படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஏ.பி.நிர்மலா

ab-nirmala-deiva-thirumanangal-1981-3ab-nirmala-deiva-thirumanangal-1981-4ab-nirmala-deiva-thirumanangal-1981ab-nirmala-deiva-thirumanangal-1981-1ab-nirmala-deiva-thirumanangal-1981-2ab-nirmala-mn-nambiar-deiva-thirumanangal-1981ab-nirmala-mn-nambiar-deiva-thirumanangal-1981-197

Vennira Aadai Nirmala [Usha Kumari] with Prem Nazir in ‘Dhathuputhran’ 1970 Malayalam Movie

ab-nirmala-prem-nazir-dathuputhran-1970

Vennira Aadai Nirmala [Usha Kumari] with Sathyan in ‘Dhathuputhran’ 1970 Malayalam  Movie

ab-nirmala-sathyan-dathuputhran-1970ab-nirmala-sathyan-dathuputhran-1970-1ab-nirmala-sathyan-dathuputhran-1970-2

Vennira Aadai Nirmala [Usha Kumari], Sathyan, Sheela with Prem Nazir in ‘Dhathuputhran’ 1970 Malayalam Movieab-nirmala-prem-nazir-sathyan-dathuputhran-1970102

 Sheela GK.Pillai with Usha Kumari  in Punnapra Vayalar 1968- Malayalam MovieVA.Nirmala-Punnapra Vayalar 1968-1VA.Nirmala-Punnapra Vayalar 1968-VA.Nirmala-G.K.Pilla-Punnapra Vayalar 1968-

Sheela with Usha Kumari  in Punnapra Vayalar 1968- Malayalam MovieVA.Nirmala-Sheela-Pankajavalli-Punnapra Vayalar 1968-

Rajkokila, Sheela with Usha Kumari  in Punnapra Vayalar 1968- Malayalam MovieRajkohila-AB.Nirmala-Sheela-Punnapra Vayalar 1968-107

Advertisements

4 comments on “Vennira Aadai Nirmala

 1. திருத்தம் செய்யப்பட்டது திரு.சேதுராமன். கூர்ந்து கவனித்து குறையைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

 2. ஆனாலும் ஒரு செண்டிமெண்ட் ..
  வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு
  திருமணம் ஆகவே இல்லை

  வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நிர்மலாவின் சொந்த ஊர் கும்பகோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக்மணி.

  பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்றத்தில் “ஜுரி”யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு “ஜுரி” என்று பெயர். செல்வாக்கு மிக்க செல்வந்தர்களை இப்பதவியில் நியமிப்பார்கள்.

  நிர்மலாவின் முன்னோர்கள் செல்வந்தர்கள். “அரண்மனைக்குடும்பம்” என்று பட்டப்பெயர் பெற்றவர்கள். நிர்மலாவின் குடும்பத்துக்கும், கலைத்துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிர்மலா சினிமாவில் சேர்ந்தது எதிர்பாராமல் நடந்தது.

  ஒருநாள் நிர்மலாவின் தந்தை ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆராய்வதற்காக மைசூரில் இருந்து வந்து கொண்டிருந்த வாசுதேவாச்சாரியார் என்பவரை சந்தித்தார். அவர் பரத நாட்டியம் பற்றி உயர்வாகப் பேசினார். “ராஜராஜசோழனே தன் மகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்தார்” என்று கூறினார்.

  இதனால், பாலகிருஷ்ணனுக்கு நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டது. நிர்மலாவுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இதை உறவினர்கள் எதிர்த்தனர். ஆனால், பாலகிருஷ்ணன் பின்வாங்கவில்லை. கும்பகோணம் சண்முகசுந்தரம்பிள்ளை என்ற நடனக் கலைஞரிடம் நிர்மலா நடனம் பயில ஏற்பாடு செய்தார்.

  நிர்மலாவின் 6-வது வயதில் அவரது நடன அரங்கேற்றம், கும்பகோணத்தில் நடைபெற்றது. பின்னர், சென்னையில் அவரது நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கூட்டம் வரவில்லை. இதனால் நிர்மலாவின் தந்தை வருத்தம் அடைந்தார்.

  “சினிமாவில் நடித்தால்தான் புகழ் பெறமுடியும். பெரிய கூட்டமும் வரும்” என்று சபாவைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். நிர்மலா, நடனத்தில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அப்போது வைஜயந்திமாலா நடத்தி வந்த “நாட்டியாலயா” என்ற நடனப்பள்ளியில், நிர்மலாவை அவர் தந்தை சேர்த்து விட்டார்.

  பண்டரிபாயை கதாநாயகியாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கவும் ஏற்பாடு செய்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் வரை செலவு செய்து, சில ஆயிரம் அடி வரை படத்தை எடுத்தார். ஆனால், “படம் எடுக்கக்கூடாது” என்று அண்ணன் எதிர்த்ததால், மேற்கொண்டு படத்தயாரிப்பைத் தொடராமல் பாதியில் கைவிட்டார், பாலகிருஷ்ணன்.

  இந்த சமயத்தில், முற்றிலும் புதுமுகங்களை வைத்து, “வெண்ணிற ஆடை” என்ற படத்தைத் தயாரிக்க டைரக்டர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பொருத்தமான புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தார்.

  பத்திரிகையாளர் நவீனன், வைஜயந்திமாலாவின் நடனப் பள்ளியில் நிர்மலாவைப் பார்த்தார். “இவ்வளவு அழகான பெண், சினிமாவில் நடித்தால் நிச்சயம் புகழ் பெறுவார்” என்று எண்ணினார். நிர்மலாவின் தந்தையை சந்தித்து, “டைரக்டர் ஸ்ரீதர், புதுமுகங்களை வைத்து ஒரு படம் தயாரிக்கப்போகிறார். நீங்கள் அவரை சந்தியுங்கள். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

  நிர்மலாவின் தந்தைக்கு, சினிமா என்றால் பிடிக்காது. எனினும், நிர்மலாவின் நடனத் திறமையை வெளிப்படுத்த சினிமா உதவும் என்று எண்ணினார். நிர்மலாவுடன் சென்று, ஸ்ரீதரை சந்தித்தார்.

  “மேக்கப்” டெஸ்ட்டில் நிர்மலா வெற்றி பெற்றார்.
  காதலிக்க நேரமில்லை படத்திற்கு புதுமுகம் தேடி கொண்டிருந்தார் ஸ்ரீதர் .அப்போது நடிகைகள் தேர்வு முடிந்து விட்டிருந்தது .எனவே அடுத்த படத்தில் சான்ஸ் தருகின்றேன் என்கிறார் . அடுத்த படம் தான் வெண்ணிற ஆடை படம் .இந்த படத்திலும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஸ்ரீதர் முதலில் சான்ஸ் கொடுக்கவில்லை .

  வட இந்திய சூப்பர் ,டூப்பர் ஸ்டார் ஹேமாமாலினி நடித்தார் .அவர் ஒல்லியாய் இருந்ததால் அந்த படத்தில் இருந்து தூக்கினார் . அப்புறம் அந்த வேடத்தில் அழகு மங்கையாய் நிர்மலா ஜொலித்தார்

  “வெண்ணிற ஆடை”யில் நிர்மலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1965-ம் ஆண்டு “வெண்ணிற ஆடை” வெளிவந்தது. இப்படத்தில்தான் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமானார்.

  அவருக்கு அடுத்த முக்கிய வேடம் நிர்மலாவுக்கு. மற்றும் ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரும் இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்கள். முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம், ஸ்ரீதர் டைரக்ட் செய்த படம் என்பதால் “வெண்ணிற ஆடை”பரபரப்பாக ஓடியது. நிர்மலாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்தன.

  “நிர்மலா” என்ற பெயர் பட உலகில் பலருக்கு இருந்ததால், `வெண்ணிற ஆடை’ நிர்மலா என்று குறிப்பிடப்பட்டார்.

  இதுபற்றி நிர்மலா கூறுகையில், “வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல். அதை உங்கள் பெயருக்கு முன் போடாதீர்கள் என்று பலர் கூறினார்கள். நானும், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடும்படி பட அதிபர்களிடம் கூறினேன். ஆனால், நிர்மலா என்று மட்டும் குறிப்பிடாமல் எந்த நிர்மலா என்று தெரியாது என்று கூறி, வெண்ணிற ஆடை என்று போட்டார்கள். அதுவே பிரபலமாகி விட்டது” என்று குறிப்பிட்டார்.

  ஆனாலும் ஒரு செண்டிமெண்ட் ..வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு திருமணம் ஆகவே இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s